Skip to main content

ரமணர் மேற்கோள் 39

ரமணர் மேற்கோள் 39

ரமணர் மேற்கோள் 39 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 196 தூக்கத்திலிருந்து விழித்த உடனேயே, உலகத்தை உணர்வதற்கு முன்னால், அந்த தூய ‘நான்-நான்’ உள்ளது. தூங்காமலும், எண்ணங்கள் உங்களை ஆட்கொள்ள விடாமலும், ‘அதை’ பிடித்துக் கொள்ளுங்கள். ‘அது’ உறுதியாகப் பிடித்துக் கொள்ளப் பட்டால், உலகம் காட்சியளித்தாலும் கூட பரவாயில்லை. காண்பவர் நிகழ்வுகளால் பாதிக்கப் படாமல் இருப்பார். 

ரமணர் மேற்கோள் 38

ரமணர் மேற்கோள் 38

ரமணர் மேற்கோள் 38 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 196 ‘நான்’ என்னும் உணர்வு ஒரு உருவுடன் இணைந்திருக்கிறது; ஒருவேளை உடலுடன். தூய ஆன்மாவுடன் எதுவும் இணைந்திருப்பதில்லை. ஆன்மா எதனுடனும் இணையாது உள்ள தூய உண்மை சுயநிலை. அதன் பிரகாசத்தில் தான், உடல், ‘நானுணர்வு’ முதலிய எல்லாம் ஒளிர்கின்றன. எண்ணங்களையெல்லாம் அசைவற்று நிறுத்திய பின், தூய சுய உணர்வு நிலை மட்டுமே எஞ்சி உறைகின்றது.

ரமணர் மேற்கோள் 37

ரமணர் மேற்கோள் 37

ரமணர் மேற்கோள் 37 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 பக்தர்: ‘நான்’ எப்போதும் – இங்கே, இப்போது உள்ளேன் என்றால், நான் ஏன் அதை உணரவில்லை? மகரிஷி: விஷயம் அது தான். அது உணரப்படவில்லை என்று யார் சொல்கிறது? உண்மையான ‘நான்’ சொல்கிறதா, அல்லது பொய்யான ‘நான்’ சொல்கிறதா? விசாரணை செய்யுங்கள்; அது பொய்யான ‘நான்’ என்று அறிவீர்கள். பொய்யான ‘நான்’ தான் தடங்கல். உண்மையான ‘நான்’ மறைக்கப்படாமல் இருப்பதற்கு, பொய்யான ‘நான்’ விலக்கப்பட வேண்டும். 

ரமணர் மேற்கோள் 36

ரமணர் மேற்கோள் 36

ரமணர் மேற்கோள் 36 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 நீங்கள் தவறான ‘நான்’ உணர்வை நீக்க வேண்டிய அவசியமில்லை. ‘நான்’ எப்படி தன்னையே நீக்க முடியும்? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அதன் மூலத்தைக் கண்டு பிடித்து, அதில் உறைய வேண்டும், அவ்வளவு தான். அவ்வளவு தூரம் தான் உங்கள் முயற்சிகள் செல்ல முடியும்.  அதற்குப் பிறகு, ‘கடந்து உள்ளது’, தானே கவனித்துக் கொள்ளும். அங்கு உங்கள் நிலை செயலற்றது, உதவியற்றது.  எந்த முயற்சியும்  ‘அதை’ அடைய […]

ரமணர் மேற்கோள் 35

ரமணர் மேற்கோள் 35

ரமணர் மேற்கோள் 35 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 ‘நான்’ என்பது எப்போதும் உள்ளது – ஆழ்ந்த தூக்கத்திலும், கனவிலும், விழிப்பிலும். தூக்கத்தில் உள்ளவரே தான் இப்போது பேசுபவரும். ‘நான்’ என்ற உணர்வு எப்போதும் உள்ளது. இல்லையெனில், உங்கள் உள்ளமையை நீங்கள் மறுக்கிறீர்களா? நீங்கள் மறுக்கவில்லை.  “நான் உள்ளேன்” என்று சொல்கிறீர்கள். யார் உள்ளது என்று கண்டுபிடியுங்கள். 

ரமணர் மேற்கோள் 34

ரமணர் மேற்கோள் 34

ரமணர் மேற்கோள் 34 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 24 ‘நான்-நான்’ உணர்வு எழவும், அதை உணரவும், எண்ணங்கள் முடிவுற வேண்டும், பகுத்தறிதலும் மறைய வேண்டும். உணர்தல் தான் பிரதானமான அம்சம், பகுத்தறிதல் அல்ல.

ரமணர் மேற்கோள் 33

ரமணர் மேற்கோள் 33

ரமணர் மேற்கோள் 33 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 268 பக்தர்: மெய்யான “நான்-நான்” என்னும் பரிபூரண ஆன்மா எது, ‘தான்’ என்னும் அகந்தையான நானுணர்வு எது, என்று எப்படி தெளிந்தறிந்துக் கொள்வது? ரமணர்: எழுந்து தோன்றி பின்பு வீழ்ந்து மறைவது நிலையற்ற ‘நான்’. துவக்கமும் முடிவும் இல்லாமல் உள்ளது நிலையான நிரந்தரமான “நான்-நான்” என்னும் சுய உணர்வு.

ரமணர் மேற்கோள் 32

ரமணர் மேற்கோள் 32

ரமணர் மேற்கோள் 32 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 220 பக்தர்: ஆழ்நிலை சிந்தனையை எப்படி ஆரம்பிப்பது? அதற்கு உங்கள் அருள் வேண்டும். ரமணர்: அருள் எப்போதும் இருக்கிறது.  அதிக உணர்ச்சி வசப்படாத சாந்தமான தன்மை, உண்மை அகநிலையை உணர்வது, ஆன்மாவில் உறைந்து இருப்பது, இவையெல்லாம் குருவின் அருளின்றி பெற முடியாது.  

ரமணர் மேற்கோள் 31

ரமணர் மேற்கோள் 31

ரமணர் மேற்கோள் 31 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 485 தியானம் (ஆழ்நிலை சிந்தனை), பக்தி (மனமொன்றிய ஈடுபாடு), ஜபம், முதலியவை பல்வகைப்பட்ட எண்ணங்களை வெளியேற்றி வைக்க உதவும் உறுதுணைகளாகும். இதனால் ஒரே ஒரு எண்ணம் மட்டும் நிலவுகிறது; அதுவும் முடிவில் ஆன்மாவினுள் கரைந்து விடுகிறது.

ரமணர் மேற்கோள் 30

ரமணர் மேற்கோள் 30

ரமணர் மேற்கோள் 30 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 485 ஒவ்வொரு முறை எண்ணங்கள் தொல்லைபடுத்தும் போதும் ஆன்மாவின் ஆழ்நிலையில் பின்வாங்குவதே அகநிலைச் சார்ந்த பயிற்சியாகும்.  அது மனதின் ஒருமுக சிந்தனையில்லை, மனதின் அழிவுமில்லை; ஆனால் ஆன்மாவினுள் பின்வாங்கிக் கொள்வது தான்.   

ரமணர் மேற்கோள் 29

ரமணர் மேற்கோள் 29

ரமணர் மேற்கோள் 29 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 377 பக்தர்: மக்கள், கடவுள் மெய்யல்ல என்று நிரூபிக்க பெருங்கேடுகளை – அதாவது பூகம்பம், பஞ்சம் போன்ற பேரழிவுகளை – மேற்கோள் காட்டுகின்றனர். அவர்களது வாதத்தை எப்படி கையாளுவது? மகரிஷி: இவ்வாறு வாதாடுபவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் ? பக்தர்: அவர்கள் “இயற்கை” என்று சொல்கிறார்கள். மகரிஷி: சிலர் அதை “இயற்கை” என்று சொல்கின்றனர், மற்றவர்கள் அதைக் “கடவுள்” என்று சொல்கின்றனர்.  

ரமணர் மேற்கோள் 28

ரமணர் மேற்கோள் 28

ரமணர் மேற்கோள் 28 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 264 கடவுள் மனிதரை உண்டாக்கினார்; மனிதர் கடவுளை உண்டாக்கினர். இவர்கள் இருவரும் தான் உருவங்களையும் பெயர்களையும் உண்டாக்கினவர்கள். உண்மையில் கடவுளோ அல்லது மனிதரோ உண்டாக்கப்படவேவில்லை.

 
↓
error: Content is protected !!