ரமணர் மேற்கோள் 87 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 92
You are browsing archives for
Category: ரமணரின் மேற்கோள்கள்
ரமணர் மேற்கோள் 86
ரமணர் மேற்கோள் 86 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 92 இடையறாத ‘நான் – நான்’ என்பது முடிவில்லாத பெருங்கடலாகும். ‘நான்’ எண்ணம் தான்மையாகும். இந்த எளிதான உண்மையை அறியாமல், யோகம், பக்தி, கர்மம் என்பது போன்ற கணக்கில்லாத வழி முறைகள், பக்தர்களை ஈர்த்து குழப்புவதற்காகவே கற்பிக்கப்படுகின்றன. அவை எல்லாம் எதற்காக உள்ளன? ஆன்மாவை அறிவதற்காகத் தான். அவை ஆன்மாவை அறிய உதவிகளும் பயிற்சிகளும் ஆகும்.
ரமணர் மேற்கோள் 85
ரமணர் மேற்கோள் 85 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 92 இடையறாத ‘நான் – நான்’ என்பது எல்லையற்ற முடிவில்லாத பெருங்கடலாகும். ‘தான்மை’, ‘நான்’ எண்ணம், அதில் ஒரு நீர்க்குமிழி ஆகும். அது ஜீவன், அதாவது, தனிப்பட்ட ஆன்மா என்று அழைக்கப் படுகிறது. நீர்க்குமிழியும் தண்ணீர் தான். அது தகர்ந்து போகும்போது பெருங்கடலில் தான் கலந்து போகிறது. அது நீர்க்குமிழியாக இருக்கும்போதும் அது பெருங்கடலின் ஒரு பகுதி தான்.
ரமணர் மேற்கோள் 84
ரமணர் மேற்கோள் 84 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 91 பக்தர்.: மனதின் வலிமை என்றால் என்ன பொருள்? மகரிஷி.: கவனம் சிதறாமல் ஒரே ஒரு எண்ணத்தின் மேல் ஒருமுக கவனம் செலுத்தும் திறன். பக்தர்.: அதை எப்படி அடைவது? மகரிஷி.: பயிற்சியினால். ஒரு பக்தர் கடவுளின் மீது ஆழ்ந்த சிந்தனை செய்வார்; ஞான மார்க்கத்தைப் பின்பற்றுபவர் ஆன்மாவை நாடுவார். இரண்டு விதங்களிலும் பயிற்சியின் கடினத்துவம் சமமானது தான்.
ரமணர் மேற்கோள் 83
ரமணர் மேற்கோள் 83 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 91 எண்ணங்களின் மூலமாக வலிமை சிதறுவதால் மனதில் சஞ்சலம் உண்டாகிறது. ஒருவர் மனதை ஒரே ஒரு எண்ணத்தின் மீது பொருந்த வைத்தால், சக்தி சேமிக்கப்படுகிறது. மனமும் வலிமை அடைகிறது.
ரமணர் மேற்கோள் 82
ரமணர் மேற்கோள் 82 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 91 பக்தர்.: நான் கடவுளைப் பற்றி நினைக்க உட்கார்ந்தால், எண்ணங்கள் மற்ற பொருட்களின் மேல் அலைகின்றன. நான் அந்த எண்ணங்களை கட்டுப் படுத்த விரும்புகிறேன். மகரிஷி.: மனதின் இயல்பு அலைவது தான் என்று பகவத் கீதையில் சொல்லப் பட்டிருக்கிறது. ஒருவர் தமது எண்ணங்களை கடவுள் மீது செலுத்த வைக்க வேண்டும். நீண்ட கால பயிற்சிக்குப் பின், மனம் கட்டுப்படுத்தப் பட்டு நிதானமாக்கப் படும். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: […]
ரமணர் மேற்கோள் 81
ரமணர் மேற்கோள் 81 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 81 பக்தர்: மனதை உலகத்திலிருந்து திருப்புவது எப்படி? மகரிஷி: உலகம் இருக்கிறதா? அதாவது ஆன்மாவை விட்டு அகன்று…? தான் இருப்பதாக உலகம் சொல்கிறதா? நீங்கள் தான் ஒரு உலகம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அது இருப்பதாகச் சொல்பவரைக் கண்டுபிடியுங்கள். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 80
ரமணர் மேற்கோள் 80 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 81 ‘நான் யார்?’ என்பது தான் மிகச் சிறந்த ஜபம். சுய சொரூப ஆன்மாவை விட உறுதியானது வேறென்ன இருக்க முடியும்? அது ஒவ்வொரு கணமும் ஒவ்வொருவரின் அனுபவத்திலும் இருக்கிறது. ஒருவர் ஏன் சுய சொரூபத்தை விட்டு விட்டு, வெளிப்புறத்தில் ஏதாவது ஒன்றைப் பிடிக்க முயல வேண்டும்? ஒவ்வொருவரும், தெரியாமல் அப்பால் இருக்கும் எதையோ தேடுவதற்கு பதிலாக, தெரிந்துள்ள ஆன்மாவைக் கண்டுபிடித்துக் கொள்ள முயலட்டும். […]
ரமணர் மேற்கோள் 79
ரமணர் மேற்கோள் 79 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 80 பக்தர்: ஒருவர் செயல்களில் ஈடுபடாமல் இடைவிடாமல் தியானம் செய்துக் கொண்டிருந்தால் என்ன? மகரிஷி: செய்துப் பாருங்கள். மனப்போக்குகள் உங்களை அப்படி செய்ய விடாது. படிப்படியாக, ஆசானின் அருளினால் மனப்போக்குகள் பலவீனமாவதால் தான் தியானம் செய்ய இயலும். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 78
ரமணர் மேற்கோள் 78 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 80 பக்தர்: நல்ல செயல்கள் செய்வது தியானத்திற்கு எப்படி உதவுகிறது? அது ஏற்கனவே சேர்ந்திருக்கும், நீக்கப்பட வேண்டிய பாரமான சுமையை அதிகரிக்கச் செய்யாதா? மகரிஷி: தன்னலமற்ற நல்ல செயல்கள் மனதைத் தூய்மையாக்கி, அதை தியானத்தின் மேல் பொருத்த உதவுகிறது. தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 77
ரமணர் மேற்கோள் 77 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 80 ஒவ்வொருவரும் நித்தியமான ஆன்மாவை உணர்கிறார். அவர் பல பேர் காலமாவதைக் காண்கிறார். பின்பும் தான் நித்தியமாக இருப்பதாக நம்புகிறார். ஏனெனில் அது தான் உண்மை. இயல்பான உண்மை தன்னையறியாமல் வலியுறுத்துகிறது. மனிதர் பிரக்ஞை உணர்வுள்ள ஆன்மாவுடன் தனது உணர்வில்லா உடலை கலந்துகொண்டிருப்பதால் தவறாகப் புரிந்துக் கொண்டிருக்கிறார். இந்தக் குழப்பம் முடிய வேண்டும். இந்தக் குழப்பம் தான்மையுடன் தான் உள்ளது. தான்மை எழுகிறது, மூழ்குகிறது. ஆனால் மெய்மை […]
ரமணர் மேற்கோள் 76
ரமணர் மேற்கோள் 76 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 78 பக்தர்: எங்களது தினசரி வாழ்க்கை சுய விசாரணை செய்யும் எத்தனங்களோடு சமரசப் படுவதில்லை. மகரிஷி: நீங்கள் செய்வினை செய்வதாக ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் இங்கு வந்ததை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருந்தபடி இருந்த போது, வாகனங்கள் தான் இயங்கின என்பது உண்மை இல்லையா? அந்த இயக்கங்களை உங்களுடையதாக குழப்பிக் கொண்டிருப்பது போல் தான், உங்களது மற்ற செயல்களும். அவை உங்களுடையவை இல்லை. அவை கடவுளின் […]