நான் யார் ? (23) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) 23. முமுக்ஷ க்களுக்கு நூற்படிப்பால் பிரயோஜன முண்டா ? எந்நூலிலும் முக்தி யடைவதற்கு மனத்தை யடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால், மனோ நிக்ரகமே நூல்களின் முடிவான கருத்து என் றறிந்துகொண்ட பின்பு நூல்களை யளவின்றிப் படிப்பதால் பயனில்லை. மனத்தை யடக்குவதற்குத் தன்னை யாரென்று தன்னுள் விசாரிக்க வேண்டுமே யல்லாமல், எப்படி நூல்களில் விசாரிப்பது? […]
You are browsing archives for
Category: நான் யார்
நான் யார் ? (22)
நான் யார் ? (22) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) 22. நனவிற்கும், கனவிற்கும் பேதமில்லையா? நனவு (ஜாக்ரம்) தீர்க்கம், அதாவது நீண்டது, கனவு (சொப்பனம்) க்ஷணிகம், அதாவது சுருக்கமானது, என்பது தவிர வேறு பேத மில்லை. ஜாக்ரத்தில் நடக்கும் விவகாரங்க ளெல்லாம் எவ்வளவு உண்மையாகத் தோன்றுகின்றனவோ, அவ்வளவு உண்மையாகவே சொப்பனத்தில் நடக்கும் விவகாரங்களும் அக்காலத்தில் தோன்றுகின்றன. சொப்பனத்தில் மனம் வேறொரு தேகத்தை […]
நான் யார் ? (20 – 21)
நான் யார் ? (20 – 21) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) 20. கடவுளாலும் குருவாலும் ஒரு ஜீவனை முக்தனாக்க முடியாதா? கடவுளும் குருவும் முக்தியை யடைவதற்கு வழியைக் காட்டுவார்களே யல்லாமல், தாமாகவே ஜீவர்களை முக்தியிற் சேர்க்கார். கடவுளும் குருவும் உண்மையில் வேறல்லர். புலி வாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவின் அருட் பார்வையிற் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரே யன்றி ஒருக்காலும் […]
நான் யார் ? (19)
நான் யார் ? (19) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) 19 வைராக்கியமாவது எது? எவ்வெந் நினைவுகள் உற்பத்தியாகின் றனவோ அவற்றை யெல்லாம் ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியமாம். முத்துக் குளிப்போர் தம்மிடையிற் கல்லைக் கட்டிக் கொண்டு மூழ்கிக் கடலடியிற் கிடைக்கும் முத்தை எப்படி எடுக்கிறார்களோ, அப்படியே ஒவ்வொருவனும் வைராக்கியத்துடன் தன்னுள்ளாழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தையடையலாம்.
நான் யார் ? (16 – 18)
நான் யார் ? (16 – 18) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) 16 சொரூபத்தின் இயல்பு என்ன? யதார்த்தமா யுள்ளது ஆத்ம சொரூப மொன்றே. ஜக, ஜீவ, ஈச்வரர்கள் சிப்பியில் வெள்ளிபோல் அதில் கற்பனைகள்; இவை மூன்றும் ஏக காலத்தில் தோன்றி, ஏக காலத்தில் மறைகின்றன. நான் என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத விடமே சொரூபமாகும். அதுவே மெளன மெனப்படும். […]
நான் யார் ? (13 – 15)
நான் யார் ? (13 – 15) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) விஷயவாசனை நினைவுகள் அளவற்றனவாய்க் கடலில் அலை போலத் தோன்றுகின்றனவே; அவைகளெல்லாம் எப்போது நீங்கும்? சொரூபத் தியானம் கிளம்பக் கிளம்ப நினைவு களெல்லாம் அழிந்துவிடும். தொன்று தொட்டு வருகின்ற சகல விஷய வாசனைகளும் ஒடுங்கி, சொரூபமாத்திரமாய் இருக்க முடியுமா? “முடியுமா, முடியாதா?” வென்கிற சந்தேக நினைவுக்கு மிடங் கொடாமல், […]
நான் யார்? (9 – 12)
நான் யார்? (9 – 12) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? (தொடர்ச்சி) மனதின் சொரூபத்தை விசாரித்தறியும் மார்க்கம் என்ன ? இந்த தேகத்தில் நான் என்று கிளம்புவதெதுவோ அதுவே மனமாம். நான் என்கிற நினைவு தேகத்தில் முதலில் எந்த விடத்தில் தோன்றுகிறதென்று விசாரித்தால், ஹ்ருதயத்தி லென்று தெரிய வரும். அதுவே மனதின் பிறப்பிடம். ‘நான், நான்’ என்று கருதிக் கொண்டிருந்தாலும் கூட […]
நான் யார்? (1 – 8)
நான் யார்? (1 – 8) ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நான் யார்? சகல ஜீவர்களும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் சுபாவமான அச்சுகத்தை யடையத் தன்னைத்தா னறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம். 1 நான் யார்? ஸப்த தாதுக்களாலாகிய […]
நான் யார் ? – முன்னுரை
நான் யார்? – முன்னுரை ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி (வினா-விடை வடிவம்) முன்னுரை பூமியின் ஹ்ருதயமும் நினைக்க முக்தி தரவல்லதுமான ஸ்ரீ அருணாசலத்தில் விரூபாக்ஷ குகையில் பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளது அருந்தவ மோனத்தால் அவர்பால் ஈர்க்கப்பெற்ற பக்தர்கள் பலருள் ஒருவரான சிவப்பிரகாசம் பிள்ளை என்னும் அன்பர் 1901, 1902-ல் மஹரிஷிகளை அணுகி, உண்மையை உணர்ந்தபடி தமக்குபதேசிக்கும்படி வினயத்துடன் வேண்டிக் கேட்ட வினாக்கட்கு, மஹர்ஷிகள் அவ்வப்போது தமிழில் விடை எழுதித் தந்த இந்நூல் பதிப்பிக்கப்பெற்று வெளியிடப்படுகின்றது. […]