Skip to main content

ரமணர் மேற்கோள் 51

ரமணர் மேற்கோள் 51

ரமணர் மேற்கோள் 51 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 பக்தர்.: மனதை எப்படி நீக்குவது? மகரிஷி: மனமா தன்னையே கொல்ல விரும்புகிறது? மனதால் தன்னையே கொல்ல முடியாது. எனவே உங்கள் விவகாரம் என்னவென்றால், மனதின் உண்மையான தன்மையைக் கண்டுபிடிப்பது தான். அதன் பிறகு, மனம் என்று ஒன்றில்லை என்று நீங்கள் அறிவீர்கள். சுயநிலை நாடி தேடப்பட்டால், மனம் எங்கும் இருப்பதில்லை. ஒருவர் சுய நிலையில் தங்கி உறைந்திருந்தால், மனதைப் பற்றிக் கவலைப்பட அவசியமில்லை.  

ரமணர் மேற்கோள் 50

ரமணர் மேற்கோள் 50

ரமணர் மேற்கோள் 50 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 மகரிஷி.: நமது உள்ளமையை ஒப்புக்கொண்டபின், ஏன் நாம் நமது ஆன்மாவை அறிந்துக்கொள்வதில்லை? பக்தர்.: எண்ணங்களால்; மனதால்.  மகரிஷி.: ஆமாம். மனம் தான் இடையில் நின்று நமது சந்தோஷத்தை மறைக்கிறது. நாம் இருக்கிறோம் என்று நாம் எப்படி அறிகிறோம்? ‘உலகம் நம்மைச் சுற்றி இருப்பதால்’ என்று நீங்கள் சொன்னால், தூக்கத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்று எப்படி அறிகிறீர்கள்?

ரமணர் மேற்கோள் 49

ரமணர் மேற்கோள் 49

ரமணர் மேற்கோள் 49 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 ஆன்ம ஞானம் ஏற்கனவே உள்ளது. எண்ணங்கள் இல்லாத நிலை ஒன்று தான் உண்மையான நிலை. ஆன்ம ஞானம் என்று ஒரு செயல் ஒன்றும் கிடையாது. ஆன்மாவை உணராதவர் யாராவது இருக்கிறாரா? தனது உள்ளமையை யாராவது மறுக்கிறாரா?

ரமணர் மேற்கோள் 48

ரமணர் மேற்கோள் 48

ரமணர் மேற்கோள் 48 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 நான் – எண்ணம் என்பது தான்மையாகும். உண்மையான ‘நான்’ என்பது ஆன்மாவாகும். 

ரமணர் மேற்கோள் 47

ரமணர் மேற்கோள் 47

ரமணர் மேற்கோள் 47 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 ஆன்மாவை நான் என்னும் தான்மையாகப் பார்த்தால், நாம் தான்மை ஆகிறோம். அதை மனமாகப் பார்த்தால், நாம் மனமாகிறோம். அதை உடலாகப் பார்த்தால், நாம் உடலாகிறோம். எண்ணம் தான் பலவிதத்தில் இத்தகைய உறைகளை உருவாக்குகிறது.

ரமணர் மேற்கோள் 46

ரமணர் மேற்கோள் 46

ரமணர் மேற்கோள் 46 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 146 உள்ளச் சமநிலை தான் பேரின்ப நிலையாகும். வேதங்களில், “நான் இது அல்லது அது” என்று உள்ள பிரகடனம், உள்ளச் சமநிலை பெறுவதற்காக உதவும் சகாயம் தான்.  

ரமணர் மேற்கோள் 45

ரமணர் மேற்கோள் 45

ரமணர் மேற்கோள் 45 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 இந்த ‘நான் – எண்ணம்’ எழும்பிய பிறகு தான், மற்ற எண்ணங்கள் எல்லாம் எழும்புகின்றன. எனவே, ‘நான் – எண்ணம்’ தான் ‘மூல – எண்ணம்’.  வேரை அடியோடு களைந்து எறிந்து விட்டால், அதே சமயத்தில் மற்றவை எல்லாமும் பிடுங்கப்படுகிறது. எனவே, ‘நான்’ என்பதன் மூலத்தை தேடுங்கள்; ‘நான் யார்?” என்று உங்களையே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்; அதன் மூலாதாரத்தைக் கண்டு பிடியுங்கள். பிறகு இவையெல்லாம் மறைந்து […]

ரமணர் மேற்கோள் 44

ரமணர் மேற்கோள் 44

ரமணர் மேற்கோள் 44 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 உலகம் உங்களிடம், “நான் உலகம்” என்று சொல்கிறதா? உடல், “நான் உடல்” என்று சொல்கிறதா? “இது உலகம்”, “இது உடல்” என்றெல்லாம் நீங்கள் தான் சொல்கிறீர்கள். இவையெல்லாம் உங்கள் கருத்துக்கள் மட்டுமே தான். நீங்கள் யார் என்று கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு உங்கள் சந்தேகங்களுக்கெல்லாம் ஒரு முடிவு வந்து விடும்.   

ரமணர் மேற்கோள் 43

ரமணர் மேற்கோள் 43

ரமணர் மேற்கோள் 43 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 பக்தர்: உலகம், மனிதர், கடவுள் – இவைகளின் இறுதி முடிவான உண்மைத் தன்மையை நாம் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டாமா? மகரிஷி: அவையெல்லாம் ‘நான்’ என்னும் தான்மையின் கருத்துக்கள். ‘நான்-எண்ணம்’ வந்த பின்னர் தான் அவை எழுகின்றன. ஆழ்ந்த தூக்கத்தில் அவற்றைப் பற்றி நினைக்கிறீர்களா? ஆழ்ந்த தூக்கத்தில் நீங்கள் இருந்தீர்கள்; இப்போது பேசும் நீங்களும் அவரே தான். அவையெல்லாம் உண்மையாக இருந்தால், அவை தூக்கத்திலும் இருக்க வேண்டாமா? அவையெல்லாம் […]

ரமணர் மேற்கோள் 42

ரமணர் மேற்கோள் 42

ரமணர் மேற்கோள் 42 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 பக்தர்: எப்போதும் “உள்ளமை-உணர்வு-பேரானந்தம்” என்று உள்ள போது, கடவுள் நம்மை ஏன் இன்னல்களில் பொருத்துகிறார்? நம்மை ஏன் உருவாக்குகிறார்? மகரிஷி: கடவுள் வந்து உங்களிடம், அவர் உங்களை இன்னல்களில் பொருத்தியிருப்பதாக சொன்னாரா? நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள். அது மீண்டும் தவறான ‘நான்’ தான். அது மறைந்து போய் விட்டால், கடவுள் இதை உருவாக்கினார், அதை உருவாக்கினார் என்று சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள்.

ரமணர் மேற்கோள் 41

ரமணர் மேற்கோள் 41 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 197 ‘பேரானந்தம்’, ‘உள்ளமை-சுய உணர்வு’, இவை ஒரே சமயத்தில் உள்ளன. அந்த பேரானந்தத்தைக் கொண்ட நிலையான ஆன்மாவைப் பற்றிய வாதங்கள் யாவும், பேரானந்தத்தையும் பொருந்துகின்றன. உமது இயல்பு பேரானந்தம். அறியாமை இப்போது அந்த பேரானந்தத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. பேரானந்தத்தை விடுவிக்க அறியாமையை அகற்றுங்கள்.  

ரமணர் மேற்கோள் 40

ரமணர் மேற்கோள் 40

ரமணர் மேற்கோள் 40 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 196 பக்தர்: ‘நான்’ எங்கே உள்ளது என்று தேடினால், காண்பதற்கு ஒன்றுமே இல்லையே. மகரிஷி: உங்களை உடலுடனும், பார்வையைக் கண்களுடனும் இணைத்து வைத்து பழக்கமாகியிருப்பதால், ஒன்றுமே காணவில்லை என்று சொல்கிறீர்கள். பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? பார்க்க யார் இருக்கிறார்? எப்படிப் பார்ப்பது? ஒரே ஒரு ஆன்மா தான் உள்ளது; அது ‘நான்-என்னும்-எண்ணம்’ மூலமாக வெளிப்பட்டு, உடலுடன் இணைந்துக் கொள்கிறது; கண்கள் மூலமாக தன்னை காட்சிப்படுத்துகிறது; சுற்றுப்புறத்தில் உள்ள […]

 
↓
error: Content is protected !!