Skip to main content

ரமணர் மேற்கோள் 63

ரமணர் மேற்கோள் 63

ரமணர் மேற்கோள் 63 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 மனம் உள்ளதா இல்லையா என்ற விசாரண செய்தால், மனம் என்று ஒன்று இல்லை என்று தெரிய வரும். அது தான் மனக் கட்டுப்பாடு. இல்லையென்றால், மனம் உள்ளது என்று நம்பிக்கொண்டு ஒருவர் அதை கட்டுப்படுத்த முயன்றால், அது மனமே மனதைக் கட்டுப்படுத்துவதற்கு இணையாகும். அது, ஒரு திருடன் தானே போலீஸ்காரனாக மாறி, பின் திருடனை, அதாவது தன்னையே, பிடிக்க முயல்வது போன்றதாகும். மனம் இந்த விதத்தில் […]

ரமணர் மேற்கோள் 62

ரமணர் மேற்கோள் 62

ரமணர் மேற்கோள் 62 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 பக்தர்.: நாங்கள் உலக வாழ்வைச் சார்ந்தவர்கள். மனைவி, குழந்தைகள், நண்பர், உறவினர் – இவர்கள் இருக்கின்றனர். அவர்கள் இருப்பதை புறக்கணித்து விட்டு, எங்களுக்குள் சிறிதளவு தான்மையை வைத்துக் கொள்ளாமல், தெய்வத்தின் விருப்புக்கு எங்களை ஒப்படைத்துக் கொள்ள முடியாது. மகரிஷி.: இதன் பொருள் என்னெவென்றால், நீங்கள் அறிவித்தபடி நீங்கள் சரணடையவில்லை. நீங்கள் கடவுளை மட்டுமே தான் நம்ப வேண்டும்.  தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா 

ரமணர் மேற்கோள் 61

ரமணர் மேற்கோள் 61

ரமணர் மேற்கோள் 61 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 பக்தர்.: உலகத்தைச் சார்ந்த மனிதராகிய எங்களுக்கு, ஏதாவது ஒரு துயரம் இருந்து வருகிறது.  எங்களுக்கு அதிலிருந்து மீளத் தெரிவதில்லை. கடவுளை வணங்குகிறோம். பின்பும் திருப்திபடுவதில்லை. நாங்கள் என்ன செய்வது?  மகரிஷி.: கடவுளை நம்புங்கள். பக்தர்.: நாங்கள் சரணடைகிறோம். ஆனாலும் உதவி கிடைப்பதில்லை.  மகரிஷி.: ஆமாம். நீங்கள் சரணடைந்திருந்தால், கடவுளின் விருப்பப்படி நடந்துக்கொள்ள உங்களால் முடிய வேண்டும். உங்களை மகிழ்விக்காதவற்றைப் பற்றி குறை சொல்லக்கூடாது. விஷயங்கள், தோன்றும் […]

ரமணர் மேற்கோள் 60

ரமணர் மேற்கோள் 60

ரமணர் மேற்கோள் 60 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 43 உலகைச் சார்ந்த மனிதர்களில், இருப்பதற்குள் மிகவும் வெற்றிகரமானவரை, அவர் தமது சுய சொரூபத்தை அறிந்திருக்கிறாரா என்று கேளுங்கள். அவர் “இல்லை” என்று பதில் சொல்வார். தன் சுய சொரூபத்தை அறியாமல்,  மற்ற எதையும் எப்படி ஒருவர் அறிய முடியும்?  

ரமணர் மேற்கோள் 59

ரமணர் மேற்கோள் 59

ரமணர் மேற்கோள் 59 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 222 ‘நான்-எண்ணம்’ என்பதன் மூலாதாரத்தைத் தேடுங்கள். அது மட்டுமே தான் ஒருவர் செய்ய வேண்டும்.  பிரபஞ்சமே ‘நான்-எண்ணாத்தால்’ தான் இருக்கிறது. அது முடிவடைந்தால், துன்பத்திற்கும் முடிவு வருகிறது. மூலாதாரத்தைத் தேடி கண்டுபிடித்தால் தான் ‘பொய்யான-நான்’ முடிவடையும். 

ரமணர் மேற்கோள் 58

ரமணர் மேற்கோள் 58

ரமணர் மேற்கோள் 58 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 118 நிஷ்காம கர்மா (தன்னலமற்ற காரியம்) என்றால் என்ன? வேலூரில் உள்ள ஊர்ஹீஸ் கல்லூரியின் தெலுங்கு பண்டிதர், திரு ரங்காச்சாரி, நிஷ்காம கர்மாவைப் பற்றி கேட்டார். பதில் ஒன்றும் அளிக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து, பகவான் மலையின் மீது சென்றார்; பண்டிதர் உள்பட சிலர் அவரைப் பின் தொடர்ந்தனர். வழியில் மிகுந்த முட்கள் கொண்ட ஒரு தடியை பகவான் எடுத்துக் கொண்டார். உட்கார்ந்து, மெதுவாக அதன் மீது […]

ரமணர் மேற்கோள் 57

ரமணர் மேற்கோள் 57

ரமணர் மேற்கோள் 57 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 453 சரி, தவறு, இவை என்ன? ஒரு விஷயத்தை சரியானது என்றோ தவறானது என்றோ மதிப்பிட ஒரு நியமம் ஏதும் கிடையாது. அவரவரது இயல்பின்படியும், சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறும், அபிப்ராயங்கள் வித்தியாசப் படுகின்றன. அவை கருத்துக்களே தவிர வேறொன்றுமில்லை. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் எண்ணங்களை நீக்கி விடுங்கள். நீங்கள் எப்போதும் சரியான முறையில் இருந்து வந்தால், உலகத்திலும் சரியானது நிலவும்.  

ரமணர் மேற்கோள் 56

ரமணர் மேற்கோள் 56

ரமணர் மேற்கோள் 56 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 619 ஆன்மாவைத் தவிர்த்தவை, பேரின்பத்தைத் தவிர்த்தவையை, அல்லது துயரத்தை ஒத்ததாகும். மூலாதார பேரின்பம் ஆன்மாவைத் தவிர்த்தவையால் மறைக்கப் படுகிறது. துக்க நாசம் = சுகப் பிராப்தி. அதாவது துன்பத்தை இழப்பது, இன்பத்தைப் பெறுவதாக மதிப்பிடப்படுகிறது. துன்பத்துடன் கலந்த இன்பம், துன்பம் தான். துயரம் அகற்றப்படும்போது, எப்போதும் உள்ள பேரின்பம் பெறப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. துன்பத்தில் முடியும் இன்பம், துன்பம் தான்.   

ரமணர் மேற்கோள் 55

ரமணர் மேற்கோள் 55

ரமணர் மேற்கோள் 55 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 619 சந்தோஷம் மனிதருக்கு இயல்பாக இருப்பதால், அவர் சந்தோஷத்தை விரும்புகிறார். அது இயல்பானதாக இருப்பதால், அது பெறப்படுப்பவதில்லை. மனிதரின் முயற்சிகள் துன்பத்தை அகற்றுவதற்காகத் தான் இருக்க முடியும். அது செய்யப்பட்டால், எப்போதும் உள்ள பரிபூரண இன்பம் உணரப்படுகிறது.  

ரமணர் மேற்கோள் 54

ரமணர் மேற்கோள் 54

ரமணர் மேற்கோள் 54 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 619 சந்தோஷப்படுவதற்காக உள்ள ஆசை (சுகப் பிரேமை), ஆன்ம சுயநிலையின் எப்போதும் உள்ள சந்தோஷமாகும். இல்லையென்றால், அதற்காக ஆசை உமக்குள் ஏன் எழ வேண்டும்? மனிதர்களுக்கு தலைவலி இயல்பாக இருந்தால், அதை அகற்றி விட யாரும் முயலமாட்டார்கள். ஆனால், தலைவலி கொண்ட ஒவ்வொருவரும் அதை அகற்ற முயல்கிறார். ஏனெனில், அது இல்லாத ஒரு சமயத்தை அவர் உணர்ந்திருக்கிறார். அவருக்கு இயல்பாக இருப்பதைத் தான் அவர் விரும்புகிறார். அதே […]

ரமணர் மேற்கோள் 53

ரமணர் மேற்கோள் 53

ரமணர் மேற்கோள் 53 திரு ரமண மகரிஷி நான் யார்? கேள்வி 16 ஆன்மா என்பதில் “நான்” எண்ணம் முற்றிலும் இருக்காது. அதற்கு “மௌனம்” என்று பெயர். ஆன்மாவே தான் உலகம்; ஆன்மாவே தான் “நான்”; ஆன்மாவே தான் கடவுளும்; எல்லாம் ஆன்மா என்ற சிவம் தான்.  

ரமணர் மேற்கோள் 52

ரமணர் மேற்கோள் 52

ரமணர் மேற்கோள் 52 திரு ரமண மகரிஷி நான் யார்? கேள்வி 18 கடவுள் மீது எந்த சுமைகளை வீசினாலும், அவர் அவற்றைத் தாங்கிகொள்கிறார். உச்ச உயர்வான கடவுளின் சக்தி எல்லா பொருள்களையும் இயக்குவதால், அதனிடம் நம்மை சமர்ப்பிக்காமல், நாம் ஏன் எப்போதும், என்ன செய்வது, எப்படி செய்வது, என்ன செய்யக்கூடாது, எப்படி செய்யக்கூடாது, என்ற எண்ணங்களுடன் கவலைப்பட வேண்டும்? 

 
↓
error: Content is protected !!