
ரமணர் மேற்கோள் 54
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 619
சந்தோஷப்படுவதற்காக உள்ள ஆசை (சுகப் பிரேமை), ஆன்ம சுயநிலையின் எப்போதும் உள்ள சந்தோஷமாகும். இல்லையென்றால், அதற்காக ஆசை உமக்குள் ஏன் எழ வேண்டும்? மனிதர்களுக்கு தலைவலி இயல்பாக இருந்தால், அதை அகற்றி விட யாரும் முயலமாட்டார்கள். ஆனால், தலைவலி கொண்ட ஒவ்வொருவரும் அதை அகற்ற முயல்கிறார். ஏனெனில், அது இல்லாத ஒரு சமயத்தை அவர் உணர்ந்திருக்கிறார். அவருக்கு இயல்பாக இருப்பதைத் தான் அவர் விரும்புகிறார். அதே போல், அவருக்கு சந்தோஷம் இயல்பாக இருப்பதால் சந்தோஷத்தை விரும்புகிறார்.
ரமணர் மேற்கோள் 54