ரமணர் மேற்கோள் 75 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 68 எப்போதும் நீங்கள் என் முன்னிலையில் இருப்பதாக எண்ணுங்கள். அது உங்களை சரியாக உணரச் செய்யும். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
You are browsing archives for
Category: ரமணரின் மேற்கோள்கள்
ரமணர் மேற்கோள் 74
ரமணர் மேற்கோள் 74 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 68 பெண்மணி: தியானத்தையும் பணிகளையும் சமரசப் படுத்துவது எப்படி? மகரிஷி: பணி செய்பவர் யார்? யார் பணிகள் செய்கிறாரோ, அவர் இந்தக் கேள்வியைக் கேட்கட்டும். நீங்கள் எப்போதும் சுய சொரூப ஆன்மா தான். நீங்கள் மனம் இல்லை. மனம் தான் இந்தக் கேள்விகளை எழுப்புகிறது. வேலை எப்போதும் ஆன்மாவின் முன்னிலையில் தான் நடைபெறுகிறது. ஆன்ம ஞானத்திற்கு வேலை தடங்கல் இல்லை. வேலை செய்பவர் யார் என்ற தவறான […]
ரமணர் மேற்கோள் 73
ரமணர் மேற்கோள் 73 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 68 பெண்மணி: தியானம் செய்வது எப்படி? மகரிஷி: எண்ணங்களின்றி இருங்கள். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 72
ரமணர் மேற்கோள் 72 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 67 “நான் யார்” என்னும் சுய விசாரணையின் பொருள் என்னவென்றால், “நான்” என்பதன் மூலாதாரத்தைக் கண்டுபிடிப்பது தான். அது கண்டுபிடிக்கப்பட்டால், நீங்கள் நாடி தேடுவது பூர்த்தி அடைந்து விடும். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 71
ரமணர் மேற்கோள் 71 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 64 விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்ற நிலைகளில் இருப்பது போல், உடல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒருவரின் உள்ளமை இருப்பது தெளிவாகிறது. பிறகு ஒருவர் ஏன் உடல் சார்ந்த விலங்குகளின் தொடர்ச்சியை விரும்ப வேண்டும்? ஒரு மனிதர் தமது இறவா சுய சொரூபத்தை கண்டுபிடிக்கட்டும்; இறப்பற்ற சிரஞ்சீவியாக, சந்தோஷமாக இருக்கட்டும். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 70
ரமணர் மேற்கோள் 70 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 63 தூக்கத்தில் உலகம் இல்லை, “தான்மை” (வரையறுக்கப்பட்ட நான்) இல்லை, தொல்லையும் இல்லை. ஏதோ ஒன்று அந்த சந்தோஷமான நிலையிலிருந்து எழுந்து, “நான்” என்று சொல்கிறது. அந்த “தான்மைக்கு” உலகம் தோன்றுகிறது. உலகத்தில் ஒரு புள்ளியாக இருந்துக்கொண்டு மனிதன் இன்னும் அதிகமாக விரும்பி இன்னல் படுகிறான். தான்மை எழுவதற்கு முன்னால் எவ்வளவு சந்தோஷமாக இருந்தான்! தான்மை எழுவது மட்டுமே இந்த தற்போதைய தொல்லைக்கு காரணம். தான்மையின் மூலத்தை […]
ரமணர் மேற்கோள் 69
ரமணர் மேற்கோள் 69 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 63 கோயில் கோபுரத்தில் உள்ள ஒரு வடிவம், கோபுரத்தின் சுமையை தன் தோள்களில் தாங்கிக் கொள்வது போல தோன்றும்படி அமைக்கப்பட்டுள்ளது. அதன் தோற்றப்பாங்கும் தோற்றமும், அது கோபுரத்தின் கனமான சுமையைத் தூக்கிக்கொண்டு சிரமப்படுவது போல் காட்சியளிக்கிறது. ஆனால் யோசித்துப் பாருங்கள். கோபுரம் தரையின் மீது கட்டப்பட்டுள்ளது. அது அதன் அடித்தளத்தின் மீது அமர்ந்துள்ளது. கோபுரத்தின் மீதுள்ள வடிவம் கோபுரத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் அது கோபுரத்தையே தாங்குவது […]
ரமணர் மேற்கோள் 68
ரமணர் மேற்கோள் 68 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 63 தற்போதைய கஷ்டம் என்னவென்றால், ஒரு மனிதர் தாம் தான் வினையாற்றுபவர் என்று நினைக்கிறார். ஆனால் அது தவறு. உயர்ந்த சக்தி தான் எல்லாவற்றையும் செய்கிறது. மனிதர் ஒரு கருவி தான். மனிதர் இந்த நிலையை ஏற்றுக் கொண்டால், அவர் இன்னல்களின்றி இருக்கிறார். இல்லையெனில், அவர் அவற்றுடன் உறவாடுகிறார். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 67
ரமணர் மேற்கோள் 67 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 63 உயர்ந்த பதவியில் உள்ள ஒரு அதிகாரி கேட்டார் : பிந்திய தாழ்ந்த பதவியில் உள்ளவர்களுக்கு தன்னை விட அதிக பதவி உயர்வு கொடுக்கப்பட்டால், மனம் மிகவும் தவிக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில், ‘நான் யார்?’ என்ற விசாரணையால் இந்த மனிதரின் மனதை சாந்தப்படுத்த முடியுமா? மகரிஷி: ஆமாம். நிச்சயமாக. ‘நான் யார்?’ என்ற விசாரணை மனதை உட்புறம் திருப்பி அதை அமைதியாக்கும். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 66
ரமணர் மேற்கோள் 66 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 319 விளைவைப் பற்றி கவலைப்படாமல் செயல்களைச் செய்யுங்கள். நீங்கள் செய்வதாக நினக்காதீர்கள். வேலையை கடவுளுக்கு அர்ப்பணித்து விடுங்கள். அது தான் செயல்திறன்; அதைப் பெறும் வழிமுறையும் கூட. தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 65
ரமணர் மேற்கோள் 65 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 58 சுய சொரூபத்தில் உறைந்திருந்து, “நான் செய்கிறேன்” என்ற தான்மை உணர்வு இல்லாமல், மன தன்மையின்படி செயல்படுங்கள். இவ்வாறு செய்தால், செயல்களின் விளைவுகள் உங்களை பாதிக்காது. இது தான் துணிவு, வீரம். தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 64
ரமணர் மேற்கோள் 64 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 45 பக்தர்.: பகவானுடன் ஒரு நாள் இருந்தால் நல்லது; இரண்டு நாட்கள் இருந்தால் மேலும் நல்லது; மூன்று நாட்கள், இன்னும் சில கூட, இப்படியே. தொடர்ந்து இங்கேயே இருந்தால், எங்களுடைய உலகம் சார்ந்த பணிகளை எப்படி கவனிப்பது? மகரிஷி.: இங்கே இருப்பதும், மற்ற இடங்களில் இருப்பதும் ஒன்றே தான் என்றும், இங்கேயும் மற்ற இடங்களிலும் அதே விளைவு தான் உண்டாகும் என்பதும் புரிந்துக் கொள்ளப் பட வேண்டும். […]