ரமணர் மேற்கோள் 42
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 197
பக்தர்: எப்போதும் “உள்ளமை-உணர்வு-பேரானந்தம்” என்று உள்ள போது, கடவுள் நம்மை ஏன் இன்னல்களில் பொருத்துகிறார்? நம்மை ஏன் உருவாக்குகிறார்?
மகரிஷி: கடவுள் வந்து உங்களிடம், அவர் உங்களை இன்னல்களில் பொருத்தியிருப்பதாக சொன்னாரா? நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள். அது மீண்டும் தவறான ‘நான்’ தான். அது மறைந்து போய் விட்டால், கடவுள் இதை உருவாக்கினார், அதை உருவாக்கினார் என்று சொல்ல யாரும் இருக்க மாட்டார்கள்.
ரமணர் மேற்கோள் 42