ரமணர் மேற்கோள் 85
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 92
இடையறாத ‘நான் – நான்’ என்பது எல்லையற்ற முடிவில்லாத பெருங்கடலாகும். ‘தான்மை’, ‘நான்’ எண்ணம், அதில் ஒரு நீர்க்குமிழி ஆகும். அது ஜீவன், அதாவது, தனிப்பட்ட ஆன்மா என்று அழைக்கப் படுகிறது. நீர்க்குமிழியும் தண்ணீர் தான். அது தகர்ந்து போகும்போது பெருங்கடலில் தான் கலந்து போகிறது. அது நீர்க்குமிழியாக இருக்கும்போதும் அது பெருங்கடலின் ஒரு பகுதி தான்.
ரமணர் மேற்கோள் 85