ரமணர் மேற்கோள் 84
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 91
பக்தர்.: மனதின் வலிமை என்றால் என்ன பொருள்?
மகரிஷி.: கவனம் சிதறாமல் ஒரே ஒரு எண்ணத்தின் மேல் ஒருமுக கவனம் செலுத்தும் திறன்.பக்தர்.: அதை எப்படி அடைவது?
மகரிஷி.: பயிற்சியினால். ஒரு பக்தர் கடவுளின் மீது ஆழ்ந்த சிந்தனை செய்வார்; ஞான மார்க்கத்தைப் பின்பற்றுபவர் ஆன்மாவை நாடுவார். இரண்டு விதங்களிலும் பயிற்சியின் கடினத்துவம் சமமானது தான்.
ரமணர் மேற்கோள் 84