ரமணர் மேற்கோள் 77
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 80
ஒவ்வொருவரும் நித்தியமான ஆன்மாவை உணர்கிறார். அவர் பல பேர் காலமாவதைக் காண்கிறார். பின்பும் தான் நித்தியமாக இருப்பதாக நம்புகிறார். ஏனெனில் அது தான் உண்மை. இயல்பான உண்மை தன்னையறியாமல் வலியுறுத்துகிறது. மனிதர் பிரக்ஞை உணர்வுள்ள ஆன்மாவுடன் தனது உணர்வில்லா உடலை கலந்துகொண்டிருப்பதால் தவறாகப் புரிந்துக் கொண்டிருக்கிறார். இந்தக் குழப்பம் முடிய வேண்டும்.
இந்தக் குழப்பம் தான்மையுடன் தான் உள்ளது. தான்மை எழுகிறது, மூழ்குகிறது. ஆனால் மெய்மை எழுவதும் இல்லை, மூழ்குவதும் இல்லை. அது நித்தியமாக உறைகிறது. இதை உணர்ந்து அறிந்த ஞானி அப்படி சொல்கிறார். பக்தர் கேட்கிறார், சொற்களைப் பற்றி சிந்திக்கிறார், பிறகு ஆன்மாவை அறிகிறார்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 77