Skip to main content

30. “நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொ

Why do you say you are a sinner

“நான் ஒரு பாவி” என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் திரு நடேச அய்யர், தமிழ் நாட்டின் ஒரு நகரத்தில் வழக்கறிஞர்களின் தலைவர், மகரிஷியைக் கேட்டார்: “ஈஸ்வரர் அல்லது விஷ்ணு, அவர்களது புனித க்ஷேத்திரங்களான கைலாசம், வைகுண்டம், இவையெல்லாம் மெய்யானவையா?  மகரிஷி.: நீங்கள் இந்த உடலில் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை.  பக்தர்.: என் உடல் போல், அவர்களுக்கு ஒரு நிகழ்வு சார்ந்த, வியவகார உள்ளமை இருக்கிறதா? அல்லது அவர்கள் முயலின் கொம்பு போல் […]

29. தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்ற

Divine grace and personal effort go together

தெய்வீக அருளும் சுய முயற்சியும் ஒன்றாகச் செல்கின்றன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஒரு சமயம், மாலைப் பொழுது அமைதியாகவும் மேகமூட்டமாகவும் இருந்தது. சிறிதளவு தூறல் போட்டுக்கொண்டிருந்தது. அதனால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. ஆஸ்ரம கூடத்தின் சன்னல்கள் மூடப்பட்டிருந்தன. மகரிஷி வழக்கம் போல் ஸோபாவின் மேல் அமர்ந்திருந்தார். அவரெதிரில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். சில வருகையாளர்கள் கடலூரிலிருந்து வந்திருந்தனர். பக்தர்களில் ஒரு துணை நீதிபதியும், அவருடன் இருந்த இரண்டு வயதான பெண்டிரும் இருந்தனர். துணை நீதிபதி உரையாடலைத் துவங்கினார். உலகஞ்சார்ந்த […]

28 D. சந்தோஷம் நமது உண்மைத் தன்மை

Happiness our real nature

சந்தோஷம் தான் நமது உண்மைத் தன்மை ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்.: எந்த விதத்தில் சந்தோஷம் நமது உண்மைத் தன்மை? மகரிஷி.: பூரண பேரானந்தம் தான் பிரம்மன் (ஆன்ம சொரூபம்). பூரண அமைதி உண்மை சொரூபத்தினுடையது தான். ‘அது’ மட்டுமே உள்ளது, உணர்கிறது. உடலுக்கு அப்பால் சார்ந்ததை மதிப்பிட்டாலும், பக்தி மார்க்கத்தில் ஊகித்து உய்த்துணர்ந்தாலும், இதே தீர்மானம் தான் அடையப்படுகிறது. நாம் பேரானந்தத்திற்காக கடவுளை வணங்கி, அருளினால் அதைப் பெறுகிறோம். பேரானந்தத்தை வழங்குபவர் பேரானந்தமாகவே தான் இருக்க […]

28 C. சுய இச்சையும் கடவுளின் சர்வ வல்லமை

Free will and might of almighty

சுய இச்சையும் கடவுளின் சர்வ வல்லமையும்   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் பக்தர்.: என்னுடைய சுயேச்சையான மனத்திட்பத்திற்கும், நம்மை திணரடிக்கிற எல்லாம் வல்ல கடவுளின் சல்ல வல்லமைக்கும் என்ன உறவு?  (1) கடவுளின் ‘எல்லாம் அறியும் தன்மை’, தான்மையின் சுயேச்சைக்கு இசைவானதா? (2) கடவுளின் ‘அனந்தவீரியம்’, தான்மையின் சுயேச்சைக்கு இசைவானதா?  (3) இயற்கையின் விதிகள், கடவுளின் சுயேச்சைக்கு இசைவானதா? மகரிஷி.: ஆமாம். தற்காலம், ஒரு வரம்புக்குட்பட்ட மனத்திறனின் பார்வைக்கும் மனத்திட்பத்திற்கும் காட்சியளிப்பது தான் சுய இச்சையாகும். அதே […]

28 B. மெய்மையின் தன்மை என்ன

Nature of Reality

மெய்மையின் தன்மை என்ன பக்தர்.: மெய்மையின் தன்மை என்ன? மகரிஷி.: (1) தொடக்கமும் முடிவும் இல்லாத, சாசுவத நித்திய உள்ளமை. (2) முடிவற்ற, எல்லையற்ற, எங்கும் நிறைந்திருக்கும் உள்ளமை. (3) எல்லா உருவங்களுக்கும், மாறுதல்களுக்கும், சக்திகளுக்கும், பொருட்களுக்கும், ஆன்மாவிற்கும் அடிப்படையான உள்ளமை. பலவானவை மாறலாம், கடந்து செல்லலாம் (தோற்றப்பாடுகள்); ஆனால் “ஒன்று” எப்போதும் தாங்கி நிலைத்து நிற்கும் (புலன்களால் அன்றி, அக நிலையால் உணரப்படும் நிகழ்வு). (4) அறிபவர், அறியப்படும் அறிவு, அறியப்படுபவை – இந்த மூன்றையும் கொண்ட தொகுதியை இடமாற்றும் “ஒன்று”. […]

28 A. உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோ

Realizing the Real is the Goal

உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள் பக்தர்.: எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதற்கும் மூச்சை ஒழுங்கு படுத்துவதற்கும் இடையே உள்ள உறவு என்ன? மகரிஷி.: (அறிவு சார்ந்த) எண்ணமும், சுவாசம், சுற்றோட்டம் முதலிய (தாவர) நடவடிக்கைகளும், ஒரே ஒன்றின் இரண்டு அம்சங்கள் – தனிப்பட்ட உயிர். இரண்டும் உயிரின் மேல் சார்ந்துள்ளன (உயிரில் உறைகின்றன). உயிர் நிலையான நடவடிக்கை போல் தனித்தன்மையும் மற்ற கருத்துக்களும் அதிலிருந்து எழுகின்றன. சுவாசம் அல்லது மற்ற உயிர் நிலையான நடவடிக்கை பலவந்தமாக அடக்கப்படும்போது, எண்ணமும் […]

27. மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது

How to practice mind control methods

மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி பக்தர்.: மனதைக் கட்டுப்படுத்துவதன் பயிற்சிகள் எப்படி செய்யப்படுகின்றன? மகரிஷி.: வெளிப்புற தோற்றப்பாடுகளின் மாறிக்கொண்டே இருக்கின்ற, நிலையற்ற தன்மையை ஆராய்ந்து பார்ப்பது, வைராக்கியத்திற்கு வழிவகுக்கிறது. எனவே விசாரணை தான் முதலாவதும் மிக முக்கியமானதுமான நிலைப்படியாகும். விசாரணை தானாவே தொடரும்போது, அதனால் செல்வம், புகழ், சுகம், இன்பம் போன்றவற்றின் மேல் வெறுப்பு உண்டாகிறது. “நான்” என்னும் எண்ணம் ஆராய்வதற்கு மேலும் தெளிவாகிறது. “நான்” என்பதன் மூலாதாரம், இறுதியான குறிக்கோள், இதயம் ஆகும். ஆனால், அதை நாடும் பக்தர், தமது உளற்பாங்கின்படி, உள்முக பகுப்பாய்வு சார்ந்த விசார மார்க்கத்திற்குப் […]

26. மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி

How to discover the nature of mind

மனதின் தன்மையை கண்டுபிடிப்பது எப்படி பக்தர்: மனதின் தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி? அதாவது, மனதின் இறுதியான, அடிப்படையான காரணம், அல்லது அதன் வெளிப்பாட்டுக்கு அடிப்படையான நிலை, அதை எப்படி கண்டுபிடிப்பது?  மகரிஷி: எண்ணங்களை, அவற்றின் முக்கியத்துவத்தின்படி வரிசைப்படுத்தினால், ‘நான் – எண்ணம்’ தான் எல்லாவற்றிலும் முக்கியமான எண்ணம். ஒவ்வொரு கருத்தும், எண்ணமும், ஒருவரின் எண்ணமாகவே எழுவதாலும், அது தான்மை உணர்வை விட்டு சார்பின்றி தனியாக விளங்காததாலும், ‘ஒரு மனிதரின் தனித் தன்மை’ (Personality-idea) அல்லது எண்ணம் தான் மற்ற எல்லா […]

25 B. மனம் என்பது என்ன

What is this Mind

மனம் என்பது என்ன ரமண மகரிஷியின் மீது எழுதிய “ஆன்ம ஞானம்” (Self-Realization) என்ற நூலின் ஆசிரியர், திரு பி. வி. நரஸிம்மஸ்வாமி தொடர்ந்து கேட்டார்: பக்தர்: மனமென்றால் என்ன? மகரிஷி: மனம் என்பது உயிரின் ஒரு தோற்ற வெளிப்பாடு. ஒரு கட்டையோ அல்லது ஒரு நுண்மையான இயந்திரமோ மனம் என்று அழைக்கப்பட முடியாது. முக்கிய சக்தியானது, உயிர்-செயல்பாடுகளாகவும், மனமென்று அழைக்கப்படும் உணர்வு விழிப்புள்ள தோற்றப்பாடுகளாகவும், வெளிப்படுகிறது. பக்தர்: மனதுக்கும் பொருளுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? தன்னை […]

25 A. நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்ப

Who am I? How is it to be found?

நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது? ரமண மகரிஷியின் மீது எழுதிய “ஆன்ம ஞானம்” (Self-Realization) என்ற நூலின் ஆசிரியர், திரு பி. வி. நரஸிம்மஸ்வாமி கேட்டார்: “நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?” மகரிஷி.: உங்களையே அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். உடலும் (annamaya kosa) அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை. இன்னும் ஆழமாகப் போகும்போது, மனமும் (manomaya kosa) அதன் செயல்பாடுகளும் ‘நான்’ இல்லை. அடுத்த படி  இந்த கேள்வியிடம் எடுத்துக் கொண்டு செல்கிறது : “எங்கிருந்து எண்ணங்கள் எழுகின்றன? […]

24. உணர்வு தான் முக்கியம், பகுத்தறிவு இல

Feeling prime factor, not reason

உணர்வு தான் முக்கியம், பகுத்தறிவு இல்லை திருமதி பிக்கட்: நீங்கள் ஏன் பசும்பால் ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் கோழி முட்டைகள் ஏற்றுக் கொள்வதில்லை?  மகரிஷி.: பழக்கப்பட்ட பசுக்கள் தமது கன்றுக்களின் தேவைக்கு மேல் பால் விளைவிக்கின்றன. எனவே அவை மிஞ்சியுள்ள பாலை விடுவிப்பதால் சுகமடைகின்றன.  பக்தர்.: ஆனால் கோழிகள் முட்டைகளை வைத்துக் கொள்ள முடியாதே? மகரிஷி.: ஆனால் அவைகளில் சாத்தியமான உயிர்கள் உள்ளன. பக்தர்.: எண்ணங்கள் திடீரென்று நின்று விடுகின்றன, பிறகு ‘நான்-நான்’ திடிரென்று எழும்பி தொடர்கிறது. இது […]

23. குரு என்பவர் யார்

Who is a Master

குரு என்பவர் யார் திரு எவன்ஸ் வென்ட்ஸ் இன்னொரு நாள் தொடர்ந்து கேட்டார்: “ஆன்மீக குருவென்று பல பேரை ஒருவர் ஏற்றுக் கொள்ளலாமா?” மகரிஷி.: குரு என்பவர் யார்? சொல்லப்போனால், அவர் ஆன்மா தான். மனதின் வளர்ச்சியின் நிலைப்படிகளுக்கு தகுந்தபடி, ஆன்மா வெளிப்புறத்தில் குருவாக உருக்கொள்கிறது.  மிகவும் புகழ்பெற்ற புனிதர் அவதூதர், தமக்கு 24 ஆசான்கள் இருந்ததாக சொன்னார். ஒருவரிடமிருந்து யாராவது ஏதாவது கற்றுக் கொண்டால், அவர் குருவாகிறார். சில சமயங்களில், அவதூதர் விஷயத்தில் இருந்தது போல, குரு […]

 
↓
error: Content is protected !!