
சுய இச்சையும் கடவுளின் சர்வ வல்லமையும்
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
பக்தர்.: என்னுடைய சுயேச்சையான மனத்திட்பத்திற்கும், நம்மை திணரடிக்கிற எல்லாம் வல்ல கடவுளின் சல்ல வல்லமைக்கும் என்ன உறவு?
(1) கடவுளின் ‘எல்லாம் அறியும் தன்மை’, தான்மையின் சுயேச்சைக்கு இசைவானதா?
(2) கடவுளின் ‘அனந்தவீரியம்’, தான்மையின் சுயேச்சைக்கு இசைவானதா?
(3) இயற்கையின் விதிகள், கடவுளின் சுயேச்சைக்கு இசைவானதா?
மகரிஷி.: ஆமாம். தற்காலம், ஒரு வரம்புக்குட்பட்ட மனத்திறனின் பார்வைக்கும் மனத்திட்பத்திற்கும் காட்சியளிப்பது தான் சுய இச்சையாகும். அதே தான்மையானது, சட்டம் அல்லது விதிகள் கொண்ட ஒரு மார்க்கத்தில் கடந்த கால நடவடிக்கைகள் செல்வது போல காண்கிறது. தன்னுடைய சுயேச்சையையும், அந்த சட்டத்தின் இணைப்புகளில் ஒன்றாகக் காண்கிறது.
கடவுளின் அனந்தவீரியமும், எல்லாம் அறியும் தன்மையும், தன்னுடைய சொந்தமான சுயேச்சையின் தோற்றத்தால் செயல்பட்டது போல தான்மையால் காணப்படுகிறது. இதிலிருந்து, தோற்றங்கள் தான் தான்மையின் தன்மை என்ற தீர்மானம் ஏற்படுகிறது. இயற்கை விதிகள், கடவுளின் தேவ ஆதீனத்தின் தோற்றப்பாடுகள். அவை அப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பக்தர்.: விஞ்ஞானம், மனவியல், உடலியல், தத்துவம் முதலியவை, பின்வரும் இரண்டிற்கும் உபயோகமானதா?
(1) முக்தி தரும் யோகக் கலை.
(2) மெய்மையான நிதர்சனத்தின் ஒருமைத் தன்மையை இயலுணர்வால் கிரகித்துக் கொள்வது.
மகரிஷி.: மிகவும் சிறிய அளவு. யோகம் செய்வதற்கு கொஞ்சம் அறிவு அவசியம்; அது புத்தகங்களில் காணப் படலாம். ஆனால், நடைமுறையில் பிரயோகம் செய்வது தான் முக்கியமான தேவைப்பாடு. ஒரு சொந்த உதாரணம், சொந்த தொடர்பு, சொந்த அறிவுறுத்தல்கள், இவை தான் மிகவும் உபயோகமான சகாயங்கள்.
இரண்டாவதைப் பற்றி என்னவென்றால், உண்மை அல்லது மெய்மை – அதாவது அதன் செயல்பாடும், தன்மையும் – உள்ளுணர்வில் இருப்பதாக, ஒரு மனிதர் சிரமத்துடன் தன்னை நம்ப வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் உண்மையான இயலுணர்வு, உணர்ச்சிக்கு ஒத்தது; அதற்கு பயிற்சியும், சாதனையும், சொந்த தொடர்பும் தேவைப்படும். வெறும் புத்தக அறிவு மிகப் பெரும் உதவியில்லை. ஆன்ம ஞானம் பெற்ற பிறகு, அறிவு சார்ந்த சுமைகள் எல்லாம், உதவியற்ற பாரங்கள் தான்; அவை, கப்பலில் பளுவைக் குறைக்க தூக்கி எறியப்படும் சரக்குகள் போல தூக்கி எறியப் படுகின்றன. தான்மையைத் தூக்கி எறிதல் தான் அவசியமானது, இயல்பானது.
பக்தர்.: விழிப்பு நிலையிலிருந்து கனவு நிலை எப்படி வித்தியாசப்படுகிறது?
மகரிஷி.: கனவுகளில் ஒருவர் பல உடல்களை எடுத்துக் கொள்கிறார். கனவில் அவர் இந்திரியங்களுடன் தொடர்பு கொள்வதை கனவு காணும்போது, அவை இந்த உடலில் மீண்டும் நுழைகின்றன.
பக்தர்.: சந்தோஷம் என்றால் என்ன? அது ஆன்மாவில் உறைவதா, அல்லது பொருளில் உறைவதா, அல்லது நபருக்கும் பொருளுக்கும் இடையே உள்ள தொடர்பில் உறைவதா? ஆனால், நாம் நமது விவகாரங்களில் சந்தோஷத்தைக் காண்பதில்லையே. எப்போது அது உண்மையில் எழுகிறது?
மகரிஷி.: விருப்பமான ஒன்றுடன் தொடர்பு அல்லது அதன் நினைவு இருக்கும்போதும், விருப்பமில்லாத தொடர்புகளிலிருந்தும் அவற்றின் நினைவுகளிலிருந்தும் விடுவிப்பு இருக்கும் போதும், நாம் சந்தோஷம் இருப்பதாகச் சொல்கிறோம். இத்தகைய சந்தோஷம் தனித்து இல்லாமல் இன்னொன்றுடன் ஒப்பு நோக்கியே காணத்தக்கதாகும். இதை இன்பம் என்று சொல்வது சரியானது.
ஆனால், மனிதர்கள் வரையற்ற, நிரந்தரமான சந்தோஷத்தை விரும்புகிறார்கள். அது பொருள்களில் வசிப்பதில்லை. வரையற்றதில் தான் வசிக்கிறது. அது துன்பம், இன்பம் இரண்டிலிருந்தும் விடுவிக்கப்பட்ட அமைதி. அது நடுநிலையில் உள்ள ஸ்திதி.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 4, 1935
உரையாடல் 28.
28c
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா