Feeling prime factor, not reason
25 A. நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?
23. குரு என்பவர் யார்

உணர்வு தான் முக்கியம், பகுத்தறிவு இல்லை

திருமதி பிக்கட்: நீங்கள் ஏன் பசும்பால் ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் கோழி முட்டைகள் ஏற்றுக் கொள்வதில்லை? 

மகரிஷி.: பழக்கப்பட்ட பசுக்கள் தமது கன்றுக்களின் தேவைக்கு மேல் பால் விளைவிக்கின்றன. எனவே அவை மிஞ்சியுள்ள பாலை விடுவிப்பதால் சுகமடைகின்றன. 

பக்தர்.: ஆனால் கோழிகள் முட்டைகளை வைத்துக் கொள்ள முடியாதே?
மகரிஷி.: ஆனால் அவைகளில் சாத்தியமான உயிர்கள் உள்ளன.

பக்தர்.: எண்ணங்கள் திடீரென்று நின்று விடுகின்றன, பிறகு ‘நான்-நான்’ திடிரென்று எழும்பி தொடர்கிறது. இது உணர்வில் தான் உள்ளது, புத்தியில் இல்லை. இது சரியாக இருக்கக் கூடுமா? 

மகரிஷி.: நிச்சயமாக அது சரிதான். ‘நான்-நான்’ எழும்பி உணரப்பட, எண்ணங்கள் நிற்க வேண்டும், பகுத்தறிவு மறைய வேண்டும். உணர்வு தான் முக்கியமான அம்சம், பகுத்தறிவு இல்லை.

பக்தர்.: மேலும், அது தலையில் இல்லை, நெஞ்சின் வலது பக்கத்தில் தான் உள்ளது. 
மகரிஷி.: அப்படித் தான் இருக்க வேண்டும். ஏனெனில், இதயம் அங்கு தான் உள்ளது.

பக்தர்.: நான் வெளியில் பார்க்கும் போது, அது மறைந்து விடுகிறது. என்ன செய்வது?
மகரிஷி.: அது இறுக்கமாக பிடித்துக் கொள்ளப்பட வேண்டும். 

பக்தர்.: ஒருவர் இத்தகைய ஞாபகத்துடன் செயல்களில் ஈடுபட்டால், செயல்கள் எப்போதும் சரியானவையாக இருக்குமா? 
மகரிஷி.: இருக்கத்தான் வேண்டும். ஆனாலும், இத்தகைய மனிதர் தமது சரியான, அல்லது தவறான செயல்களைப் பற்றி கவலைப் படமாட்டார். இத்தகைய மனிதரின் செயல்கள் கடவுளின் செயல்களாகும்; எனவே அவை சரியானவையாகத் தான் இருக்க வேண்டும்.

பக்தர்.: பிறகு இவர்களுக்கு ஏன் உணவின் கட்டுப்பாடுகள் கொடுக்கப் படுகின்றன? 
மகரிஷி.: உங்களது தற்போதைய அனுபவம், நீங்கள் இருக்கும் சூழ்நிலையின் விளைவின் காரணத்தால் உள்ளது. அது  உங்களுக்கு இந்த சூழ்நிலைக்கு வெளியில் ஏற்படுமா?  அனுபவம் இடை விட்டு நிகழ்கின்றது. அது நிரந்தரமாக ஆகும் வரை, பயிற்சி தேவைப் படும். உணவு கட்டுப்பாடுகள், இத்தகைய அனுபவம் மீண்டும் ஏற்பட சகாயங்களாகும். ஒருவர் தம்மை உண்மைத் தன்னிலையில் நிலைநாட்டிக் கொண்ட பின், கட்டுப்பாடுகள் தன்னியல்பாகவே வீழ்ந்து விடும்.  மேலும், உணவு மனதை பாதிக்கிறது. அதனால் அது பரிசுத்தமாக இருக்க வேண்டும்.  

பிற்பாடு இந்தப் பெண்மணி ஒரு பக்தரிடம் சொன்னார்:  “அவரிடமிருந்து மன அதிர்வுகளை இன்னும் தீவிரமாக உணர்கிறேன்.  என்னால் ‘நான்’ என்னும் நடுமையத்தை முன்பை விட எளிதாக அடைய முடிகிறது.”

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 4, 1935
உரையாடல் 24.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

25 A. நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது?
23. குரு என்பவர் யார்
24. உணர்வு தான் முக்கியம், பகுத்தறிவு இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!