Skip to main content

22. நல்ல தரமான உணவு

Good quality diet

நல்ல தரமான உணவு திருமதி பிக்கட் சென்னையிலிருந்து மீண்டும் வந்தார். உணவு விதிகளைப் பற்றி சில கேள்விகள் கேட்டார்.  பக்தர்.: ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு எந்த விதமான உணவு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன? மகரிஷி.: வரம்புக்குட்பட்ட சாத்வீகமான நல்ல தரமுள்ள உணவு.   பக்தர்.: சாத்வீகமான உணவு என்ன? மகரிஷி.: ரொட்டி, பழங்கள், காய்கறிகள், பால், போன்றவை. பக்தர்.: வட இந்தியாவில் சிலர் மீன் சாப்பிடுகிறார்கள். அப்படி செய்யலாமா? மகரிஷி.: (மகரிஷி அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.) பக்தர்.: ஐரோப்பியர்களாகிய நாங்கள் ஒரு […]

21. திடமான ஞானம்

Firm Knowledge

திடமான ஞானம் திரு எல்லப்பச் செட்டியார் என்னும் செல்வாக்கான இந்து, சென்னை மாநிலத்தின் சட்டமியற்றும் மன்றத்தின் உறுப்பினர் ஆவார். அவர் கேட்டார்: ‘கேட்பதனால் பிறக்கும் ஞானம் திடமில்லை; ஆனால் தியானத்தால் பிறக்கும் ஞானம் திடமானது’ – என்று ஏன் சொல்லப்படுகிறது?”  மகரிஷி.: அதற்கு மாறாக, ‘கேள்விப்பட்ட (பரோக்ஷ) ஞானம் திடமில்லை; ஆனால் தனது சொந்த அனுபவத்தால் பிறக்கும் (அபரோக்ஷ) ஞானம் திடமானது’ என்று சொல்லப்படுகிறது. மேலும், கேட்டு அறிந்துக் கொள்வது உண்மைத் தத்துவத்தின் பொருளை அறிவுப்பூர்வமாக புரிந்துக் கொள்ள உதவுகிறது […]

20. தனிமை, மௌனம், சித்திக்கள்

Solitude, Silence, Powers

தனிமை, மௌனம், சித்திக்கள் ஜனவரி 29, 1935 திரு க்ரான்ட் டப் கேட்டார்: நினைவும், மறதியும் எங்கே உள்ளது? மகரிஷி: மனதில் (சித்தம்). ஜனவரி  30, 1935 திரு எவன்ஸ் வென்ட்ஸ்: ஒரு ஞானிக்கு தனிமை அவசியமா? மகரிஷி.: தனிமை மனிதனின் மனதில் உள்ளது.  ஒருவர் அடர்ந்த உலகில் இருந்துக்கொண்டே மனதில் அமைதியை நிலை நிறுத்தி வைக்கலாம்; இப்படிப்பட்டவர் தனிமையில் உள்ளார். மற்றொருவர் காட்டில் வசிக்கலாம், இருப்பினும் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம். இவர் தனிமையில் உள்ளார் […]

19. நினைவும் மறதியும்

What is Solitude

நினைவும் மறதியும் திரு க்ரான்ட் டப் கேட்டார்: நினைவும், மறதியும் எங்கே உள்ளது? மகரிஷி: மனதில் (சித்தம்).   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 ஜனவரி 29, 1935 உரையாடல் 19. தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

18. யோகிகளும் மாய வித்தைகளும்

Yogis and occult powers

யோகிகளும் மாய வித்தைகளும் திரு எவன்ஸ் வென்ட்ஸ் கேட்டார்: மாய வித்தைகள் கொண்ட யோகிகள் உள்ளனர். அவர்களைப் பற்றி மகரிஷி என்ன நினைக்கிறார்? மகரிஷி:  இந்த சக்திகள் செவிவழிச் செய்தியாலோ அல்லது கண்காட்சியாலோ தெரிய வருகின்றன. எனவே அவை மனப் பிரதேசத்தில் மட்டுமே உள்ளன.  பக்தர்.: சென்னையில் வாழும் ஒரு யோகி, இமய மலையில் உள்ள தமது ஆசானுடன் ஆன்மீக தொடர்பு வைத்துக் கொள்வதாக திரு ப்ரன்ட்டன் சொல்கிறார்.  மகரிஷி.: இது எல்லோருக்கும் தெரிந்த ‘தொலைவிலுணர்தல்’ (telepathy) என்பதை விட மிக அற்புதமானது ஒன்றுமில்லை. […]

17 E. ஆன்ம ஞானமும் பேரானந்தமும்

Self-Realization and bliss

ஆன்ம ஞானமும் பேரானந்தமும் திரு எவன்ஸ்-வென்ட்ஸ் ஆன்ம ஞானத்தைப் பற்றியும் “பரிபூரண மோன நிலை” (சமாதி) பற்றியும் கேள்விகள் கேட்டார்.  பக்தர்.: ஆன்ம ஞானம் பெற மகரிஷிக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது?  மகரிஷி.: பெயரும், தோற்றமும் காணப்படுவதால் இந்த கேள்வி கேட்கப் படுகிறது. தான்மை உணர்வு ஊன உடலுடன் இணைந்துக் கொள்வதால் இந்த தோற்றங்கள் உள்ளன. தான்மை உணர்வு (ego), கனவில் உள்ளது போல், நுண்ணிய மனதுடன் இணைந்துக் கொண்டால், தோற்றங்களும் நுட்பமாக உள்ளன. ஆனால் தூக்கத்தில் […]

17 D. போரும் கடுங்குற்றமும்

War and Crime

போரும் கடுங்குற்றமும் திரு எவன்ஸ் வென்ட்ஸ் உயிர் இழப்பு பற்றி கேட்டார்.  பக்தர்.: கடவுள் எல்லாவற்றிலும் உறைந்து இருப்பதால், யாரும் எவ்வித உயிரையும் அழிக்கக்கூடாது. சமூகம் ஒரு கொலைகாரனின் உயிரை எடுப்பது சரியா? அரசாங்கம் கூட அப்படி செய்யலாமா? கிறிஸ்துவ நாடுகள் கூட அது தவறு என்று நினைக்க ஆரம்பித்துள்ளன.  மகரிஷி.: கொலைகாரனை கொலை செய்யும்படி தூண்டி விட்டது எது? அதே சக்தி தான் அவனுக்கு தண்டனையும் அளிக்கிறது. சமூகம் அல்லது அரசாங்கம் அந்த சக்தியின் கையில் […]

17 C. வேலை, பயிற்சி, பிரம்மச்சரியம்

Work, Practice, Celibacy

வேலை, பயிற்சி, பிரம்மச்சரியம் திரு எவன்ஸ் வென்ட்ஸ், பெரும்பாலும் யோகப் பயிற்சியின் முன்னோட்டமான அடிப்படைகளைப் பற்றிய கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அவற்றிற்கெல்லாம் மகரிஷி, எல்லொருக்கும் குறிக்கோள் ஆன்ம சுயநிலை அறிவது; அதற்கு யோகப்பயிற்சி துணைப்பொருள்; அடிப்படைகள் எல்லாம் யோகப்பயிற்சிக்குத் துணைப் பொருட்கள், என்று பதிலளித்தார்.   பக்தர்.: ஆன்ம ஞானத்திற்கு வேலை அல்லது தொழில் ஒரு தடங்கலா?  மகரிஷி.: இல்லை. ஒரு ஞானிக்கு ஆன்மா மட்டுமே உண்மை சுயநிலை. பணிகள் நிகழ்வுசார்ந்தவை, ஆன்மாவை பாதிக்காதவை. ஞானி  செயல்புரியும் போது கூட, செயலாற்றுபவர் என்னும் […]

17 B. ஆங்கிலேய அறிஞர் மேலும் கேள்விகள் க

English scholar asks more questions

ஆங்கிலேய அறிஞர் மேலும் கேள்விகள் கேட்கிறார் பக்தர்.: ஆழ்நிலை தியானம் செய்ய தகுந்த நேரம் எது? மகரிஷி: நேரம் என்றால் என்ன? பகதர்.: அது என்னவென்று எனக்குச் சொல்லுங்கள்! மகரிஷி.: நேரம் ஒரு கருத்து தான். உண்மை சுயநிலை ஒன்று தான் உள்ளது. அது என்னவென்றெல்லாம் நீங்கள் நினைக்கிறீர்களோ, அது போலவே அது காணப்படுகிறது. அதை நீங்கள் நேரம் என்று அழைத்தால், அது நேரமாகிறது. அதை உள்ளமை என்று அழைத்தால், அது உள்ளமையாகிறது, அதே போல மேலும் […]

17 A. ஆங்கிலேய அறிஞரின் கேள்விகள்

English scholar's questions

ஆங்கிலேய அறிஞரின் கேள்விகள் திரு W. Y. எவன்ஸ்-வென்ட்ஸ் என்பவர், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் கலாசாலையில் ஒரு ஆங்கிலேய அறிஞர். அவர் திரு பால் ப்ரன்ட்டன் கொடுத்த ஒரு அறிமுகக் கடிதத்துடன் மகரிஷியைச் சந்திக்க வந்தார்.  பயணத்தால் மிகவும் களைப்படைந்ததால், அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது. அவர் பாரத நாட்டுக்கு பல முறை வந்திருப்பதால், இந்திய வாழ்க்கை வழிமுறைகளில் பழக்கப்பட்டவர். அவர் திபெத்திய மொழியைக் கற்றுக்கொண்டு, ‘இறந்தவரின் புத்தகம்’, ‘மிலரேபாவின் வாழ்க்கை’ என்னும் நூல்களையும், ‘திபெத்தின் ரகசியக் கொள்கைகள்’ என்ற […]

16 B. துக்கம் அனுசரிக்க காரணம் இல்லை

No reason to mourn

துக்கம் அனுசரிக்க காரணம் இல்லை ஐரோப்பிய விருந்தாளி பிரிந்து சென்ற ஆன்மாக்களைப் பற்றியும் அவர்களுக்கு சேவை செய்ய சிறந்த முறை எதுவென்றும் கேட்டார்.  பிரிந்து சென்ற ஆன்மாக்களைப் பற்றிய கேள்விக்கு விளக்கம் : ஒருவர் தன்னை தன் உடலோடு இணைத்திருக்கும் வரை, தோற்றங்களாக வெளிப்படுத்தப்பட்ட எண்ணம், அவருக்கு உண்மையாக இருக்கும். தன் உடல் மற்றொரு உடலிலிருந்து ஏற்பட்டதாக கற்பனை செய்துக் கொண்டிருப்பதால், தன் உடல் எவ்வளவு உண்மையாக உள்ளதோ அதே அளவுக்கு மற்றவரின் உடலும் உண்மையாக இருக்கும். சந்ததியாக […]

16 A. மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி

Guest to see Maharshi

மகரிஷியைக் காண ஒரு விருந்தாளி திரு டக்லஸ் ஏன்ஸ்லி (க்ரான்ட் டப்) என்ற  70 வயதுள்ள ஆங்கிலேய கனவான், தமிழ் நாட்டின் முந்தைய ஆளுனரின் உடன்பிறந்தவரின் மகன். அவர் ஒரு எழுத்தாளர், கவிஞர். இதற்கு முன்பு ஏதென்ஸ், பாரீஸ், ஹேக் முதலிய இடங்களில் இருந்த இங்கிலாந்தின் தூதர் அலுவலகத்துடன் இணைப்பு வைத்திருந்தார். அவர் சென்னையின் அரசாங்க இல்லத்தில் விருந்தாளியாக வந்திருந்தார். அவர் திரு பால் ப்ரன்ட்டன் கொடுத்த அறிமுகக் கடிதத்துடன் மகரிஷியை சந்திக்க வந்தார். அடுத்த நாள், அவர் […]

 
↓
error: Content is protected !!