Realizing the Real is the Goal
மெய்மையின் தன்மை என்ன
மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி

உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள்

பக்தர்.: எண்ணங்களை ஒழுங்கு படுத்துவதற்கும் மூச்சை ஒழுங்கு படுத்துவதற்கும் இடையே உள்ள உறவு என்ன?

மகரிஷி.: (அறிவு சார்ந்த) எண்ணமும், சுவாசம், சுற்றோட்டம் முதலிய (தாவர) நடவடிக்கைகளும், ஒரே ஒன்றின் இரண்டு அம்சங்கள் – தனிப்பட்ட உயிர். இரண்டும் உயிரின் மேல் சார்ந்துள்ளன (உயிரில் உறைகின்றன). உயிர் நிலையான நடவடிக்கை போல் தனித்தன்மையும் மற்ற கருத்துக்களும் அதிலிருந்து எழுகின்றன. சுவாசம் அல்லது மற்ற உயிர் நிலையான நடவடிக்கை பலவந்தமாக அடக்கப்படும்போது, எண்ணமும் அடக்கப்படுகிறது. எண்ணம் பலவந்தமாக நிதானப்படுத்தப்பட்டு, ஒரு மையத்தில் பொருத்தப்பட்டால், சுவாசத்தின் உயிர் நிலையான நடவடிக்கையும் நிதானப்படுத்தப்படுகிறது; சமப்படுத்தப்பட்டு, உயிர் வாழ்வதற்கு தேவையான, இருப்பதற்குள் தாழ்ந்த நிலைக்கு கொண்டு வரப்படுகிறது. 
இரண்டு விதங்களிலும், கவனச்சிதறலுடன் அலைபாயும் விதமான எண்ணங்கள் தற்காலிகமாக முடிவடைகிறது. இரண்டிற்கும் இடையே உள்ள பின்னிய தொடர்பு மற்ற விதங்களில் கூட காணப்படுகிறது. வாழ்வதற்கு உள்ள மனத்திட்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; அது எண்ண சக்தி தான்.  இது உயிரை தாங்கி நீடிக்கச்செய்து, மற்ற முக்கிய சக்தி பெரும்பாலும் தீர்ந்து விட்ட பிறகு, மரணத்தை தாமதப் படுத்துகிறது.  இத்தகைய மனத்திட்ப சக்தி இல்லாவிட்டால், மரணம் துரிதமாக்கப் படுகிறது. எனவே, எண்ணம் உயிரை தன்னுடன் சதையில் தாங்கிச் செல்வதாகவும், ஒரு சதைப்பிடிப்பான உடலிலிருந்து மற்றொன்றிக்கு கொண்டு செல்வதாகவும்  சொல்லப்படுகிறது.  

பக்தர்.: ஒருமுக சிந்தனைக்கும், கவனச் சிதறலைத் தள்ளி நீக்குவதற்கும் ஏதாவது உபாயங்கள் உள்ளனவா?

மகரிஷி.: சரீர சம்பந்தமாக,  ஜீரண சம்பந்தமான உறுப்புக்களும், மற்ற உறுப்புக்களும், எரிச்சல் இல்லாமல் வைத்துக் கொள்ளப்படுகின்றன. எனவே, அளவிலும் தரத்திலும், உணவு சரிப்படுத்தப் படுகிறது. எரிச்சல் உண்டாக்காதவை உண்ணப்படுகின்றன; மிளகாய், மிகுதியான உப்பு, வெங்காயம், மது, அபினி (opium) முதலியவை தவிர்க்கப் படுகின்றன. மலச்சிக்கல், அரைத்தூக்க நிலை, உணர்ச்சி பரபரப்பு, இவற்றையும், இவற்றை உண்டாக்கும் உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
மனதில் ஒரு ஈடுபாட்டில் ஆர்வம் கொண்டு, மனதை அதில் பொருத்த வேண்டும்.   இந்த ஆர்வம் மற்ற எல்லாவற்றையும் தவிர்த்து, முற்றிலும் மனதை ஆட்கொள்வதாக இருக்கட்டும்.  இது தான் வைராக்கியம், ஒரு முக சிந்தனை. கடவுள் அல்லது மந்திரம் தேர்ந்தெடுக்கப் படலாம். மனம் நுண்ணியமானதை பற்றி பிடித்துக்கொண்டு, அதனுள் அமிழ்ந்து ஒன்றுபடுவதற்கு வலிமை பெறும். 

பக்தர்.: கவனச் சிதறல்கள் மரபு வழிப்பட்ட மனப்போக்குகளால் விளைகின்றன. அவை கூட தள்ளி விலக்கப் பட முடியுமா?

மகரிஷி.: ஆமாம். பலர் அப்படி செய்திருக்கின்றனர். இதை நம்புங்கள்! அப்படிச் செய்ய முடியும் என்று நம்பியதால், அவர்கள் அதைச் செய்திருக்கின்றனர். முன்னமே தீர்வு செய்யப்பட்ட மனப்போக்குகள் (வாசனைகள்) அழிக்கப்பட முடியும். இந்த மனப்போக்குகள் இல்லாமலும், ஆயினும் அவற்றின் அடிப்படையாக உள்ளதுமானதின் மேல் ஒரு முக சிந்தனையில் ஆழ்வதால், வாசனைகள் அழிக்கப்படுகின்றன. 

பக்தர்.: எவ்வளவு காலம் இந்த பயிற்சி தொடர வேண்டும்?

மகரிஷி.: வெற்றி அடையும் வரையிலும், யோக முக்தி நிரந்தரமாகும் வரையிலும் தொடரப்பட வேண்டும். வெற்றி வெற்றியை விளைவிக்கிறது. ஒரு கவனச்சிதறல் வெற்றி கொள்ளப்பட்டால், இன்னொன்று வெற்றி கொள்ளப்படுகிறது; எல்லாம் வெற்றிக் கொள்ளப்படும் வரை இப்படியே மேலும் மேலும் வெற்றிக் கொள்ளப் படுகிறது.  இந்த செயல்முறை, எதிரியின் கோட்டையிலிருந்து, ஒருவர் ஒருவராக வெளியில் வரும்போது அவரைக் கொன்றுவிடுவதால், கோட்டையின் ஆள்வலிமையை குறைப்பதற்கு இணையாகும்.  

பக்தர்.: இந்த செயல்முறையின் குறிக்கோள் என்ன?

மகரிஷி.: உண்மை நிலையை உணர்வது.

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
பிப்ரவரி 4, 1935
உரையாடல் 28.
28a

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

மெய்மையின் தன்மை என்ன
மனக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது எப்படி

உண்மை நிலையை உணர்வது தான் குறிக்கோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

   RECENT POSTS :

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல்  532. பக்தர்.: இந்த உலக துயரங்களிலிருந்து தப்பிக்க வழியே கிடையாதா? மகரிஷி.: ஒரே
Read More
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (3)

ரமணர் மேற்கோள் 64

ரமணர் மேற்கோள் 64 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 45 பக்தர்.: பகவானுடன் ஒரு நாள் இருந்தால் நல்லது; இரண்டு நாட்கள் இருந்தால் மேலும் நல்லது; மூன்று நாட்கள், இன்னும்
Read More
ரமணர் மேற்கோள் 64

Ramana Maharshi Quote 64

Ramana Maharshi Quote 64 Talks with Ramana Maharshi Talk 45 D.: A stay of one day with Sri Bhagavan is good;
Read More
Ramana Maharshi Quote 64

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2) வீடியோ

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2) வீடியோ ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சுய விசாரணைக்கு அறிவும், பயிற்சியும் அளிக்கும் சில பகுதிகள். வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும்
Read More
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2) வீடியோ

What is Self-Enquiry? How to do it? (2) Video

What is Self-Enquiry? How to do it? (2) Video Extracts from Talks with Ramana Maharshi, pertaining to Knowledge and Practice of
Read More
What is Self-Enquiry? How to do it? (2) Video

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2)

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2) ரமண மகரிஷியுடன் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் ~~~~~~~~ உரையாடல் 25. பக்தர்: நான் யார்? அதை எப்படி கண்டுபிடிப்பது? மகரிஷி: உங்களையே அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள். உடலும் அதன்
Read More
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (2)

Cita de Ramana 40

Cita de Ramana 40 Conversaciones con Ramana Conversacaion 196 D.: buscando el ' yo ', no hay nada que ver.
Read More
Cita de Ramana 40

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (1) வீடியோ

சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (1) வீடியோ திரு ரமண மகரிஷியின் அறிவுரைகள் : சுய விசாரணைக்கு உதவும் அறிவும், பயிற்சியும். வசுந்தரா தமிழில் மொழிபெயர்த்து வழங்கும்
Read More
சுய விசாரணை என்றால் என்ன? எப்படி செய்வது? (1) வீடியோ
↓
error: Content is protected !!