நிறைந்த ஒளி
திரு டி. பி. ராமச்சந்திர அய்யர், ரமண மகரிஷி அருளிய ‘உள்ளது நற்பது’ என்ற தெய்வீகக் கவிதையின் முதல் வரிசையில் உள்ள ‘ஆர் ஒளி’ என்ற சொல்லின் பொருளைப் பற்றி பகவானிடம் கேட்டார்.
பகவான்: ‘ஆர் ஒளி’ என்றால் ‘நிறைந்த ஒளி’ என்று பொருள். அது நாம் இந்த உலகத்தை எல்லாம் காணும் மனதின் ஒளியைக் குறிப்பிடுகிறது; இந்த உலகத்தில் இதுவரை தெரிந்ததும், இன்னும் தெரியாததுமான இரண்டுமாகும்.
முதலில் ஒளியையும் இருளையும் கடந்துள்ள ஆன்மாவின் ‘வெள்ளை’ ஒளி உள்ளது. அதில், ஒரு பொருளையும் காண முடியாது. காண்பவரும், காணப்படுவதும் இருக்காது.
பிறகு, பொருள்களே காணப்படாத முழு இருள் அல்லது அறியாமை (அவித்யா) உள்ளது.
ஆனால், ஆன்மாவிலிருந்து ஒரு பிரதிபலித்த ஒளி எழும்புகிறது. இந்த ஒளி, தூய மனதின் ஒளியாகும். இந்த ஒளி தான் உலகின் எல்லா திரைப்படங்களையும் காண இடமளிக்கிறது. இந்த உலகக் காட்சிகள், முழு ஒளியிலும் தெரியாது, முழு இருளிலும் தெரியாது; மங்கலான ஒளியிலோ அல்லது பிரதிபலிக்கப் பட்ட ஒளியிலோ தான் தெரியும். இந்த ஒளி தான் உள்ளது நாற்பதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
தினம் தினம் பகவானுடன்
மார்ச் 17, 1945
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா