சொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வின் நோக்கத்தையே மாற்றும் ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 284 பக்தர்.: மகரிஷி ஏன் அங்கும் இங்கும் சென்று ஜனங்களுக்கு உண்மையை உபதேசித்து சொற்பொழிவுகள் தருவதில்லை?  மகரிஷி.: நான் அப்படி செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்?  உபதேசமும் அறிவுரையும் வழங்குவது என்பது ஒரு மேடையை ஏற்படுத்தி, சுற்றி உள்ள மக்களுக்கு நீண்ட வீராவேசப் பேச்சு தருவதா? அறிவுரை வழங்குவது என்பது எளிய விதத்தில் அறிவை பரப்புவதாகும். அது […]