54. மெய்யான ஆன்மா, எண்ணங்கள் கட்டுப்பாடு, சூழ்நிலைகளின் விளைவு, மூச்சுக் கட்டுப்பாடு ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 16, 1935 உரையாடல் 54. தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா ஒரு வயதான பண்டிதருக்கு, கணபதி முனி அத்வைதத்தின் மேல் அளித்த விளக்கவுரையைப் பற்றி சில சந்தேகங்கள் எழுந்தது. அவர் சில நூல்களில் இதைப் பற்றி முரண்பாடுகள் கண்டார். மகரிஷி சொன்னார் : தக்ஷிணாமூர்த்தி அந்த மாதிரி ஏதும் கற்பிக்கவில்லை. அவர் மௌனமாக இருந்தார். சீடர்களின் சந்தேகங்கள் தீர்ந்தன. […]
You are browsing archives for
Category: எண் வரிசைப்படி உரையாடல்கள்
ரமண மகரிஷியுடன் நிகழ்ந்த இந்த உரையாடல்கள் புத்தகத்தில் உள்ள எண் வரிசைப்படி இங்கு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உரையாடலும் எந்த விதத்திலாவது மிகுந்த உதவி அளிக்கும். தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா.
53. இந்த “நான்” யார்? யாருக்கு சந்தேகம்
53. இந்த “நான்” யார்? யாருக்கு சந்தேகம் எழுகிறது? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 15, 1935 உரையாடல் 53. ஒரு வாலிபர், திரு நோல்ஸ் என்பவர், மகரிஷியின் தர்சனம் பெற வந்தார். அவர் திரு பால் ப்ரண்ட்டனின் இரண்டு புத்தகங்களைப் படித்திருக்கிறார். அவர் கேட்டார் : “புத்த மதத்தினர் “நான்” என்பது பொய்யானது என்கிறர்கள். ஆனால், பால் ப்ரண்ட்டன் தமது “ரகசிய பாதை” என்ற நூலில், “நான் – எண்ணத்தை” கடந்து உண்மையான “நான்” என்ற […]
52. தெளிவான மனமும் மந்தமான மனமும், மரணத்
52. தெளிவான மனமும் மந்தமான மனமும், மரணத்திற்கு பிறகு ஜீவன், தியானம் என்றால் என்ன ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ஜூன் 9, 1935 உரையாடல் 52. ஒரு வருகையாளர் கேட்டார் : என் மனம் இரண்டு மூன்று நாட்களுக்குத் தெளிவாக இருக்கிறது. பிறகு அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு மந்தமாக இருக்கிறது. இப்படியே அது மாறி மாறி வருகிறது. அது எதனால்? மகரிஷி: அவ்வாறு இருப்பது சாதாரணமாக நடப்பது தான். அதன் காரணம், பிரகாசமும், தெளிவும், […]
43. இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி; மன
43. இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி; மனக் கட்டுப்பாடு; மெய்யான “நான்”, பொய்யான “நான்” ரமண மகரிஷியுடன் உரையாடல்கள். உரையாடல் 43. சில பக்தர்கள் ஆஸ்ரமத்திற்கு வந்தார்கள். அவர்கள் ரங்கநாதன், ராமமூர்த்தி, ராகவைய்யா. திரு ரங்கநாதன் கேட்டார். மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தயவுசெய்து அறிவுரை தர வேண்டும். மகரிஷி: அதற்கு இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று, மனமென்றால் என்ன என்று பார்ப்பது. அப்படி பார்த்தால், மனம் தணிந்து அடங்கும். இரண்டாவது, உங்கள் கவனத்தை ஒன்றின் மீது பதிய […]
42. பிரக்ஞை உணர்வின் மின்னல் போன்ற திடீர
42. பிரக்ஞை உணர்வின் மின்னல் போன்ற திடீர் ஒளிகளைப் பெறுவது எப்படி? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 42. திரு டங்க்கன் க்ரீன்லீஸ், மதனபள்ளியிலிருந்து பின்வருமாறு கடிதம் எழுதினார் :- ஒருவருக்கு சில சமயங்களில், ஒரு பிரக்ஞை உணர்வின் தெளிவான, மின்னல் போன்ற திடீர் ஒளிகள் வருகின்றன. அந்த பிரக்ஞை உணர்வின் நடு மையம் சாதாரண சுயத்திற்கு வெளிப்புறத்திலும் உள்ளுக்குள்ளும் இருப்பதாகத் தெரிகிறது. மனதை வேதாந்த கருத்துக்களால் பாதிக்காமல், இந்த திடீர் ஒளிகளைப் பெறவும், விடாமல் வைத்துக் கொள்ளவும், […]
41. சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா
41.சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 41. பக்தர்: சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா? மகரிஷி: அங்கு போவதற்கு யாராவது இருக்க வேண்டும். அவை கனவுகள் போன்றவை. கனவில் கூட நேரமும் இடமும் இருப்பதை நாம் பார்க்கிறோம். இதில் எது உண்மை, கனவா அல்லது விழிப்பா? பக்தர்: எனவே நாம் நம்மிடம் உள்ள காமம், குரோதம் போன்றவற்றை நீக்கி விட வேண்டும். மகரிஷி: எண்ணங்களை விட்டு விடுங்கள். வேறு எதையும் விட வேண்டிய அவசியமில்லை. எதையும் காண்பதற்கு நீங்கள் இருக்க வேண்டும். […]
34 – 40. ஆன்ம ஞானம், கர்மா, செயல்கள், இற
34 – 40. ஆன்ம ஞானம், கர்மா, செயல்கள், இறந்தவரைக் காண்பது ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~~~~~~~~ பிப்ரவர் 4, 1935 ~~~~~~~~ உரையாடல் 34. ஒரு பக்தர், யோகி ராமய்யா, மகரிஷியின் அறிவுரைகளைப் பின்பற்றியதால் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். அவர் சொன்னார் : மகரிஷியின் முன்னிலையில் உட்கார்ந்து இருப்பது மனதுக்கு அமைதி கொண்டு வருகிறது. நான் இடைவிடாமல் மூன்று, நான்கு மணி நேரத்திற்கு, பூரண அமைதியில் அமர்ந்திருப்பேன். பிறகு என் மனம் ஒரு உருவத்தை அமைத்துக் […]
33. உலகம் மாயையா அல்லது மெய்மையா
33. உலகம் மாயையா அல்லது மெய்மையா ஒரு வருகையாளருடன் உரையாடல். பக்தர்: “மிக உயர்ந்த ஆன்ம சுய சொரூபம் (பிரம்மம்) மெய்மையாகும். உலகம் மாயையாகும்” என்பது திரு சங்கராசாரியாரின் வழக்கமான வாக்கியமாகும். ஆனால், வேறு சிலர், “உலகம் மெய்மை தான்” என்று சொல்கிறார்கள். இதில் எது உண்மை? மகரிஷி: இரண்டு வாக்கியங்களும் உண்மை தான். அது ஆன்மீக வளர்ச்சியின் பலவித நிலைப்படிகளைப் பொருத்து குறிப்பிடப்படுகிறது. அது வெவ்வேறு நோக்கங்களிலிருந்து சொல்லப்படுகிறது. பயற்சி செய்பவர், “எது மெய்யோ அது எப்போதும் […]
குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து
குடும்ப பந்தம் என்றால் என்ன? அதிலிருந்து விடுபடுவது எப்படி? ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் ~~~~~~~~ உரையாடல் 524 ஒரு யாத்ரீகர் கேட்டார்: நான் ஒரு குடும்பஸ்தன். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு விடுவிப்பு கிடைக்க முடியுமா? அப்படி முடியுமானால், அது எப்படி? மகரிஷி: சரி, குடும்பம் என்றால் என்ன? யாருடைய குடும்பம்? இந்த கேள்விகளுக்கு பதில்கள் கண்டுபிடிக்கப் பட்டால், மற்ற கேள்விகளும் தாமாகவே தீர்க்கப் பட்டுவிடும். சொல்லுங்கள், நீங்கள் குடும்பத்தில் இருக்கிறீர்களா, அல்லது குடும்பம் உங்களுக்குள் இருக்கிறதா? […]
32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள
32. அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள் ஒரு வருகையாளருடன் உரையாடல். பக்தர்: புனிதர்களான திரு சைதன்யரும், திரு ராமகிருஷ்ணரும் கடவுளுக்கு முன்னால் கண்ணீர் சிந்தி வெற்றி அடைந்தனர். இந்த பாதை தான் பின்பற்றப் பட வேண்டும், இல்லையா? மகரிஷி: ஆமாம். அவர்களை அந்த அனுபவங்களில் எல்லாம் ஒரு மிகவும் பலமான சக்தி இழுத்துச் சென்றுக் கொண்டிருந்தது. உங்களுடைய குறிக்கோளை அடைய அந்த பிரம்மாண்டமான சக்தியை நம்புங்கள். சாதாரணமாக, கண்ணீர் பலவீனத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த மாபெரும் […]
தான்மை என்னும் பூதம், திருமணத்தில் நுழைந
தான்மை என்னும் பூதம், திருமணத்தில் நுழைந்த அன்னியன் குறிப்பு : இந்த உரையாடலில் தான்மையின் தன்மையைப் பற்றியும், நடந்துக்கொள்ளும் விதத்தையும் ரமண மகரிஷி மிகவும் தெளிவாக விளக்குகிறார். அவர் பக்தர்களுக்கு நன்றாக விளங்கும் விதத்தில் உதாரணங்களும் அளிக்கிறார். ~~~~~~~~ திரு ஜாக்ஸன் என்ற பக்தர் மகரிஷியுடன் கொண்ட உரையாடலில், இவ்வாறு பேசினார். நாங்கள் இதைப் பற்றியெல்லாம் படிக்கும் போது, புத்தி சார்ந்த விதத்தில் தான் படிக்கிறோம். ஆனால் இவை அறிந்துக் கொள்ள மிகவும் தொலைவில் உள்ளன. நாங்கள் […]
31. மோட்சம், பயிற்சி, ஒருமுக கவனம், சரணா
மோட்சம், பயிற்சி, ஒருமுக கவனம், சரணாகதி, பிரச்சனை தீர்வு ஒரு பக்தர் கேட்டார்: மோட்சம் அடைவது எப்படி? மகரிஷி.: மோட்சம் என்றால் என்ன என்று அறிந்துக் கொள்ளுங்கள். பக்தர்: நான் அதற்காக உபாசனை செய்ய வேண்டுமா? மகரிஷி: உபாசனை மனக் கட்டுப்பாட்டிற்காகவும் ஒரு முக கவனத்திற்காகவும் செய்யப்படுகிறது. பக்தர்: நான் மூர்த்தி தியானம், அதாவது ஒரு கடவுளின் உருவச் சிலையை வழிபடலாமா? அதில் ஏதாவது தீங்கு உள்ளதா? மகரிஷி: நீங்கள் ஒரு உடல் என்று […]