
9. ஞானியும் குழந்தையும்
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
ஒருவர் கேட்டார்:
மறைநூல்களில் ஏன் ஞானி ஒரு குழந்தையைப் போல என்று சொல்லியுள்ளனர்?
மகரிஷி: ஒரு குழந்தையும் ஞானியும் ஒரு விதத்தில் ஒரே மாதிரி தான். நிகழ்ச்சிகள், அவை நிகழும் சமயத்தில் மட்டுமே குழந்தைகளைக் கவரும். நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தவுடன், அவற்றில் ஒரு குழந்தைக்கு ஆர்வம் இருக்காது. இதிலிருந்து, நிகழ்ச்சிகள் குழந்தையின் மனதில் மனப்பதிவு ஒன்றும் உண்டாக்குவதில்லை என்று தெரிகிறது. அவற்றால் குழந்தையின் மனம் சஞ்சலப் படுவதில்லை என்றும் புரிகிறது. ஞானியும் அதே போல் தான்.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
மே 15, 1935
உரையாடல் 9.
9. ஞானியும் குழந்தையும்