
நான் யார் ? (22)
ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி
(வினா-விடை வடிவம்)
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய
நான் யார்? (தொடர்ச்சி)
22. நனவிற்கும், கனவிற்கும் பேதமில்லையா?
நனவு (ஜாக்ரம்) தீர்க்கம், அதாவது நீண்டது, கனவு (சொப்பனம்) க்ஷணிகம், அதாவது சுருக்கமானது, என்பது தவிர வேறு பேத மில்லை. ஜாக்ரத்தில் நடக்கும் விவகாரங்க ளெல்லாம் எவ்வளவு உண்மையாகத் தோன்றுகின்றனவோ, அவ்வளவு உண்மையாகவே சொப்பனத்தில் நடக்கும் விவகாரங்களும் அக்காலத்தில் தோன்றுகின்றன. சொப்பனத்தில் மனம் வேறொரு தேகத்தை எடுத்துக் கொள்கிறது. ஜாக்ரம் சொப்பன மிரண்டிலும், நினைவுகளும் நாமரூபங்களும் ஏக காலத்தில் நிகழ்கின்றன.
நான் யார் ? (22)