Occult powers
8. புனித மந்திரங்கள்
6. சஞ்சலப்படும் மனம்

7. மாய வித்தைகள்

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்

தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா

பகவானிடம் மாய தந்திர வித்தைகளைப் பற்றி, சித்திக்களைப் பற்றி, கேள்வி கேட்கப்பட்டது.

தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தின் கடைசி வரிசையில் சொன்னபடி, சுய ஆன்மாவை உணர்வதின் அனந்தசக்தியுடன் (ஈஸ்வரத்துவம்), தந்திர சாதனைகள் செய்யும் சித்திக்களும் (மாய வித்தைகள் செய்யும் சக்திகள்) அடைய முடியுமா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, மகரிஷி இவ்வாறு கூறினார்: “முதலில் அனந்தசக்தி நிலை (ஈஸ்வரத்துவம்) அடையப்படட்டும். அதன் பிறகு (மாய வித்தைகள் செய்யும் சக்திகளைப் பற்றி) அந்த இன்னொரு கேள்வி கேட்கப்படலாம்.

~~~~
குறிப்பு: 
கீழே திரு ஆதி சங்கரர் அளித்த தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தின் கடைசி வரிசையைக் காணலாம்.
“இந்தத் துதியில் எல்லாவற்றிலும் உள்ள ஆன்மாவின் சுயநிலை விளக்கப் படுகிறது. ஒருவர் இதைக் கேட்பதால், இதன் பொருளைப் பற்றி ஆழ்ந்த சிந்தனை செய்வதால், தியானம் செய்வதால், உச்சரித்து செபிப்பதால், அவர் நிச்சயமாக அனந்தசக்தி அடைவார். அதோடு எல்லாவற்றிலும், உறையும் ஆன்மாவின் மிக மேன்மையான நிலையுடன், அளவில்லாத எட்டு விதமான அசாதாரண சக்திகளும் அடைவார்.”

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
மே 15, 1935
உரையாடல் 7.

8. புனித மந்திரங்கள்
6. சஞ்சலப்படும் மனம்
7. மாய வித்தைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!