Realization exists beyond expression
15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது
13 B. ஆன்மா மட்டுமே உள்ளது

ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்ளது

ஒரு வயதானவர் வந்து கூடத்தில் அமர்ந்தார்.

மகரிஷி அப்போது சர்மாவின், அருணசல அக்ஷர மணமாலையின் திருத்தப்பட்ட சமஸ்கிருத பதிப்பைப் படித்துக் கொண்டிருந்தார். (அருணசல அக்ஷர மணமாலை, அருணசலர் மீது மகரிஷி அளித்து அருளிய தெய்வீகப் பாடல்களில் முதலாவதாகும்.)

வந்தவர் மென்மையாகக் கேட்டார்: ஆன்மஞானம் வெளிப்படுத்தி விவரிப்பதற்கு அப்பாற்பட்டதாகும் என்று சொல்லப் படுகிறது; வெளிப்பாடும் எந்த சமயத்திலும் ஆன்ம ஞானத்தை வர்ணிப்பதில் தோல்வியடைகிறது. இது எப்படி? 

மகரிஷி.: இந்த கருத்து அருணாசல அஷ்டகத்தின் இரண்டாவது வரிசையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதில் ஆன்ம அனுபவத்தை வெளிப்படுத்தி விவரிப்பது சாத்தியமற்றது என்று அங்கீகரித்துக் கொண்டாலும், ஆன்ம ஞானம் உள்ளது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதைக் கேட்டவுடன், அந்த மனிதர் உணர்ச்சி வசப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. அவரது சுவாசம் ஆழ்ந்தும் வலுவானதாகவும் இருந்தது. அவர் பிறகு தரையில் விழுந்து, பணிவுடன் நிலம் படிந்து வணங்கினார்.  ஒரிரு நிமிடங்கள் கழித்தே எழுந்து நின்றார்.  சில நேரத்திற்கு அமைதியாக இருந்த பின், கூடத்தை விட்டு வெளியேறிச் சென்றார்.

அந்த மனிதருக்கு ஒரு வித ஆன்மீக ஒளிர்வு நிகழ்ந்திருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர் மகரிஷியிடம் அதன் அங்கீகாரத்தையும் உறுதிப்படுத்தலையும் நாடினார். அதற்கு தகுந்தாற்போல், மகரிஷியும் விடையளித்தார். அந்த மனிதருக்கு உறுதி கிடைத்தது. தன் சார்பில் வந்த கடவுளின் தெய்வீக ஆதரவை பணிவுடனும் உணர்ச்சியுடனும் ஏற்றுகொண்டார். 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 8, 1935
உரையாடல் 14.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது
13 B. ஆன்மா மட்டுமே உள்ளது
14. ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!