Skip to main content

15. உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது

Supreme Spirit is subtle

உச்ச உயர்வான ஆன்மா நுட்பமானது உபநிஷதத்தின் ஒரு வாசகத்தைப் பற்றி கேள்வி கேட்கப் பட்டது : “தனிமுதன்மையான உச்ச உயர்வான ஆன்மா, நுட்பமானவற்றையெல்லாம் விட நுட்பமானது, மிகப் பெரியதானவற்றையெல்லாம் விட பெரியது.” மகரிஷி.: அணுவின் அமைப்பு கூட மனதால் தான் காணப்படுகிறது. எனவே மனம் அணுவை விட நுட்பமானது. மனதுக்குப் பின்னால் உள்ளது, அதாவது தனிப்பட்ட ஆன்மா, மனதை விட நுட்பமானது. மேலும், தமிழ் முனிவர் மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார் : சூரிய ஒளியின் ஒரு கதிரொளி கிரணத்தில் நடனமாடும் […]

14. ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்

Realization exists beyond expression

ஆன்ம ஞானம் விவரிப்புக்கு அப்பால் உள்ளது ஒரு வயதானவர் வந்து கூடத்தில் அமர்ந்தார். மகரிஷி அப்போது சர்மாவின், அருணசல அக்ஷர மணமாலையின் திருத்தப்பட்ட சமஸ்கிருத பதிப்பைப் படித்துக் கொண்டிருந்தார். (அருணசல அக்ஷர மணமாலை, அருணசலர் மீது மகரிஷி அளித்து அருளிய தெய்வீகப் பாடல்களில் முதலாவதாகும்.) வந்தவர் மென்மையாகக் கேட்டார்: ஆன்மஞானம் வெளிப்படுத்தி விவரிப்பதற்கு அப்பாற்பட்டதாகும் என்று சொல்லப் படுகிறது; வெளிப்பாடும் எந்த சமயத்திலும் ஆன்ம ஞானத்தை வர்ணிப்பதில் தோல்வியடைகிறது. இது எப்படி?  மகரிஷி.: இந்த கருத்து அருணாசல அஷ்டகத்தின் […]

13 B. ஆன்மா மட்டுமே உள்ளது

The Self alone Is

ஆன்மா மட்டுமே உள்ளது “ஆன்ம உண்மைத் தன்னிலையை உணர குரு அவசியமா ?” என்று திருமதி பிக்கட் (ஆங்கிலேய பெண்மணி) முதலில் கேட்டார். மகரிஷி: ஆன்மாவை உணர்தல் – அறிவுரைகள், சொற்பொழிவுகள், தியானங்கள் முதலியவற்றையெல்லாம் விட அதிகமாக, முக்கியமாக ஆசானாகிய குருவின் அருளால் தான் நிகழும். இவையெல்லாம் இரண்டாம்பட்சமான உதவிகள். ஆனால், குருவின் அருள் தான் பிரதானமான, இன்றியமையாத, மிக முக்கியமான காரணம்.  பக்தர்.: ஆன்ம தன்னிலையை உணர இடையூறு செய்யும் தடங்கல்கள் எவை? மகரிஷி.: அவை […]

13 A. சாந்தமான குரங்கு

Peaceful monkey

சாந்தமான குரங்கு திருமதி எம். ஏ. பிக்கட், என்ற ஒரு ஆங்கிலேயப் பெண்மணி, “ரகசிய இந்தியாவில் தேடல்” என்னும் புத்தகத்தைப் படித்து விட்டு, மகரிஷியைச் சந்திக்க வந்தார். மொழி பெயர்க்க, மகரிஷியின் பக்தர் ஒருவரின் சேவை வழங்கப்பட்டது. அப்போது கூடத்தில் வருகையாளர் பலர் இருந்தனர். அவர்களில் சிறு குழந்தைகளுடன் சில பெண்டிரும் இருந்தனர். கூடத்தில் அதிக சத்தம் இருந்தது. கடைசியில் சத்தம் ஓய்ந்து, அமைதி நிலவியது.  எங்கோ எல்லையற்ற விண்வெளியை பார்த்துக் கொண்டிருப்பது போல் தொன்றிய மகரிஷி, திடீரென்று […]

12. எனக்கு ஒன்றும் தெரியாது

Talk 12. I know nothing

எனக்கு ஒன்றும் தெரியாது ஒருவர் மகரிஷியிடம் எதாவது சொல்லும்படி கேட்டார். அவர் என்ன தெரிந்துக் கொள்ள விரும்புகிறார் என்று கேட்டபோது, அவர் தனக்கு ஒன்றுமே தெரியாதென்றும், மகரிஷியிடமிருந்து ஏதாவது கேட்க விரும்புவதாகவும் சொன்னார். ரமணர்: உங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று உங்களுக்குத் தெரியும். அந்த அறிவை கண்டுப் பிடியுங்கள். அது தான் ஆன்ம விடுதலை, முக்தி.  ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 மே 15, 1935 உரையாடல் 12. தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

11. தலைவிதி முடிவடையுமா

Can destiny end

தலைவிதி முடிவடையுமா பக்தர்: தலைவிதி கர்மம் எப்போதாவது முடிவடையுமா? ரமணர்: தலைவிதியும் கர்மங்களும் தாமே தமது முடிவின் விதைகளை வைத்துக் கொண்டு உள்ளன.  ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 மே 15, 1935 உரையாடல் 11. தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

10. மனதைக் கட்டுப்படுத்தல்

Controlling the mind

மனதைக் கட்டுப்படுத்தல் வருகையாளர் ஒருவர், மகரிஷி அருளிய உள்ளது நாற்பது அனுபந்தத்தின் 8வது செய்யுளில்1 உள்ள மகரிஷியின் அறிவுரைகளின்படி, உண்மை தன்னிலையை உணர்வது எப்படி என்று கேட்டார். அவரது கஷ்டம் மனதைக் கட்டுப் படுத்துவதில் இருந்தது.  மகரிஷி: மூச்சைக் கட்டுப்படுத்துவதால் மனதைக் கட்டுப்படுத்தலாம். இதை ஒருவர் தாமே வேறு உதவி ஏதுமின்றி செய்தால், மனம் கட்டுப்படும்.  இல்லையெனில், ஒரு உயர்வான சக்தியின் முன்னால், மனம் தானாகவே எளிதாக கட்டுப்பாட்டில் உறையும்.  இதுவே ஞானியரோடு சகவாசம் செய்து, தொடர்பு கொள்வதின் சிறப்பும் […]

9. ஞானியும் குழந்தையும்

Sage and child

ஞானியும் குழந்தையும் ஒருவர் கேட்டார்: மறைநூல்களில் ஏன் ஞானி ஒரு குழந்தையைப் போல என்று சொல்லியுள்ளனர்? மகரிஷி: ஒரு குழந்தையும் ஞானியும் ஒரு விதத்தில் ஒரே மாதிரி தான். நிகழ்ச்சிகள், அவை நிகழும் சமயத்தில் மட்டுமே குழந்தைகளைக் கவரும். நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தவுடன், அவற்றில் ஒரு குழந்தைக்கு ஆர்வம் இருக்காது. இதிலிருந்து, நிகழ்ச்சிகள் குழந்தையின் மனதில் மனப்பதிவு ஒன்றும் உண்டாக்குவதில்லை என்று தெரிகிறது.  அவற்றால் குழந்தையின் மனம்  சஞ்சலப் படுவதில்லை என்றும் புரிகிறது. ஞானியும் அதே போல் […]

8. புனித மந்திரங்கள்

Sacred mantras

புனித மந்திரங்கள் பக்தர்: “தற்செயலாக கிடைத்த புனித மந்திரங்களை ஜபிப்பதால் எவராக இருந்தாலும் அவருக்கு  அதன் பலன் கிடைக்குமா?” மகரிஷி: “இல்லை. ஒருவர் தகுதியுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் அவர் இத்தகைய மந்திரத்தை சரியான விதத்தில் தீக்ஷை பெற்றிருக்க வேண்டும்.  மகரிஷி இதை பின்வறும் கதையின் மூலம் விளக்கினார்.  ஒரு மன்னர் தமது மந்திரியை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றார். அங்கு மந்திரி தமது ஜபத்தில் ஈடுபட்டிருப்பதாக மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது.  மன்னர் மந்திரிக்காக காத்திருந்து, பின்பு அவரைக் கண்ட போது, […]

7. மாய வித்தைகள்

Occult powers

மாய வித்தைகள் பகவானிடம் மாய தந்திர வித்தைகளைப் பற்றி, சித்திக்களைப் பற்றி, கேள்வி கேட்கப்பட்டது. தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தின் கடைசி வரிசையில் சொன்னபடி, சுய ஆன்மாவை உணர்வதின் அனந்தசக்தியுடன் (ஈஸ்வரத்துவம்), தந்திர சாதனைகள் செய்யும் சித்திக்களும் (மாய வித்தைகள் செய்யும் சக்திகள்) அடைய முடியுமா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, மகரிஷி இவ்வாறு கூறினார்: “முதலில் அனந்தசக்தி நிலை (ஈஸ்வரத்துவம்) அடையப்படட்டும். அதன் பிறகு (மாய வித்தைகள் செய்யும் சக்திகளைப் பற்றி) அந்த இன்னொரு கேள்வி கேட்கப்படலாம்.“ ~~~~ குறிப்பு:  […]

6. சஞ்சலப்படும் மனம்

Distraction of mind

சஞ்சலப்படும் மனம் ஒரு துறவி, மனதின் கவனச் சிதறலை எப்படி முன்தவிர்த்து தடுப்பது என்பதைப் பற்றி கேள்வியொன்று கேட்டார். மகரிஷி: சுய தன்மையை, ஆன்மாவை மறந்து போவதால், பொருள்களைக் காண்கிறீர்கள். தன்னிலையான ஆன்மாவை பிடித்து வைத்துக் கொண்டால், வெளிப்புற உலகத்தை (ஆன்மாவை விட்டு தனியாக) காண மாட்டீர்கள். ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 மே 15, 1935 உரையாடல் 6. தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா  

5. கடலில் கரைந்த பொம்மை

Doll made of salt

கடலில் கரைந்த பொம்மை திரு மோரீஸ் ப்ரீட்மன் என்ற ஒரு பொறியாளர், அருள் என்னும் விஷயத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்: “உப்பால் செய்த ஒரு பொம்மை கடலில் மூழ்கும் போது, நீர்காப்பு கொண்ட உடையால் கூட அதை பாதுகாக்க முடியாது.” இது மிக்க மகிழ்ச்சியூட்டும் உவமை என்று எல்லோராலும் பாராட்டப்பட்டது. மகரிஷி மேலும் உறைத்தார், “உடல் தான் நீர்காப்பு கொண்ட உடை.” ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1 மே 15, 1935 உரையாடல் 5. […]

 
↓
error: Content is protected !!