Peaceful monkey
13 B. ஆன்மா மட்டுமே உள்ளது
12. எனக்கு ஒன்றும் தெரியாது

சாந்தமான குரங்கு

திருமதி எம். ஏ. பிக்கட், என்ற ஒரு ஆங்கிலேயப் பெண்மணி, “ரகசிய இந்தியாவில் தேடல்” என்னும் புத்தகத்தைப் படித்து விட்டு, மகரிஷியைச் சந்திக்க வந்தார். மொழி பெயர்க்க, மகரிஷியின் பக்தர் ஒருவரின் சேவை வழங்கப்பட்டது. அப்போது கூடத்தில் வருகையாளர் பலர் இருந்தனர். அவர்களில் சிறு குழந்தைகளுடன் சில பெண்டிரும் இருந்தனர். கூடத்தில் அதிக சத்தம் இருந்தது. கடைசியில் சத்தம் ஓய்ந்து, அமைதி நிலவியது. 

எங்கோ எல்லையற்ற விண்வெளியை பார்த்துக் கொண்டிருப்பது போல் தொன்றிய மகரிஷி, திடீரென்று மென்மையாக, “குரங்கு!” என்று சொன்னது கேட்டது.  அப்போது ஒரு இளம் குழந்தை வாயிலில், கதவருகில், கதவுக்கு மறுபுறத்தில் அமர்ந்திருந்த தனது அன்னைக்குத் தெரியாமல், ஒரு பெரிய குரங்கின் அருகில் காணப்பட்டது. குரங்கு தன் பின் கால்களின் நின்றவாறு, குழந்தைக்குச் சிறிதும் தீங்கு செய்யாமல், குழந்தையை அன்பாகக் கொஞ்சிக் கொண்டிருந்தது. இருவரும் மகரிஷியின் முன்னிலையில் மிகவும் அமைதியுடன் இருந்தனர்.  

மகரிஷியின் குரல் கேட்டவுடன், குரங்கு திறமையாக குதித்தோடி மறைந்தது.  இந்த நிகழ்ச்சி ஆங்கிலேய அம்மையாரை மிகவும் ஈர்த்தது. 

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 6, 1935
உரையாடல் 13.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

13 B. ஆன்மா மட்டுமே உள்ளது
12. எனக்கு ஒன்றும் தெரியாது
13 A. சாந்தமான குரங்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!