Controlling the mind
11. தலைவிதி முடிவடையுமா
9. ஞானியும் குழந்தையும்

மனதைக் கட்டுப்படுத்தல்

வருகையாளர் ஒருவர், மகரிஷி அருளிய உள்ளது நாற்பது அனுபந்தத்தின் 8வது செய்யுளில்1 உள்ள மகரிஷியின் அறிவுரைகளின்படி, உண்மை தன்னிலையை உணர்வது எப்படி என்று கேட்டார். அவரது கஷ்டம் மனதைக் கட்டுப் படுத்துவதில் இருந்தது. 

மகரிஷி: மூச்சைக் கட்டுப்படுத்துவதால் மனதைக் கட்டுப்படுத்தலாம். இதை ஒருவர் தாமே வேறு உதவி ஏதுமின்றி செய்தால், மனம் கட்டுப்படும்.  இல்லையெனில், ஒரு உயர்வான சக்தியின் முன்னால், மனம் தானாகவே எளிதாக கட்டுப்பாட்டில் உறையும்.  இதுவே ஞானியரோடு சகவாசம் செய்து, தொடர்பு கொள்வதின் சிறப்பும் மேன்மையுமாகும் (சத்சங்கம்).  

1 இதயமென்னும் குகையில் ஏக பரிபூரண பிரம்மம் கேவலம் தனித்து நின்று அந்த நான் நான் என்று ஆன்மாவாகத் தானே விளங்குகிறது. அதை அடைவதற்குத் தனக்குள்ளே ஆழ்ந்து போகின்ற மனத்தினாலோ, அல்லது வாயுவுடன் ஆழ்கின்ற மனத்தினாலோ இதயத்தைச் சார்வதினால் ஸ்திதப் பிரக்ஞனாக ஆவாய்.

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
மே 15, 1935
உரையாடல் 10.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

11. தலைவிதி முடிவடையுமா
9. ஞானியும் குழந்தையும்
10. மனதைக் கட்டுப்படுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!