விசார சங்கிரகம் – சுய விசாரணை (1)
பகவான் திரு ரமண மகரிஷி
மங்களம்
மிகவும் உயர்வான பராபரத்தில் உறுதியாக உறைந்து இருப்பதைத் தவிர, அதை வணங்குவதற்கு வேறு ஒரு வழி உள்ளதா!
(1)
பக்தர்: ஸ்வாமி! எப்போதும் துக்கமற்ற நித்யானந்த நிலை எய்துவதற்கு உரிய உபாயம் யாது?
மகரிஷி: எங்கு உடல் உள்ளதோ அங்கு துயரம் இருக்கும் என்று வேதத்தில் உள்ள அறிக்கையோடு கூட, இது தான் எல்லோருக்கும் உள்ள நேரடியான அனுபவமும் கூட. எனவே, ஒருவர் எப்போதும் உடலில்லாமல் உள்ள தன்னுடைய யதார்த்த சுய சொரூபம் இது தான் என்று விசாரித்து உணர்ந்து, உள்ளபடி இருப்பதே அந்த நிலையை எய்துவதற்கு உரிய உபாயம்.
~~~~~~~~
எளிதாக்கப்பட்ட தமிழில் வழங்குவது : வசுந்தரா
Simplied Tamil Version Offered By : Vasundhara
விசார சங்கிரகம் – சுய விசாரணை (1)