
விசார சங்கிரகம் – சுய விசாரணை (2)
(2)
பக்தர்: தனது யதார்த்த சொரூபத்தை விசாரித்து உணர்வது என்றால் என்ன?
மகரிஷி: “நான் சென்றேன்”, “நான் வந்தேன்”, “நான் இருந்தேன்”, “நான் செய்தேன்” என்பது போன்ற அனுபவங்கள் எல்லாம் எல்லோருக்கும் இயல்பாகவே சுபாவமாகவே வருகின்றன. இந்த அனுபவங்களிலிருந்தெல்லாம், “நான்” என்ற ஒரு போதம், ஒரு அறிவு தோன்றுகிறது இல்லையா? அந்த “நான்” என்ற போதத்தின் உண்மை வடிவை விசாரித்து, தானாக இருப்பதே தனது யதார்த்த சொரூபத்தை விசாரித்து உணர்வது என்பதாகும்.
~~~~~~~~
எளிதாக்கப்பட்ட தமிழில் வழங்குவது : வசுந்தரா
Simplied Tamil Version Offered By : Vasundhara
~~~~~~~~
விசார சங்கிரகம் – சுய விசாரணை (2)