What is Om... Aum... ॐ...
இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியமா
ஆன்ம சொரூபத்தின் முகம்

ஓம்… ॐ…என்றால் என்ன?

ஓம் என்பது எல்லா உயிர்களிலும் தொடக்கம், நடுவு, இறுதி இவை மூன்றுமாக விளங்குகிறது.  

 

தொடக்கம்

மகரிஷியின் விளக்கம்

ஓம் என்ற பிரணவ மந்திரத்தைப் போன்ற ஒரு மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி, நான் ஒரு மகரிஷியின் அதிகாரப்பூர்வமான விளக்கம் அளிப்பது தான் சரியானது. ரமண மகரிஷியின் சொற்களில் : “பேசும் பிரதேசத்தில், (ஆன்மீக சத்தம் ஓம் என்ற) பிரணவம், எல்லாம் கடந்த, குணங்களற்ற நிலையைக் குறிக்கிறது. ஓம் என்பது முடிவற்ற, நிலையான மெய்மையாகும். எல்லா பொருள்களும் மறைந்த பின்னர், மிஞ்சியிருப்பது தான் ஓம்.  அது எதிலும் ஒன்று சேருவதில்லை. “அங்கு ஒருவர் வேறு எதையும் பார்ப்பதில்லை, வேறு எதையும் கேட்பதில்லை, வேறு எதையும் அறிவதில்லை, அது தான் பரிபூரணம்”, என்று சொல்லப்படும் நிலை தான் ஓம் என்பதாகும்.  (சமஸ்கிருதத்தில் : யத்ர நான்யத் பஸ்யதி, நான்யத் ஸ்ருணோதி, நான்யத் விக்ஞாதி, ஸ பூமா.) எல்லா பயிற்சிகளும், வழிபாடுகளும், அதை அடைவதற்காகத் தான் உள்ளன. ஆனால், ஒருவர் பயிற்சிகளிலும், வழிபாடுகளிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது; “நான் யார்?” என்று விசாரணை செய்து, சுய சொரூபத்தை கண்டுபிடிக்க வேண்டும்.” 

நடுவு

ஓம் என்பதன் பொருள்

ஓம் என்ற தெய்வீகச் சொல், நிலையான, அறுதியான, வரையற்ற, அனைத்து வியாபித்துள்ள, அனைத்து சக்தி வாய்ந்த, பேரானந்தமான மெய்மையான சுய சொரூபத்தைக் குறித்துக்காட்டுகிறது. 

ஓம் அல்லது ஔம் (Om or Aum), மூன்று ஒலிகளால் அமைக்கப்பட்டதாகும். அ, உ, ம்.  அ என்பது தொடக்க ஒலி, உ என்பது நடு ஒலி, ம் என்பது இறுதியான ஒலி. அ என்பது துவக்கத்தைக் குறிப்பிட்டு உடலின் ஆழத்தில் எழுகிறது. உ என்பது நடுவைக் குறிப்பிட்டு தொண்டையில் எழுகிறது. ம் என்பது இறுதியை குறிப்பிட்டு மூடிய உதடுகளில் எழுகிறது. மூன்றும் சேர்ந்து எல்லா ஜீவன்களிலும் தொடக்கமாகவும், நடுவாகவும், இறுதியாகவும் விளங்கும் சச்சிதானந்தத்தை (சத்-சித்-ஆனந்தம்) குறித்துக்காட்டுகின்றன. 

மேலும், அ என்பது விழிப்பு நிலையையும், உ என்பது கனவு நிலையையும், ம் என்பது ஆழ்ந்த உறக்க நிலையையும் குறிப்பிடுகின்றது.  ஓம் என்பது ஜபிக்கப்படும்போது, சொல்லுக்குப் பிறகு ஒரு குறுகிய மௌனம் அனுசரிக்கப்படுகிறது. இந்த மௌனம் வரையற்ற பேரானந்த மெய்மையை குறிப்பிடுகிறது. 

ஓம் எங்கு உபயோகப்படுத்தப்படுகிறது

ஓம், (Auṃ or Oṃ, Devanagari: ॐ) ஒரு புனிதமான ஒலியாகும். இந்து மதத்தின் ஒரு ஆன்மீகச் சின்னமாகும். அது இந்து மதம், புத்த மதம்,  சமணம், சீக்கியம் – இவைகளிலும் ஒரு மந்திரமாகும். 

ஓம் என்பது இந்து மதம், புத்த மதம், சமணம், இவைகளின் பண்டைய, மத்திய காலங்களின் பிரதிகளிலும், கோயில்களிலும், மடங்களிலும் காணப்படும் தெய்வீகச் சின்னங்களில் ஒன்றாகும்.

இந்து மதத்தில் ஓம் என்றால் என்ன

இந்து மதத்தில், ஓம் ஒரு மிக முக்கியமான ஆன்மீகச் சின்னமாகும். அது தனிப்பட்ட ஜீவனுள் உறையும் ஆன்மாவைக் குறிப்பிடுவதுடன்,  மெய்மை, முழு பிரபஞ்சம், உண்மை, தெய்வீகம், மிக உயர்வான சுய உணர்வு, பிரபஞ்சம் சம்பந்தமான கொள்கைகள், அறிவு, ஞானம் – இவையெல்லாமுமான ஆன்மாவையும் குறிப்பிடுகிறது. இது வேதங்கள், மற்ற இந்து மறை நூல்களிலும், அவற்றின் துவக்க அத்தியாத்திலும், முடிவு அத்தியாத்திலும் அடிக்கடி காணப்படுகிறது.   ஆன்மீக உரைகள் ஓதுவதற்கு முன்னாலும், நடுவிலும், தனிப்பட்ட வழிபாடுகளின் போதும், திருமணம் போன்ற விழாக்களின் சடங்குகளின் போதும், யோகம் போன்ற ஆழ்நிலை தியானம் அல்லது ஆன்மீக நடவடிக்கைகளின் போதும், இந்த ஓம் என்பது ஒரு புனிதமான ஆன்மீக மந்திரமாக விளங்குகிறது. இந்தச் சொல், ஓம்காரம் (ओंकार, oṃkāra), ஔம்காரம்  (औंकार, auṃkāra), பிரணவம் (प्रणव, praṇava) – என்றெல்லாமும் குறிப்பிடப்படுகிறது.  

ஓம் பிரணவம் என்று சொல்லப்படுகிறது. மேலும், அக்ஷரம் – (அதாவது: ஒரே எழுத்து, அழிவில்லாதது, மாற்றமுடியாதது) – என்றும் சொல்லப்படுகிறது.  அதோடு, ஏகாக்ஷரம் – (அதாவது : எழுத்துத் தொகுதியின் ஒரு எழுத்து, ஒன்றாய் விளங்கும் ஒன்று), ஓம்காரம் (அதாவது : தொடக்கம், புனிதமான பெண்மை சக்தி) – என்றும் சொல்லப்படுகிறது.  

ஓம் ॐ என்னும் சமஸ்கிருத சின்னமானது, ஓ என்ற எழுத்தையும், ம் என்ற சந்திரபிந்து எழுத்தையும் கொண்ட பலல எழுத்துகளின் இணைப்பாகும். 

இந்து மதத்தில் ஓம் எப்படி உபயோகிக்கப்படுகிறது

வேதங்களின் மந்திரங்கள் ஓதுவதற்கு முன்னால் ஓம் என்னும் மந்திரத்தை உபயோகிப்பது இந்து மதத்தில் ஒரு நியமம் ஆகியது. உதாரணமாக, காயத்ரி மந்திரம் என்பது ரிக் வேதத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் ஒரு வரிசையாகும். அந்த மந்திரத்தின் முதலில், ஓம் உள்ளது; பிறகு “பூர் புவ ஸ்வஹ” (bhur, bhuva, swaha) என்பது, விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளைக் குறிப்பிடுகிறது. இத்தகைய பாராயணங்கள் இந்து மதத்தில் தொடர்ந்து நிகழ்கின்றன. மிக பெரும் மந்திர பூஜைகள், யக்ஞங்கள், புனித சடங்குகள், இவற்றின் தொடக்கத்திலும், முடிவிலும் ஓம் தொடர்ந்து உரைக்கப்படுகிறது.  

முடிவு

சுருங்கச் சொன்னால், ஓம் என்னும் மந்திரம், ஆன்ம சுய சொரூபத்தை உணர, ஆன்ம ஞானம் பெற, தியானம் செய்வதற்கு ஒரு உத்தமமான சாதனமாகும். ஓம் என்ற ஒரு சிறிய புனிதமான சொல்லில், அந்த ஒரே ஒரு, நிர்குணமான, வரையற்ற, எல்லாவற்றையும் கடந்துள்ள, மிகவும் சக்திவாய்ந்த, எங்கும் நிறைந்திருக்கும், பேரானந்தமான உண்மை சுயநிலையான ஆன்ம சொருபத்தைச் சுட்டிக்காட்டுகிறது. 

இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியமா
ஆன்ம சொரூபத்தின் முகம்

ஓம்… ॐ…என்றால் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!