Ramana Maharshi and Cow Lakshmi - Video
மிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு
ரமணாஸ்ரமம் ஏற்பட்டது

ரமண மகரிஷியும் பசு லக்ஷ்மியும்

ரமண மகரிஷிக்கு மிருகங்களுடன் அதிசயமான நட்பு இருந்தது. அவர் மிருகங்களை மிகவும் கருணையுடனும் அன்புடனும் நடத்தினார். ஆனால், தெய்வீகமான பசு லக்ஷ்மியைப் பற்றி ஜனங்கள் கேள்விப்படும்போது, ரமண மகரிஷியால் ஒரு வெறும் பசுவுக்கு இவ்வளவு மரியாதையும் முக்கியத்துவமும் ஏன் கொடுக்கப் படுகிறது என்று வியக்கலாம். பாரத நாட்டில் பொதுவாக ஒரு பசு, அது பசும்பால் எனும் உணவு தருவதாலும், மற்ற அதன் உபயோகங்களாலும், மேலும் அதன் அன்பான, பிரியமான பண்புகளாலும், புனிதமாகக் கருதப்படுகிறது என்பது உண்மை தான். ஆனால், லக்ஷ்மியைப் பொருத்தவரை, அவள் இதையெல்லாம் விட மிக மேன்மையாக இருந்தாள். அவள் பசுவானாலும், சில மனிதர்களை விடக் கூட புத்திசாலியாகவும், திறனுடனும் விளங்கினாள். அதோடு மட்டுமில்லாமல், பசு லக்ஷ்மியின் சிறப்பான, மேன்மையான ஆன்மீக குணங்கள் இருந்தது என்பது, அவள் ரமண மகரிஷியுடன் உறவாடிய விதத்திலிருந்தும், அவருடன் அவளது நடத்தைகளிலிருந்தும் தெளிவாகத் தெரிந்தது.

 

Cow lakshmi on pongal


ஆஸ்ரமத்திற்கு ஒரு சமயம்
ஒரு பசு தானமாகக் கொடுக்கப்பட்ட போது, திரு ரமண மகரிஷியே அதற்கு லக்ஷ்மி என்று பெயர் வைத்தார். அவளுக்கு மொத்தம் ஒன்பது கன்றுக்குட்டிகள் பிறந்தன. அவற்றில் நான்கு, ரமண பகவானின் பிறந்த நாட்களில் ஏற்பட்டன. இந்த பிறப்புகளில் ஒன்று நிகழந்த ஒரு நாளன்று, ரமணரின் உதவியாளர் திரு குஞ்சு ஸ்வாமி சொன்னார் : ரமணரின் பிறந்த நாளன்று பசு லக்ஷ்மிக்கு குழந்தை பிறந்திருப்பது அவளது மங்களம் தான்.” உடனே ரமணர் குறுக்கிட்டு சொன்னார்: “உம்மைத் திருத்திக் கொள்ளுங்கள், குஞ்சு ஸ்வாமி! லக்ஷ்மிக்கு கன்று பிறந்திருக்கும் மங்கள நாளன்று, என் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன!”

Ramana Maharshi and Animals


ரமணர் மாட்டுக் கொட்டிலுக்கு
முறையாகச் சென்று வந்தார். நாள் பூராவும் ஏதாவது ஒரு சமயத்திலாவது பகவானைப் பார்க்காமல், பசு லக்ஷ்மியால் இருக்க முடியவில்லை. அதோடு, லக்ஷ்மிக்கு ரமணருடன் மிகவும் பற்றுகையும் நேசமும் இருந்தது. அவள் தானாகவே மாட்டுக் கொட்டிலிலிருந்து, பகவானும் பக்தர்களும் அமர்ந்திருந்த கூடத்திற்கு நடந்து வந்து விடுவாள்.

Ramana and Lakshmi


ஒரு நாள், பசு லக்ஷ்மி கூடத்திற்கு வந்து,
தனது தலையை மகரிஷியின் தோள் மீது வைத்து அழுதாள். அவள் எதையும் சட்டை செய்யாமல், நேராக பகவானிடம் சென்று அவரது தோளில் கண்ணீர் சிந்தினாள். சுமார் அரை மணி நேரத்திற்கு, பகவான் ரமணர் அவளிடம், “ஏன் அம்மா இவ்வளவு சோகமாக இருக்கிறாய்? உன்னைப் பார்த்துக் கொள்ள நான் இங்கு இல்லையா? என்றவாறு சொல்லி, அவள் அழுவதை நிறுத்தும் வரை அவளை தேற்றினார். அவளது தலையை மிருதுவாக அன்புடன் வருடி, “யார் உன்னை துன்புறுத்தினார்கள்? அழுவதை நிறுத்து. நான் இங்கு உனது நண்பனாக இருக்கிறேன்” என்று சொன்னார். பசு லக்ஷ்மி பிறகு அழுவதை நிறுத்திவிட்டு, ஆறுதல் கொண்டு, அங்கிருந்து அகன்றுச் சென்றாள்.

Ramana Lakshmi 11

பசு லக்ஷ்மி புது கன்று பிறந்தவுடன், தானாகவே ரமணர் இருந்த கூடத்திற்கு வது, பகவானில் எதிரில் அசையாமல் நிற்பாள். பிறகு ரமணர் அவளை நோக்கி சொல்வார்: “லக்ஷ்மி, உனக்கு புது குழந்தை பிறந்திருக்கிறது என்று என்னிடம் சொல்வதற்காக இங்கு வந்திருக்கிறாய். சரி, நான் மாட்டுக் கொட்டிலுக்கு வந்து உன் குழந்தையைப் பார்க்கிறேன்” என்பார். ”

வருடந்தோறும் லக்ஷ்மி ரமண மகரிஷியின் நெருங்கிய பக்தர்களில் ஒருவராக விளங்கி வந்தாள். எப்போது அவள் ரமணரைக் காண வந்த போதும், அவர் அவளுக்கு மிகவும் கவனம் அளிப்பார். அவளை அன்புடன் தடவிக் கொடுத்து, அவளுக்கு வாழைப் பழங்கள், இட்லி போன்ற உணவுப்பொருட்கள் எல்லாம் தருவார். அவள் மிகவும் அதிகாரத்துடனும், உரிமையுடனும் ரமணரை அணுகிய விதத்தைக் கண்டு பல பக்தர்கள், அவளுக்கும் மகரிஷிக்கும் ஒரு பூர்வ பிறவியில் ஒருவித சிறப்பான பிணைப்பு இருந்திருக்க வேண்டும் என்று நம்பினர். ரமணர் பசு லக்ஷ்மிக்கு அளித்த அன்பும், பரிவும், அவளுடன் இருந்த நடவடிக்கைகளில் அவர் காண்பித்த கருணையும், விளக்குவதற்கு கடினமாக இருந்தன.

Ramana Lakshmi 13

பசு லக்ஷ்மி ஆஸ்ரமத்திற்கு நிறைய அதிர்ஷ்டமும், செல்வாக்கும் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது. இது ரமணரே சொன்ன உண்மையாகும்.

ரமண மகரிஷிக்கும் தெய்வீக பசு லக்ஷ்மிக்கும் இடையில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று பின்வருமாறு. திரு ஆர் நாராயண அய்யார் இவ்வாறு காட்சியை விவரித்தார்.

பசு லக்ஷ்மியின் பரிபூரண அமைதி

Ramana Lakshmi 5

 

“ஒரு முறை பசு லக்ஷ்மி கூடத்திற்கு வந்தாள். அப்போது அவள் கர்ப்பவதியாக இருந்தாள். பகலுணவு நேரத்திற்கு பின், பகவான் ரமணர் செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டிருந்தார். லக்ஷ்மி அவரருகில் வந்து காகிதங்களைச் சுவைக்க ஆரம்பித்தாள். பகவான் நிமிர்ந்து அவளை நோக்கி, “கொஞ்சம் இரு லக்ஷ்மி” என்றார். லக்ஷ்மி தாள்களை நக்கியவாறே இருந்தாள். பகவான் செய்தித்தாள்களை பக்கத்தில் வைத்து விட்டு, தமது கைகளை அவளது கொம்புகளின் பின்னால் அணைத்து, தமது தலையை அவளது தலையுடன் பொருத்தினார். இருவரும் இந்த நிலையில் நீண்ட நேரம் இருந்தனர். நாங்கள் எல்லோரும் இந்த அற்புதக் காட்சியை கண்டவாறு இருந்தோம். சில நேரத்திற்குப் பிறகு, பகவான் என் புறம் திரும்பி சொன்னார், ‘லக்ஷ்மி என்ன செய்கிறாள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவள் பரிபூரண மோனநிலையில் ஆழ்ந்து இருக்கிறாள்” என்றார். பசு லக்ஷ்மியின் கண்களிலிருந்து கண்ணீர் பொழிந்தது. அவளது கண்கள் பகவான் ரமணர் மீது உன்னிப்பாக, நிலையாக பொருந்தி இருந்தன.

கொஞ்ச நேரம் கழித்து, பகவான் லக்ஷ்மியிடம், “இப்போது எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார். லக்ஷ்மி தனது வாலையும் பின்புறத்தையும் ரமணருக்கு காட்ட விரும்பாமல், மரியாதையுடன் பின்னால் சென்று, செல்ல மனமில்லமால் கூடத்தை விட்டு அகன்று சென்றாள். அன்றிலிருந்து நாலாவது நாள், லக்ஷ்மிக்கு ஒரு கன்று பிறந்தது. இதுவரை அவளையும் அவளது மூன்று கன்றுகளையும் நகரத்தில் ஒருவர் பராமரித்து வந்தார். ஒரு நாள் அந்த மனிதர் லக்ஷ்மியையும் அவளது கன்றுகளையும் ஆஸ்ரமத்திலேயே விட்டு விட்டு சென்று விட்டார். லக்ஷ்மியும் அவளது மூன்று கன்றுகளும் கூடத்திற்கு வந்து ரமணரின் ஸோபாவிற்கு அருகில் அமர்ந்திருந்தனர். ரமணர் சொன்னார் : ‘இத்தனை நாட்களும், மாலையில் லக்ஷ்மிக்கு திரும்பிப் போக வேண்டியிருந்தது. அதனால் அவள் அழுதுக் கொண்டிருந்தாள். இன்று அவள் வேறெங்கும் போக வேண்டிய அவசியமில்லை என்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள். இப்போது இது தான் அவளுடைய இல்லம் என்று அவளுக்குத் தெரிகிறது. நாம் அவளை கவனித்துக் கொள்ள வேண்டும். பாருங்கள்! அவள் எவ்வளவு உரிமையுடன், சுய உறுதியுடன் இங்கு படுத்துக் கொண்டிருக்கிறாள்!”!

R. Narayana Iyer
Ramana Smruti

“தினம் தினம் பகவானுடன்” என்ற நூலில் பின்வரும்  நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்னவெனில், திரு ஷ்ராப் என்ற பக்தர் ஒரு முறை பூச்சிகளை அகற்றும் DDT என்னும் பொருளைக் கொண்டு வந்தார். பூச்சிகள் பகவானை பாதிக்காமல் இருக்க, அந்த பூச்சி மருந்தை கூடத்திலும், மேசை, நாற்காலி போன்றவற்றின் மீது தெளித்தார்.  பகவான் இவ்வாறு ஆலோசனை அளித்தார் : மாட்டுக்கொட்டிலில் இதை உபயோகித்தால், பசுக்கள் அவற்றைத் தொந்தரவு செய்யும் ஈக்கள், மற்ற பூச்சிகள் எல்லாம் இல்லாமல் இருக்கும்”, என்று சொன்னார். இதிலிருந்து, தம்மை விடக் கூட பசுக்கள் மீது இவ்வளவு அக்கறை ரமணருக்கு இருந்தது என்று தெரிகிறது. 

Day by Day with Bhagavan
Dec.  4, 1945

Ramana Maharshi and Cow Lakshmi

ரமணரின் பின்வரும் சொற்களும் ‘தினம் தினம் பகவானுடன்” என்ற நூலில் குறிப்பிடப் பட்டுள்ளன. அவர் சொன்னார்:  “மனிதப் பிறப்பு மட்டுமே தான் எல்லாவற்றிலும் உயர்வானது என்பதும், மனிதனாக இருந்தால் தான் ஆன்ம ஞானம் பெற முடியும் என்பதும்,  உண்மையில்லை. ஒரு மிருகம் கூட ஆன்ம ஞானம் பெற முடியும்” என்று சொன்னார். பிறகு தொடர்ந்த சம்பாஷணையில் அவர் மேலும் சொன்னார்:  “ஒரு கன்றாக, பிறந்து சில நாட்களே ஆன போதிலும், லக்ஷ்மி மிகவும் மிக அசாதாரணமாக நடந்துக் கொண்டாள். அவள் தினமும் என்னிடம் வந்து, தனது தலையை என் காலடியில் வைத்துக் கொள்வாள். புது மாட்டுக் கொட்டிலின் அடிவாரம் வைத்த நாளன்று, அவள் மிகவும் உற்சாகத்துடன், மிகுந்த களிப்புடன் என்னிடம் வந்து, என்னை அந்த புனித நிகழ்ச்சிக்கு அழைத்துக் கொண்டு சென்றாள். அது மட்டுமில்லாமல், கொட்டில் அமைத்து முடித்து தயாரான பின், அதன் கிரகப்ரவேசத்திறகு, நிகழ்ச்சியின் சரியான நேரத்தில், நேராக என்னிடம் வந்து என்னை அழைத்துச் சென்றாள். பல வித சந்தர்ப்பங்களில், பல விதங்களில், அவள் இவ்வளவு புத்திசாலித்தனத்துடனும், நல்லறிவுடனும் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால், அவள் ஒரு அசாதாரணமான பசு என்று ஒருவர் கருதத்தான் வேண்டியிருக்கும். நாம் அதைப் பற்றி என்ன சொல்ல முடியும்? ”

Day by Day with Bhagavan
Sep.  2, 1946


திருமதி நாகம்மா, தமது “ரமணாஸ்ரமத்திலிருந்து கடிதங்கள்” என்ற நூலில், பின்வரும் தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் சொல்கிறார்: 

நான் “பசுவின் வழிபாடு” என்ற தலைப்புடன் உனக்கு எழுதிய கடிதத்தில், பசுக்களில் அரசியான பசு லக்ஷ்மியின் சிறப்பைப் பற்றியும், பகவானுக்கு அவளிடம் இருந்த மரியாதையைப் பற்றியும் விவரித்திருக்கிறேன். அந்த அரசிக்கு, தமது அன்னைக்கு செய்த மாதிரியே, பகவான் ஒரு வெள்ளிக்கிழமையன்று விதேஹ முக்தி அளித்தார்.  அன்று காலை நான் ஆஸ்ரமத்திற்கு சென்ற போது, லக்ஷ்மி மிகவும் நோயுற்று உள்ளதாகவும், அவள் மேலும் ஒரு நாள் கூட பிழைத்திருக்க முடியாது என்றும் கேள்விப்பட்டேன். எனவே பகவானைக் கூட பார்க்காமல், நான் நேராக மாட்டுக்கொட்டிலுக்குச் சென்றேன்.  கன்றுகள் இருந்த அறை காலியாக்கப் பட்டு, சுத்தம் செய்யப்பட்டிருந்தது. லக்ஷ்மி படுத்துக் கொள்ள வைக்கோலினால் அமைக்கப் பட்ட ஒரு படுக்கை அளிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமையானதால், லக்ஷ்மியின் நெற்றியை மஞ்சளும் குங்குமமும் அலங்கரித்தது. அவள் கழுத்தையும் கொம்புகளையும் சுற்றி மலர் மாலை விளங்கியது. திரு வெங்கடரத்தினம் அவள் பக்கத்தில் அமர்ந்து விசிறிக் கொண்டிருந்தார். லக்ஷ்மி ஒரு கம்பீரப் பார்வையுடன் சுற்றிலும் பிரகாசம் வீசியபடி  படுத்திருந்தாள். இறைவன் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய காமதேனு கைலாசத்திற்கு சென்றதை இந்த காட்சி எனக்கு நினைவூட்டியது. 

நான் பகவானிடம் சென்று, வணங்கி எழுந்த போது, அவர் என்னை ஒரு தெய்வீகப் பார்வையுடன் நோக்கினார். இதை ஒரு ஆணையாக ஏற்றுக் கொண்டு நான் அவரிடம் லக்ஷ்மியுடன் இருந்து கவனித்துக் கொள்வதாக சொன்னேன். அவர் என்னுடன் இசைந்து தலையாட்டினார். நான் உடனடியாக அகன்றேன். வெங்கடரத்தினம் என்னிடம் விசிறியைக் கொடுத்து விட்டுச் சென்றார்.  அங்கே அமர்ந்தவாறே நான் ரமண மந்திரத்தின் பன்னிரண்டு எழுத்துக்களை ஜபிக்க ஆரம்பித்தேன். அதோடு, ரமண அஷ்டோத்தரத்தையும் ஜபிக்க ஆரம்பித்தேன். இதையெல்லாம் லக்ஷ்மி மிகவும் உன்னிப்பாக கேட்பது போல் தோன்றியது. 

பகவான் காலையில் 9:45 மணிக்கு மாட்டுக் கொட்டிலுக்கு வந்த போது, வழக்கம் போல லக்ஷ்மியைப் பார்க்க வந்தார். பகவான் வைக்கோலில், அவளருகில் அமர்ந்தார். அவளது தலையை தமது இரண்டு கைகளாலும் தூக்கினார். ஒரு கையை அவளது முகத்திலும் தொண்டையிலும் மிருதுவாக தடவினார். பிறகு இடது கையை அவளது தலையில் வைத்து, வலது கை விரல்களால் அவளது கழுத்திலிருந்து இதயம் வரை அழுத்தினார். இவ்வாறு கால் மணி நேரம் செய்த பின், அவர் லக்ஷ்மியிடம் சொன்னார்: “அம்மா, என்ன சொல்கிறாய்? நான் இங்கு மட்டுமே தனியாக உன்னுடன் இருக்க வேண்டுமென்று விரும்புகிறாயா? நான் இருக்க முடியும், ஆனால் என்ன செய்வது? மக்கள் எல்லோரும் என் அன்னையுடன் இருந்தது போல் உன்னைச் சுற்றிலும் இருக்கலாம். இருந்தாலும், எதற்கு? நான் போகட்டுமா?

லக்ஷ்மி அமைதியாக இருந்தாள். எல்லா உலக பந்தங்களும் இல்லாமல், உடல் வலிகள் ஏதும் இல்லாமல், பரிபூரண ஆழ்நிலையில் இருப்பது போல இருந்தாள். பகவான் விட்டுச் செல்ல மனமில்லாமல், கருணையால் நிரம்பிய உள்ளத்துடன் உட்கார்ந்திருந்தார். இதைப் பார்த்து நான் உணர்ச்சி வசப்பட்டு, என்னை அறியாமல் சொன்னேன் : அன்னை அழகம்மாளுக்கு மிகுந்த அதிருஷ்டம் இருந்தது. இப்போது அது லக்ஷ்மிக்கும் கிடைத்திருக்கிறது.” பகவான் புன்னகையுடன் என்னை நோக்கினார். திரு சுப்பிரமணியம் வந்து சொன்னார் : லக்ஷ்மிக்கு உடனடியாக அபாயம் இல்லாததால், மருத்துவர் பத்தரை மணிக்கு முன்னால் வரமாட்டார் போலிருக்கிறது. பகவான் கேட்டார்: “சரி. மருத்துவர் இப்போது வர மாட்டார். இன்ஜெக்‌ஷன் கொடுக்க மருந்து கொண்டு வந்திருக்கிறீர்களா?” பிறகு லக்ஷ்மியின் புறம் திரும்பி, மென்மையாக அவளது தலையையும் கழுத்தையும்வருடியபடி, அவர் சொன்னார் : “என்ன சொல்கிறாய்? நான் போகலாமா?” திருமதி சுப்பலக்ஷ்மி சொன்னார் : “பகவான் அவள் அருகில் இருந்தால், லக்ஷ்மி சந்தோஷப்படுவாள்.” பகவான் பதிலளித்தார் : “அப்படியா? ஆனால் என்ன செய்வது?” இப்படி சொல்லியபடி, லக்ஷ்மியின் கண்களுக்குள் பார்த்தபடி, பகவான் பிறகு சொன்னார் : “என்ன? நான் போகட்டுமா? நீ சொல்ல மாட்டாயா?” லக்ஷ்மி பெருமையாக அவரைப் பார்த்தாள். பகவான் அவளிடமிருந்து என்ன பதில் பெற்றாரோ எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவர் எழுந்து, “வாயில் பூச்சிகள் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு அகன்றுச் சென்றார். நான் பகவானிடம், நாங்கள் லக்ஷ்மியை மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறோம் என்று உறுதியளித்தேன். பின்பு மிகுந்த தயக்கத்துடன் பகவான் அந்த இடத்தை விட்டு விலகி சென்றார். 

பகவானின் புனிதமான ஸ்பரிசத்துடன், லக்ஷ்மியின் வெளிப்புற மூச்சு மெதுவாக இறங்க ஆரம்பித்தது. அவளது உடலின் அசைவுகள் குறைய ஆரம்பித்தன. மருத்துவர் பத்தரை மணிக்கு வந்த போது, ஒரு இன்ஜெக்‌ஷன் கொடுத்தார். லக்ஷ்மி சலனமின்றி, பாதிக்கப் படாமல், உடல் தனதில்லை என்பது போல் இருந்தாள். மரண வேதனை காணப்படவில்லை. அவளது பார்வை தெளிவாகவும் அமைதியாகவும் இருந்தது. மருத்துவர் அவளை நந்தியின் தோற்றம் போல் திருப்பி, கொப்பளங்களில் கொஞ்சம் மருந்து போட்டார். லக்ஷ்மியின் தலைக்கு கொஞ்சம் ஆதாரம் அளிக்கும்படி சொல்லிவிட்டு, மருந்துவர் போய் விட்டார். அப்போது 11:30 மணியாகி விட்டதால், திரு வெங்கடரத்தினம், சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தார். அவர் என்னிடம் லக்ஷ்மியின் தலையை சற்று உயர்த்திப் பிடித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு, தான் இன்னும் கொஞ்சம் வைக்கோல் கொண்டு வருவதாக சொன்னார். அவள் தலையை உயர்த்திய போது, அவளது நாக்கு என்னைத் தொட்டது. அது பனிக்கட்டி போல் சில்லென்று இருந்தது. லக்ஷ்மியின் வாழ்வு திரு ரமணரின் காலடியை அடைந்து, அவள் ரமணரில் உள்ளடங்கி விட்டாள். 

பத்து நிமிஷத்திற்குப் பிறகு, பகவான் மாட்டுக் கொட்டிலுக்கு “எல்லாம் முடிந்து விட்டதா?” என்று கேட்டபடி வந்தார். லக்ஷ்மியின் அருகில் உட்கார்ந்து, ஒரு சிறு குழந்தையை நடத்துவது போல், அவளது முகத்தை தூக்கி தன்னிரு கைகளில் ஏந்திக் கொண்டு “லக்ஷ்மி, லக்ஷ்மி!” என்றார். பிறகு தமது கண்ணீரை அடக்கிக்கொண்டு, எங்களிடம் சொன்னார் : “அவளால் தான், நமது குடும்பம், அதாவது ஆஸ்ரமம் இந்த அளவுக்கு பெருகியிருக்கிறது.” எல்லோரும் லக்ஷ்மியை புகழ்ந்துக் கொண்டிருந்தனர். அப்போது பகவான் கேட்டார், “மருத்துவர் அவளை ரொம்ப தொந்தரவு செய்யவில்லை இல்லையா?” அவளது உயிர் எப்படிப் பிரிந்தது?”  பிறகு என்னவெல்லாம் நடந்தது என்று நாங்கள் அவரிடம் சொன்னோம்.  பகவான் சொன்னார்: “சரி தான். இதைப் பார்த்தாயா? அவளது வலது காது இப்போது மேல்புறத்தில் இருக்கிறது.  நேற்று வரை அவள் அடுத்த பக்கத்தில் படுத்திருந்தாள். கொப்பளங்களால் அவள் இந்த பக்கம் திருப்பப்பட்டாள். அதனால், வலது காது மேல் பக்கம் வந்துள்ளது.  இதோ பார்! காசியில் மரணமடைவர்ளின் வலது காதில் இறைவன் சிவன் ரகசியமாக பேசுவார் என்று சொல்கிறார்கள். லக்ஷ்மியின் வலது காதும் மேற்புறம் உள்ளது” என்று சொல்லி விட்டு, பகவான் எல்லோருக்கும் அந்த காதைச் சுட்டிக் காட்டினார். அதற்குள், மிகுந்த கும்பல் கூடி விட்டது. ஒரு கால் மணி நெரத்திற்குப் பிறகு, பகவான் எழுந்து, பின் இவ்வாறு சொன்னார்: “பத்து நாளாக ராமகிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருக்கிறான், லக்ஷ்மிக்கு ஒரு நல்ல சமாதி அமைக்க வேண்டும் என்று”. பிறகு பகவான் அங்கிருந்து விலகி கூடத்திற்கு சென்று விட்டார்.  

Letters from Ramanasramam
July 20, 1948

Sri Lakshmi 1

பசு லக்ஷ்மி அமைதியாக, பகவானின் கருணையான கவனிப்புடன் காலமானாள். அவர் தமது அருள் மிகுந்த பார்வையை அவள் மீது பொருத்தினார். அவள் காலமான நாளன்று, லக்ஷ்மிக்கு சடங்கு முறைப்படி ஒரு அடக்கம் அளிக்கப்பட்டது. 

Sri Lakshmi 3 crop

ஒரு சமாதி கோவில் அவளது கல்லறை மீது கட்டப்பட்டது. அவள் உயிருடன் உள்ளது போன்ற ஒரு சிலை, சற்று சிறிதான அளவில், எழுப்பபட்டது.  இன்றும் அதை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

 Sri Lakshmi 2

மகரிஷி அவளது சிலைக்கு ஒரு கல்லறை வாசகம் எழுதினார். அது லக்ஷ்மியின் முக்தியை உறுதிப்படுத்துகிறது. ஒரு பக்தர் மகரிஷியை, “வாசகத்தில் உபயோகப்படுத்தப் பட்ட விமுக்தி என்ற சொல், ஒரு வழங்குமுறையா, அல்லது அது உண்மையில் முக்தியைக் குறிப்பிடுகிறதா?” என்று கேட்டபோது, மகரிஷி, “அது முக்தியைக் குறுப்பிடுகிறது” என்று பதிலளித்தார். இப்படித் தான், ரமண மகரிஷிக்கு மிகவும் பிரியமான தெய்வீகப் பசு லக்ஷ்மியின் புகழ்பெற்ற, சிறப்பு வாய்ந்த வாழ்க்கை விளங்கியது. 

மிருகங்களிடம் ரமண மகரிஷியின் அன்பு
ரமணாஸ்ரமம் ஏற்பட்டது
ரமண மகரிஷியும் பசு லக்ஷ்மியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!