
விசார சங்கிரகம் – சுய விசாரணை (16)
(16)
பக்தர்:
தான்மை, ஜீவன், ஆன்மா, பரப்பிரம்மம் – இவற்றை அடையாளம் கண்டு பிடிப்பது எப்படி?
மகரிஷி:
|
உதாரணம் |
உதாரணத்தால் விளக்கப் படுவது |
1 | இரும்புப் பந்து | தான்மை |
2 | சூடான இரும்புப் பந்து |
ஆன்மாவின் மேல் பொருத்தப் பட்டவாறு தோன்றும் ஜீவன் |
3 | சூடான இரும்புப் பந்தில் உள்ள நெருப்பு |
பிரக்ஞை உணர்வான ஜோதி, அதாவது ஒவ்வொரு ஜீவனிலும் பிரகாசிக்கும் மாற்றமுடியாத பரப்பிரம்மம் |
4 |
ஒன்றே ஒன்றாக விளங்கும் நெருப்பின் சுடர் |
ஒன்றே ஒன்றாக விளங்கும், எங்கும் பரவி விளங்கும் பரப்பிரம்மம் |
மேலே கொடுக்கப் பட்ட உதாரணங்களிலிருந்து, தான்மை, ஜீவன், சாட்சி, எல்லாவற்றின்-சாட்சி – இவை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கப் படுகிறது என்பது தெளிவாகும்.
கருமானிடம் உள்ள மெழுகுக் கட்டியில் பல விதமான, மிகப் பல உலோகத் துகள்கள் எப்படி சேர்ந்து கிடக்கின்றனவோ, அவை எல்லாம் எப்படி ஒரே மெழுகுக் கட்டி போல் தோன்றுகின்றனவோ, அதே போல், ஆழ்ந்த தூக்கத்தில், எல்லா தனிப்பட்ட ஜீவன்களின் ஜடமானதும் நுண்ணியதுமான உடல்கள் யாவும், கும்மிருட்டின் தன்மை உள்ள அறியாமையான பிரபஞ்ச மாயையில் சேர்ந்து உள்ளன; ஆன்மாவில் அதனுடன் ஜீவன்கள் ஒன்று சேர்ந்து விடுவதால், அவை எங்கும் இருட்டை மட்டுமே காண்கின்றன.
தூக்கத்தின் இருட்டிலிருந்து, நுண்ணிய உடல், அதாவது தான்மை, அந்த தான்மையிலிருந்து ஜட உடல், முறையே எழுகின்றன. தான்மை எழும்போதே, அது ஒரு சூடான இரும்புப் பந்து போல், ஆன்மாவின் தன்மை மீது பொருத்தப் பட்டவாறு தோன்றுகிறது.
இவ்வாறு, பிரக்ஞை-உணர்வு-ஜோதியுடன் ஒன்று சேர்ந்து உள்ள மனம் அல்லது தான்மையான தனிப்பட்ட ஜீவன் இல்லாமல், ஜீவனின் சாட்சி, அதாவது ஆன்மா கிடையாது. ஆன்மா இல்லாமல் எல்லாவற்றின்-சாட்சியான பரப்பிரம்மம் கிடையாது.
ஒரு இரும்புப் பந்து கருமானால் பல வித உருவங்களில் அடித்து உருவாக்கப்படும் போது, எப்படி அதில் உள்ள நெருப்பு எந்த விதத்திலும் மாறாமல் இருக்கிறதோ, அதே போல், ஒரு ஜீவன் பல வித அனுபவங்களில் ஈடுபட்டு இன்ப துன்பங்களை மேற்கொண்டாலும், அதில் உள்ள ஆன்ம-ஜோதி சிறிதளவும் மாறுவதில்லை.
மேலும், எங்கும் பரவி விளங்கும் விண்வெளியைப் போல, அது ஒன்றே ஒன்றான எங்கும் பரவி விளங்கும் சுத்தமான தூய ஞானமாகும். அது உள்ளத்தில், இதயத்தில், பரப்பிரம்மமாக பிரகாசிக்கிறது.
~~~~~~~~
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Translated from English into Tamil : Vasundhara
~~~~~~~~
குறிப்பு :
“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.
அவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார். திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.