ஆங்கிலேய அறிஞரின் கேள்விகள்
திரு W. Y. எவன்ஸ்-வென்ட்ஸ் என்பவர், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் கலாசாலையில் ஒரு ஆங்கிலேய அறிஞர். அவர் திரு பால் ப்ரன்ட்டன் கொடுத்த ஒரு அறிமுகக் கடிதத்துடன் மகரிஷியைச் சந்திக்க வந்தார்.
பயணத்தால் மிகவும் களைப்படைந்ததால், அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது. அவர் பாரத நாட்டுக்கு பல முறை வந்திருப்பதால், இந்திய வாழ்க்கை வழிமுறைகளில் பழக்கப்பட்டவர். அவர் திபெத்திய மொழியைக் கற்றுக்கொண்டு, ‘இறந்தவரின் புத்தகம்’, ‘மிலரேபாவின் வாழ்க்கை’ என்னும் நூல்களையும், ‘திபெத்தின் ரகசியக் கொள்கைகள்’ என்ற மூன்றாவது நூலையும், மொழி பெயர்க்க உதவியுள்ளார். மிலரேபா என்பவர் திபெத்தின் யோகிகளில் சிறந்தவர்.
மாலைப் பொழுதில், அவர் சில கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். அவை யோகப் பயிற்சியைச் சார்ந்தவையாக இருந்தன. புலி, மான் போன்ற மிருகங்களைக் கொல்வது சரியா, யோகாசனத்திற்காக உதவ மிருகங்களின் தோல்களை உபயோகிப்பது சரியா, என்று அறிந்துக்கொள்ள அவர் விரும்பினார்.
மகரிஷி.: மனமே தான் புலி அல்லது மான்.
பக்தர்.: எல்லாமே மாயை என்றால், உயிர்களைக் கொல்வது சரியா?
மகரிஷி.: யாருக்கு மாயை? முதலில் அதைக் கண்டுப் பிடியுங்கள்! உண்மையில், எல்லோரும் ஒவ்வொரு கணமும், ஒரு “ஆன்ம கொலையாளி” தான்.
பக்தர்.: யோகாசனத்திற்கு எந்த விதத்தில் அமர்வது சிறந்தது? (posture)
மகரிஷி.: எந்த விதமும் சரிதான்; முடிந்தவரை சுலபமான, சுகமான விதம். ஆனால், ஞான மார்க்கத்திற்கு இதெல்லாம் பொருளற்றது.
பக்தர்.: தோற்ற அமைவு (posture) மனப்போக்கைக் குறிப்பிடுகிறதா?
மகரிஷி.: ஆமாம்.
பக்தர்.: புலித்தோல், மான் தோல் முதலியவற்றின் குணங்களும், விளைவுகளும் என்ன?
மகரிஷி.: சிலர் அவற்றைக் கண்டுபிடித்து, சில யோகாசன நூல்களில் விளக்கியுள்ளனர். அவை படிகத்திண்மம், காந்த சக்தியின் மின்கடத்தும் திறன்கள், முதலியவற்றைச் சார்ந்த்ததாகும். ஆனால், ஞான மார்க்கத்திற்கு, அறிவு பாதைக்கு, இவையெல்லாம் பொருளற்றவை. உட்காரும் நிலை (posture) என்றால் இருப்பிடம் என்று பொருள்; ஆன்மாவில் நிலை உறுதியாக உறைவது என்று பொருள். அது உட்புற அகவியல்பானது. மற்றவை எல்லாம் வெளிப்புற நிலைகளைக் குறிக்கின்றன.
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 24, 1935
உரையாடல் 17.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா