
ரமணா நீ வேகமாய் வாராய் – பிரார்த்தனை
![]() |
![]() |
பிரார்த்தனை – வசுந்தரா
ரமணா நீ வேகமாய் வாராய்
ரமணா நீ வேகமாய் வாராய்
வேகமாய் வாராய், வந்தென் குறை தீராய்
வந்தென் மன இருளில், விளக்கேற்றி ஒளி தருவாய்
அருணசல சிவ, வேங்கட ரமணா
அகில லோக, பரம்பிரம்ம ஸ்வரூபா (ரமணா)
அன்பர்கள் ஆயிரம், ஐயங்கள் கொண்டு வந்தும்
ஐயா நின் கருணை நோக்கால், அமைதியுற அருள் புரிந்தாய்
எப்போதும் எதைச் செய்தும், இப்புவியே எனதானாலும்
தப்பாத அமைதியின்றி, திருவடி சரண் புகுந்தேன் (ரமணா)
தாயும் தந்தையும், உற்றார் உறவினரும்
தனயரும் நண்பரும், நின்னுருவில் யான் பெற்றேன்
எண்ணம் மொழி செயல் யாவும், நின் பதத்தில் சமர்ப்பித்தேன்
பொன்மய கருணை வடிவே, என் பிழை பொறுத்தருள்வாய் (ரமணா)
எண்ணங்கள் எழும்போதே, எதற்கென அறவே அகற்றி
‘நான்’ என்னும் ஒளியை நாடி, நடுநிலைப் பெற அருள்வாய்
பொல்லாத வினை தன்னை, பொய்யாக்கி நலம் பெற
மெய் ஞான வழி காட்டி, மோன நிலை உணரச் செய்வாய் (ரமணா)
மனமென்னும் சிறை தன்னில், மகிழ்வின்றி வருந்தி தவித்துன்
திருவடி நம்பினேன், திருவருள் மழை பொழிவாய்
பிறவிப் பெருங்கடலை, மனமென்னும் அலை கடலை
கடந்தே உள்ளகக் குகையில், பர நிலை பெற அருள்வாய் (ரமணா)
~~~~~~~~~~~~~~~~