ரமணர் மேற்கோள் 23

ரமணர் மேற்கோள் 23

ரமணர் மேற்கோள் 23 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 524 எழும் எண்ணங்கள் உங்களுடையவை. அவை தமது உள்ளமைக்கே உங்களைத் தான் ஆதாரமாகக் கொண்டுள்ளன. இந்த எண்ணங்களை நீங்கள் உபசரிக்கலாம், அல்லது விட்டு விடலாம். உபசரிப்பது பிணைப்பு, பந்தனம்; விட்டு விடுவது விடுவிப்பு, விமோசனம்.

ரமணர் மேற்கோள் 22

ரமணர் மேற்கோள் 22

ரமணர் மேற்கோள் 22 ரமண மகரிஷியின் போதனை ஞானியும் உலகமும், அத்தியாயம் 3 அது (ஆன்மா) மட்டுமே உள்ளது; படங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. நீங்கள் ஆன்மாவை விடாமல் பிடித்துக்கொண்டால், படங்களின் தோற்றங்களினால் ஏமாற்றப் பட மாட்டீர்கள். மேலும், படங்கள் தோன்றினாலும், மறைந்தாலும், பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.

ரமணர் மேற்கோள் 21

ரமணர் மேற்கோள் 21

ரமணர் மேற்கோள் 21 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 542 நல்ல மனிதர்கள் தங்கள் செயல்களுக்கு முன்னால் திட்டமிட விரும்ப மாட்டார்கள். ஏன்? ஏனெனில் நம்மை உலகத்தினுள் அனுப்பியிருக்கும் கடவுள் தாமே தமது திட்டம் ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறார். அது நிச்சயமாக தன்னால் தானே நடைபெற்று வரும்.

↓
error: Content is protected !!