ரமணர் மேற்கோள் 69
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 63
கோயில் கோபுரத்தில் உள்ள ஒரு வடிவம், கோபுரத்தின் சுமையை தன் தோள்களில் தாங்கிக் கொள்வது போல தோன்றும்படி அமைக்கப்பட்டுள்ளது. அதன் தோற்றப்பாங்கும் தோற்றமும், அது கோபுரத்தின் கனமான சுமையைத் தூக்கிக்கொண்டு சிரமப்படுவது போல் காட்சியளிக்கிறது. ஆனால் யோசித்துப் பாருங்கள். கோபுரம் தரையின் மீது கட்டப்பட்டுள்ளது. அது அதன் அடித்தளத்தின் மீது அமர்ந்துள்ளது. கோபுரத்தின் மீதுள்ள வடிவம் கோபுரத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் அது கோபுரத்தையே தாங்குவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இது வேடிக்கை தான், இல்லையா! ஒரு மனிதன், வினை செய்யும் உணர்வைத் தானே செய்வதாக எடுத்துக் கொள்வதும் இதே போலத்தான்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா
ரமணர் மேற்கோள் 69