ரமணர் மேற்கோள் 70
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 63
தூக்கத்தில் உலகம் இல்லை, “தான்மை” (வரையறுக்கப்பட்ட நான்) இல்லை, தொல்லையும் இல்லை. ஏதோ ஒன்று அந்த சந்தோஷமான நிலையிலிருந்து எழுந்து, “நான்” என்று சொல்கிறது. அந்த “தான்மைக்கு” உலகம் தோன்றுகிறது. உலகத்தில் ஒரு புள்ளியாக இருந்துக்கொண்டு மனிதன் இன்னும் அதிகமாக விரும்பி இன்னல் படுகிறான்.
தான்மை எழுவதற்கு முன்னால் எவ்வளவு சந்தோஷமாக இருந்தான்! தான்மை எழுவது மட்டுமே இந்த தற்போதைய தொல்லைக்கு காரணம். தான்மையின் மூலத்தை தடம்பின்பற்றி பார்க்கட்டும்; அவன் வேறுபாடுகள் இல்லாத, தூக்கமில்லாமல் தூங்கும் இன்ப நிலையை அடைவான்.
சுய சொரூபம் எப்போதும் ஒரே மாதிரியாக, இங்கே, இப்போது விளங்குகிறது. அடைவதற்கு வேறு ஒன்றுமே இல்லை. வரையறைகள் தவறாக ஏற்றுக் கொள்ளப்படவே, அவற்றைக் கடந்து அப்பால் செல்ல வேண்டிய அவசியம் உண்டாகிறது.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா