விசார சங்கிரகம் - சுய விசாரணை
விசார சங்கிரகம் - சுய விசாரணை (9)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (7)

விசார சங்கிரகம் – சுய விசாரணை (8)

(8)

பக்தர்:  

உட்புற உறுப்பான மனம் மட்டுமே ஜீவன், கடவுள், உலகம், இவை எல்லாவற்றின் உருவமாகவும் பிரகாசிக்கிறது, என்று ஏன் சொல்லப்படுகிறது?

மகரிஷி:

பொருட்களை அறிவதற்கு உதவும் கருவிகளான புலன்கள் வெளிப்புறம் இருப்பதால், அவை வெளிப்புறப் புலன்கள் என்று அழைக்கப் படுகின்றன. மனம் உட்புறம் இருப்பதால், அது உட்புறப் புலன் என்று அழைக்கப் படுகிறது.

ஆனால் உட்புறத்திற்கும் வெளிப்புறத்திற்கும் உள்ள வேறுபாடு உடலின் சம்பந்தமாக மட்டுமே உள்ளது. உண்மையில், உட்புறம் என்பதும் இல்லை, வெளிப்புறம் என்பதும் இல்லை. மனதின் தன்மை வெளி வானத்தைப் போல தூய்மையாக இருப்பதாகும்

உள்ளம் அல்லது மனம் என்று குறிப்பிடப்படுவது, உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் தோன்றும் உலக வாழ்வைச் சார்ந்த அம்சங்களின் ஒன்று கூடிய அமைப்பாகும். எனவே, பெயர்களும் உருவங்களும் கொண்ட நிகழ்வுகள் எல்லாம் மனதின் தன்மை மட்டுமே தான் என்பதில் சந்தேகம் இல்லை.

வெளிப்புறம் தோன்றுவதெல்லாம் உண்மையில் உள்ளே தான் உள்ளது; வெளியில் இல்லை. இதைக் கற்பிப்பதற்காகத் தான், வேதங்களில் கூட, எல்லாம் உள்ளம் அல்லது இதயத்தின் தன்மை கொண்டது தான் என்று விவரிக்கப் பட்டிருக்கிறது. இதயம் என்று அழைக்கப்படுவது, பிரம்மன் அல்லது மெய்யான ஆன்மாவைத் தவிர வேறொன்றுமில்லை.

~~~~~~~~

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
Translated from English into Tamil : Vasundhara

~~~~~~~~

குறிப்பு : 

“விசார சங்கிரகம்” என்பது ரமண மகரிஷி முதன் முதலாக வழங்கி அருளிய உபதேசங்களாகும். அவர் சுமார் 22 வயதான இளம் வாலிபராக இருந்த சமயத்தில் அவை வழங்கப்பட்டன. அவர் ஏற்கனவே தம் சுய சொரூப ஆன்ம ஞானத்தை முற்றிலும் உணர்ந்த, தெய்வீக அறிவின் பிரகாசமான பேரானந்தத்தில் உறைந்த பெரும் ஞானியாக விளங்கினார். அந்த சமயத்தில் அவர் அருணசல மலையின் மீது விரூபாக்ஷ குகையில் வாசம் செய்து வந்தார்.

அவரைச் சுற்றி ஏற்கனவே பக்தர்கள் சூழ்ந்துக் கொண்டு இருந்தனர். அவர் மௌன விரதம் எதுவும் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மிகவும் சிறிதளவே பேசினார். எனவே, அவரது முதன்முதலான பக்தர்களில் ஒருவரான திரு கம்பீரம் சேஷய்யா அவரிடம் சில கேள்விகள் கேட்டபோது, மகரிஷி அவருக்கு காகிதத்தில் எழுதி பதில் அளித்தார். திரு சேஷய்யா அவற்றை தனது தினக்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக்கொண்டார்.  திரு சேஷய்யா காலமான பிறகு, இந்தப் புத்தகம் அவரது சகோதரரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப் பட்டது. பிறகு திரு நடனானந்தா அந்த கேள்வி-பதில்களைத் தொகுத்து அமைத்தார். அந்த பிரசுரம் ரமண மகரிஷியின் அங்கீகாரத்துடன், “விசார சங்கிரகம்” (சுய விசாரணை) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.  பிறகு அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

விசார சங்கிரகம் - சுய விசாரணை (9)
விசார சங்கிரகம் - சுய விசாரணை (7)

விசார சங்கிரகம் – சுய விசாரணை (8)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!