Talk 42. How to get flashes of pure consciousness
43. இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி; மனக் கட்டுப்பாடு; மெய்யான “நான்”, பொய்யான “நான்”
41. சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா

42. பிரக்ஞை உணர்வின் மின்னல் போன்ற திடீர் ஒளிகளைப் பெறுவது எப்படி?

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 42.


திரு டங்க்கன் க்ரீன்லீஸ், மதனபள்ளியிலிருந்து பின்வருமாறு கடிதம் எழுதினார் :-

ஒருவருக்கு சில சமயங்களில், ஒரு பிரக்ஞை உணர்வின் தெளிவான, மின்னல் போன்ற திடீர் ஒளிகள் வருகின்றன. அந்த பிரக்ஞை உணர்வின் நடு மையம் சாதாரண சுயத்திற்கு வெளிப்புறத்திலும் உள்ளுக்குள்ளும் இருப்பதாகத் தெரிகிறது. மனதை வேதாந்த கருத்துக்களால் பாதிக்காமல், இந்த திடீர் ஒளிகளைப் பெறவும், விடாமல் வைத்துக் கொள்ளவும், அவற்றை நீடிக்கச் செய்யவும், பகவான் என்ன அறிவுரை அளிப்பார்? இத்தகைய அனுபவங்களில் பயிற்சி (அப்பியாசம்) செய்வது செயல்களிலிருந்து சாதாரண வாழ்விலிருந்து பின்வாங்கிக் கொண்டு வேறிடத்திற்குச் செல்வதாகுமா?

திரு பகவான் பதிலளித்தார் :

‘வெளிப்புறம்’ – யாருக்கு உட்புறமும் வெளிப்புறமும் உள்ளது? ஒரு நபரும் பொருளும் இருக்கும் வரையில் தான் இவை இருக்க முடியும். மறுபடியும், இவை இரண்டும் யாருக்கு உள்ளன? இவை இரண்டும் நபரினுள் தான் தீர்கின்றன. நபருக்குள் இருப்பது யார் என்று பாருங்கள். இந்த விசாரணை, நபருக்கு அப்பால் இருக்கும் தூய பிரக்ஞை உணர்வை அடைய உங்களுக்கு வழி காட்டும்.

சாதாரண சுயம் மனமாகும். இந்த மனம் வரையறைகள், குறைபாடுகள் கொண்டது. ஆனால் தூய பிரக்ஞை உணர்வு வரையறைகளுக்கெல்லாம் அப்பால் உள்ளது. அது சற்று முன்பு  விவரிக்கப்பட்ட விசாரணையினால் அடையப்படுகிறது. 

பெறுவது – ஆன்மா எப்போதும் உள்ளது. ஒருவர் ஆன்மாவின் புலப்பாட்டிற்கு உள்ள தடங்கல்களை நீக்குவதைத் தான் நாடுகிறார்.

வைத்துக் கொள்வது – ஆன்மாவை அடைந்த பிறகு, ஆன்மா இங்கு இப்போது உள்ளது என்பது புரிந்துக் கொள்ளப் படுகிறது. அது ஒரு போதும் இழக்கப்படுவதே இல்லை.

நீடிக்கச் செய்வது – ஆன்மா எப்போதும் சுருங்குதலும் விரிவாக்கமும் இல்லாமல் இருப்பதால், அதை நீடிக்கச் செய்வது என்பது கிடையாது.  

சாதாரண வாழ்விலிருந்து பின்வாங்குதல் – ஆன்மாவில் உறைந்திருப்பது தான் தனிமை. ஏனெனில், ஆன்மாவைத் தவிர அந்நியமாக எதுவும் இல்லை. சாதாரண வாழ்விலிருந்து பின்வாங்குதல் என்பது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதாகும். முதல் இடமும், இன்னொரு இடமும் ஆன்மாவை விட்டு அகன்று இல்லை. எல்லாம் ஆன்மாவாக இருப்பதால், பின்வாங்குதல் ஒவ்வாதது, இயலாதது. 

பயிற்சி – பயிற்சி (அப்பியாசம்) என்பது ஆன்மாவினுள் விசாரணை செய்வதாகும். 

 

தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
செப்டம்பர் 24, 1936
உரையாடல் 42.

 

 

பக்தர்:

43. இன்னல்களிலிருந்து மீள்வது எப்படி; மனக் கட்டுப்பாடு; மெய்யான “நான்”, பொய்யான “நான்”
41. சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா
42. பிரக்ஞை உணர்வின் மின்னல் போன்ற திடீர் ஒளிகளைப் பெறுவது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!