Will-Power அல்லது மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது?
மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்கள் செயல்களையும் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும்

Will-Power அல்லது மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது?

Will-Power அல்லது மன உறுதி என்பது மிகவும் வசீகரமான விஷயம் தான். ஆனால், அந்த Will-Power என்பது குழப்பமான விஷயமாகவும், சரியாகப் புரிந்துக் கொள்ள முடியாத சிக்கலான விஷயமாகவும் இருந்து வருகிறது. 

Will-Power என்ற சொல், சாதாரணமாக இரண்டு விதத்தில் குறிப்பிடப் படுகிறது, அல்லது அறிந்துக் கொள்ளப் படுகிறது.

முதல் விதத்தில், Will-Power அல்லது மன உறுதி என்ற சொல், வெளிப்புறமாக, உலகத்தைச் சார்ந்த விதத்தில், பொருட்களைச் சார்ந்த விதத்தில் உபயோகிக்கப்படுகிறது.  இந்த விதத்தை நாம், “நமது தான்மை அகங்காரம் எப்படி ஆணையிடுகிறதோ அதே போல் நடந்துக் கொள்வது அல்லது செயல்படுவது” என்று கருதலாம். அது நடைபெறும் விதம் பின்வருமாறு. “எனக்கு என்ன வேண்டுமோ அதைப் பெறுவதற்காக மன உறுதியை வளர்க்க விரும்புகிறேன்; அல்லது,  நான் உலகத்தில் சாதிக்க ஆசைப் படுவதை சாதிப்பதற்காக மன உறுதியை வளர்க்க விரும்புகிறேன்; அல்லது, உலகத்தையும் ஜனங்களையும் என் விருப்பப்படி கட்டுப்படுத்துவதற்காக மன உறுதியை வளர்க்க விரும்புகிறேன்” என்பது போன்ற விதங்களில் அது செயல்படுகிறது.  

இரண்டாவது விதத்தில், Will-Power அல்லது மன உறுதி என்ற சொல், உள்முகமாக, ஆன்மீக விதத்தில், உள்ளத்தில் சொரூப ஆன்மாவை அறிவதற்காக மனதைக் கட்டுப் படுத்தும் விதத்தில் உபயோகிக்கப் படுகிறது. அல்லது மனத் திண்மைக்காக நல்ல வழக்கங்களை விருத்தி செய்வதற்காக உபயோகிக்கப்படுகிறது. இந்த விதத்தை நாம், “நமது தான்மை அகங்காரத்தின் கொடுங்கோன்மை அல்லது சர்வாதிகாரத்தை மறுத்து விட்டு, நமது மெய்யான தன்மையை உணர முயல்வது” என்று கருதலாம். அது நடைபெறும் விதம் பின்வருமாறு. “அலைபாயும் என் மனதை கட்டுப்படுத்தவும், ஆசைகளை அடக்கவும், உள்முகமாக திரும்பி உள்ளத்தில் மெய்யான சொரூபத்தை உணரவும், நான் மன உறுதியை வளர்க்க விரும்புகிறேன்”, என்பது போன்ற விதங்களில் அது செயல்படுகிறது.

இப்போது நான், இந்த Will-Power அல்லது மன உறுதி என்ற விஷயத்தைப் பற்றி ரமண மகரிஷிக்கும் சில பக்தர்களுக்கும் இடையே நிகழ்ந்த சில உரையாடல்களை வழங்குகிறேன். ரமணரின் இந்த அறிவுரைகள், Will-Power அல்லது மன உறுதியைப் பற்றி நமக்கு கற்பிக்கின்றன; மேலும் Will-Power அல்லது மன உறுதியைப் பற்றி நமக்கு இருக்கக் கூடிய தவறான கருத்துக்களையும் நீக்குகின்றன.

அந்த உரையாடல்கள் பின்வருமாறு.

உரையாடல் 423. ஒரு உரையாடல்.

ஒரு இளவயதுள்ள பக்தர் கேட்டார் : நான் Will-Power அல்லது மன உறுதியை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். அதை நான் எப்படி செய்வது?

மகரிஷி பதில் அளிக்கவில்லை. மௌனமாக இருந்தார்.

பக்தர்: நான் மூன்று வருடங்களுக்கு முன்பு இங்கு வந்தேன். அப்போது நீங்கள் மன வலிமைக்கு Will-Power அல்லது மன உறுதி தேவை என்று சொன்னீர்கள். அந்த சமயத்திலிருந்து, நான் அதை விருத்தி செய்துக் கொள்ள விரும்பிக் கொண்டிருக்கிறேன்; ஆனால் வெற்றில்லை.

மகரிஷி இப்போதும் பதில் அளிக்கவில்லை.

பக்தர்: இந்த கடந்த வருடங்களில் நான் நாலைந்து முறை பின்னேற்றம் அடைந்துள்ளேன். அவை என்னை மிகவும் பாதித்து விட்டது. என்னுடைய முயற்சிகளின் தோல்வி அடைவதைப் பற்றி எப்போதும் பயம் இருக்கிறது. இது என் மேல் எனக்குள்ள நம்பிக்கையில் குறைவை விளைவிக்கிறது. அது எனது எத்தனங்கள் அல்லது முயற்சிகளில் நிச்சயமாக தோல்வி ஏற்படும் என்று முன்னதாகவே ஒரு கருத்து எனக்கு ஏற்பட்டு விடுகிறது. வெற்றியைப் போல் எதுவுமே வெற்றி கொள்வதில்லை. அதே போல் தோல்வியைப் போல் எதுவுமே ஒருவரது முயற்சிகள் வெற்றி கொள்வதைத் தடுப்பதில்லை. அதனால் தான் இந்த கேள்வியைக் கேட்கிறேன்.

மகரிஷி இப்போதும் பதில் அளிக்கவில்லை.

பக்தர்: வெற்றிக்கு Will-Power அல்லது மன உறுதி தேவையில்லையா? அது வெற்றியை உறுதிபடுத்தும்; தோல்வியை நிராகரிக்கும்.

மகரிஷி இப்போதும் பதில் அளிக்கவில்லை.

பக்தர்: நான் Will-Power அல்லது மன உறுதி பெறுவதற்காக முயற்சி செய்கிறேன். இந்த வருடங்களுக்கெல்லாம் பிறகு, நான் எங்கே ஆரம்பித்தேனோ, அதே   நிலையில் இருப்பதாகக் காண்கிறேன். முன்னேற்றம் ஏதும் இல்லை.

மகரிஷி இன்னும் பதில் அளிக்கவில்லை.

பக்தர்: Will-Power அல்லது மன உறுதி பெறுவதற்கு வழிமுறைகள் என்ன?

மகரிஷி: உங்களுடைய Will-Power அல்லது மன உறுதி என்ற கருத்து, காப்பீடு செய்யப்பட்ட நிச்சயமான வெற்றி என்பதாகும். Will-Power அல்லது மன உறுதி என்பது வெற்றியையும் தோல்வியையும் ஒரே வித உள்ளச் சமநிலையுடன் எதிர்கொள்ளும் திறனை அளிக்கும் மன வலிமை என்று புரிந்துக் கொள்ள பட வேண்டும். அது நிச்சயமான வெற்றியுடன் ஒத்தது இல்லை.

ஒருவரின் முயற்சிகள் அல்லது எத்தனங்கள் ஏன் எப்போதும் வெற்றியில் அமைய வேண்டும்? வெற்றி ஆணவத்தை வளர்க்கிறது; அதனால் ஒருவரது ஆன்மீக முன்னேற்றம் நிறுத்தப் படுகிறது. அதற்கு மாறாக, தோல்வி ஒரு விதத்தில் நன்மை அளிக்கிறது; நலன் தருகிறது; அதாவது அது ஒரு மனிதரின் வரையறைகளையும் குறைபாடுகளையும் பற்றி, அவரது கண்களை திறக்க வைக்கிறது; தன்னை உயர்ந்த சக்தியிடம் சரணைடைய அவரைத் தயார் செய்கிறது.

ஆன்ம சரணகதி நிரந்தமான பேரானந்தத்துடன் ஒத்ததாகும். எனவே, ஒருவர் எப்போதும் எல்லா சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் சரி சம நிலை பெற முயற்சி செய்ய வேண்டும். அது தான் Will-Power அல்லது மன உறுதி. அதோடு மட்டுமில்லாமல், வெற்றியும் தோல்வியும் பிராப்தம் அல்லது ஊழ்வினையின் விளைவுகளே தவிர Will-Power அல்லது மன உறுதியினால் இல்லை. ஒரு மனிதர் நல்லதான மேன்மையான உயர்ந்த செயல்களை மட்டுமே செய்துக் கொண்டிருந்தாலும், தோல்வி காணலாம். மற்றொருவர் வேறு விதமாக செயல்களையே செய்தாலும், எல்லா விதத்திலும் வெற்றிகரமாக இருக்கலாம். இதனால், ஒருவரிடம் Will-Power அல்லது மன உறுதி இருக்கிறது என்றும், மற்றவரிடம் அது இல்லை என்றும் பொருளில்லை.

பக்தர்: உலகம் என்பது மனம் உண்டாக்கிய பொருள் என்று உள்ளது நாற்பது என்ற நூலில் சொல்லப் படவில்லையா?

மகரிஷி: ஆமாம்.

பக்தர்: அதிலிருந்து, வலிமையடைந்த மனம் உலகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்ற அர்த்தம் வருகிறதில்லையா?

மகரிஷி: தனது வெளிப்புற நடவடிக்கைகளினால், மனமானது உலகத்தை எழச் செய்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் மனதில் வலிமையை வீணாக்கி விரயம் செய்கின்றன. வெளிப்புற நடவடிக்கைகளை அடக்கி, மனம் தனக்குள் மட்டுமே இருப்பதில் தான் அதன் வலிமை இருக்கிறது.

பக்தர்: ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணத் தெரியாத ஒரு முட்டாள் இருக்கிறான். அவனது மனம், நிச்சயமாக ஒரு சிந்தனையாளரைப் போல அலைவதில்லை.  இந்த முட்டாள் அந்த சிந்தனையாளரை விட மேன்மையானவரா?  

மகரிஷி: அவன் ஒரு முட்டாள் என்று யார் சொல்கிறார்? உங்கள் மனம் அலையும் போது, தனது அலைச்சலில் அப்படி சொல்கிறது. 

பக்தர்: எண்ணங்களை அறவே நீக்கி விடுவதால் Will-Power அல்லது மன உறுதி பெறப்படுகிறதா?

மகரிஷி: அதை விட, ஒரே ஒரு எண்ணத்துடன் மட்டுமே இருப்பதால். இறுதியில், தூய பிரக்ஞை அறிவை மட்டுமே மிஞ்சியிருக்க வைத்து விட்டு, இந்த எண்ணமும் கூட மறைந்து விடும். ஆழ்ந்த ஒருமுக சிந்தனை இதற்கு உதவுகிறது. 

பக்தர்: அப்படியென்றால், Will-Power அல்லது மன உறுதி, மனதை வழிநடத்தி, ஆழ்ந்து ஒரு முக கவனம் கொள்வதால் பெறப் படுகிறது. அதற்கும் Personality அல்லது ஒருவரின் தனித்தன்மைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.  

மகரிஷி: Personality அல்லது ஒருவரின் தனித்தன்மை தான் வெளிப்புற நடவடிக்கைகளின் மூல காரணம். மிக்க உயர்வான நன்மையும் நலனும் பெற அது மூழ்க வேண்டும். 

இன்னொரு உரையாடல் :

வேறொரு உரையாடலின் போது மகரிஷி சொன்னார் : 

Will-power அல்லது மன உறுதி, அல்லது வேறு எதானாலும், அப்பியாசம் அல்லது பயிற்சியினால் பெறப் படுகிறது. 

பக்தர்: வெற்றி விளைவது குருவின் அருளின் ஆதரவினால் இல்லையா?  

மகரிஷி: ஆமாம், அப்படித்தான் உள்ளது. உங்களுடைய பயிற்சியே இத்தகைய அருளினால் தான், இல்லையா?  பயிற்சியினால் பலன்கள் விளைகின்றன; அவை தானாகவே பயிற்சியைத் தொடர்கின்றன. கைவல்ய உபநிஷதத்தில் ஒரு வரிசை இருக்கிறது. அது சொல்கிறது : “குருபரனே! நீங்கள் எப்போதும் எந்த சமயத்திலும் என்னுடனேயே இருந்து, என்னை பல பிறவிகளில் கவனித்துக் கொண்டு, நான் முக்தி பெறும் வரையில் எனது பாதையை நிர்ணயித்துக் கொண்டு இருந்திருக்கிறீர்கள்.” மகரிஷி தொடர்ந்து பேசினார். “ஒரு சந்தர்ப்பம் எழும்போது, ஆன்ம சொரூபம் வெளிப்பட்டு குருவாக வருகிறது. இல்லையெனில், குரு எப்போதும் உள்ளே இருக்கிறார்; எது தேவையோ அதை அப்போது செய்து வருகிறார்.”

உரையாடல் 453. இன்னொரு உரையாடல்.

ஒருவரது செயல் சரியானதா அல்லது தவறானதா என்பதைப் பற்றி ஒரு பெண்மணி மகரிஷியைக் கேட்டாள். மற்றவர் ஒருவரிடம் தவறு காண்பது ஒருவரின் சொந்த தவறே தான் என்று மகரிஷி குறிப்பிட்டார்.  “ஒருவரின் சொந்த பாவம் அல்லது தவறு வெளியில் பிரதிபலிக்கப்படுகிறது; பின் அந்த ஒருவர் தனது அறியாமையால் அதை மற்றொருவர் மீது வைக்கிறார்”, என்று அவர் சொன்னார்.

அவர்  சொன்னார்: “மேலும், நீங்கள் எவ்வளவு தான் அறிவுரை அளித்து ஆலோசனை சொன்னாலும், அதை கேட்பவர்கள் தங்களை திருத்திக் கொள்ளாமல் இருக்கலாம். நீங்கள் சரியாக இருந்துக் கொண்டு அமைதியாக இருங்கள். உங்களது சொற்களையும் செயல்களையும் விட அதிகமாக, உங்களது மௌனமும் அமைதியும் நல்ல விளைவுகளை உண்டாக்கும். அது தான் Will-Power அல்லது மன உறுதியை வளர்த்துக் கொள்வதாகும். பிறகு உலகமானது உங்களுக்குள்ளேயே இருக்கும் மோட்சத்தின் ராஜ்ஜியமாக ஆகி விடுகிறது.

உரையாடல் 350. இன்னொரு உரையாடல்.

மகரிஷி சொன்னார் :

“குரு என்பவர், தமது சீடருக்கு “தத்வமசி”, அதாவது “அது நீங்கள் தான்” என்பது போன்றதை கற்பிக்கிறார், பிறகு சீடர் “நான் பரபிரம்மம்” என்று உணர்கிறார், ” என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தமது அறியாமையினால், பரப்பிரம்மத்தை ஏதோ மிகப் பெரியதாகவும், மற்ற எல்லாவற்றையும் விட மிக வலிமையானதாகவும் கற்பனை செய்துக் கொள்கிறார்கள். வரம்புக்குட்பட்ட குறைபாடு கொண்ட “நான்” என்பதுடனே, மனிதன் ஏற்கனவே இவ்வளவு ஆணவத்துடன் கட்டுப்பாடின்றி காட்டுத்தனமாக இருக்கிறான். அதே “நான்” இன்னும் மிகப் பெரிய அளவாக வளர்ந்தால், பிறகு என்னவாகும்? அது மிகப் பெரிய அளவுக்கும அறியாமையுடனும் முட்டாள்தனமாகவும் தான் இருக்கும்!

இந்த பொய்யான “நான்” தொலைய வேண்டும். அதன் அழிவு தான் குரு சேவையின் பலன். ஆன்ம ஞானம் நிரந்தரமானது. அது குருவினால் புதிதாகக் கொண்டு வரப் படுவதில்லை.  அவர் அறியாமையை அகற்ற உதவுகிறார். அவ்வளவு தான்.

உரையாடல் 469. இன்னொரு உரையாடல்.

மகரிஷி சொன்னார் :

எவராவது ஒருவர், தான் ஏற்கனவே ஆன்ம சொரூபம் இல்லை, அல்லது ஆன்மாவை விட்டு அகன்று இருக்கிறார், என்று சொல்ல முடியுமா? முடியாது. ஏனெனில் எல்லோரும் ஆன்ம சொரூபத்தை உணர்ந்தவர்கள் தான்.

ஒரு மனிதரைத் துயரப்படுத்துவது என்னவென்றால், அசாதாரணமான, அபாரமான சக்திகளை இயக்கி உபயோகிக்க வேண்டுமென்ற அவரது ஆசை தான். அவ்வாறு செய்ய முடியாது என்று அவருக்குத் தெரியும். எனவே, “கடவுள் தனக்கு எதிரில் வந்து, தமது சக்திகளையெல்லாம் இந்த மனிதருக்கு அளித்து விட்டு, கடவுள் தம்மை பின்னணியில் வைத்துக் கொள்ள வேண்டும், ” என்று அந்த மனிதர் விரும்புகிறார். சுருங்கச் சொன்னால், கடவுள் தனது சக்திகளையெல்லாம் இந்த மனிதருக்காக விட்டுக் கொடுத்து துறந்து விட வேண்டும்!

ஒரு பக்தர்: பகவான் ரமணரைப் போன்ற மாபெரும் ஞானிகள், மகான்கள், இப்படியெல்லாம் வெளிப்படையாக நேராக சொல்வது சரி தான்.  உங்களிடம் மெய்மை திசை மாறாமல், நிலையாக இருப்பதால், நீங்கள் எல்லோருக்குமே அது எளிதானது என்று கருதுகிறீர்கள். ஆனால், சாதாரண ஜனங்களுக்கு உண்மையாக  கஷ்டம் இருக்கிறது.

மகரிஷி: அப்படியென்றால், யாராவது தான் ஆன்ம சொரூபம் இல்லை என்று சொல்கிறாரா?

பக்தர்: நான் சொல்ல விரும்பியது என்னவென்றால், மகரிஷியைப் போல விஷயங்களை நேராக, உண்மையாகச் சொல்வது போல சொல்வதற்கு வேறு யாருக்குமே தைரியம் கிடையாது, ” என்பது தான். 

மகரிஷி: உள்ளதை உள்ளபடி சொல்வதில் தைரியம் எங்கு இருக்கிறது?

உரையாடல் 534. இன்னொரு உரையாடல்.

ரமண பகவான் அடிக்கடி சொல்வார் : மௌனம், உள்முக ஆழ்ந்த அமைதி, இது தான் மிகவும் உயர்வான சொல் திறம். எப்படி? ஏனெனில், இத்தகைய நிலையில், ஒரு மனிதர் தனது சொரூப தன்மையில் தங்குகிறார். எனவே அவர் ஆன்மாவின் எல்லா உட்பகுதிகளையும் ஊடுருவி வியாபித்து விளங்குகிறார். இப்படி இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும், தேவைப்படும் போதெல்லாம், அவர் எந்த சக்தியையும் அழைத்து இயக்க முடியும். அது தான் இருப்பதற்குள் மிகவும் உயர்ந்த சித்தி அல்லது சாதனையாகும்.

இங்கு, Will-Power அல்லது மன உறுதியைப் பற்றி திரு ரமண மகரிஷி அளித்த அறிவுரைகளைக் கொண்ட சில உரையாடல்கள் முடிவடைகின்றன.

 

மிக உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்கள் செயல்களையும் விளைவுகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு விடும்
Will-Power அல்லது மன உறுதி என்ன? அதை எப்படி பெறுவது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!