சரணைடையுங்கள் எல்லாம் சரியாகி விடும்
ஒரு மகாராணி அடங்கிய குரலில் மென்மையாகவும் ஆனால் தெளிவாகக் கேட்கும்படியும் பேசினாள்.
பக்தர்.: “மகராஜ் ஜி, உங்களைப் பார்க்கும் நல்ல பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. உங்களைக் காணும் மகிழ்ச்சி என் கண்களுக்கு உள்ளன. உங்கள் குரலைக் கேட்கும் மகிழ்ச்சி என் காதுகளுக்கு உள்ளன. ஒரு மனிதர் விரும்புவது எல்லாம் கிடைக்கும் அதிர்ஷ்டம் எனக்கு இருக்கிறது. “
மகாராணியின் குரல் தழுதழுத்தது. மிகவும் கடினத்துடன் மனதை வலிமையாக்கிக் கொண்டு அவள் தொடர்ந்து பேசினாள். “ஒரு மனிதர் விரும்பக் கூடிய எல்லாம் என்னிடம் இருக்கிறது… ஆனால்…ஆனால்… எனக்கு…எனக்கு… மன அமைதி இல்லை…ஏதோ ஒன்று அதைத் தடுக்கிறது. ஒருவேளை என் தலைவிதி…”
சில நிமிடங்களுக்கு அமைதி நிலவியது. பிறகு மகரிஷி தமது இனிமையான தன்மையில் பேசினார்.
மகரிஷி.: சரி. என்ன சொல்ல வேண்டுமோ அது சொல்லியாகி விட்டது. சரிதான். தலைவிதி என்ன? சரணடையுங்கள், எல்லாம் சரியாகி விடும். எல்லா பொறுப்பையும் கடவுளின் மீது போட்டு விடுங்கள். சுமையை நீங்களே தாங்கிக் கொள்ளாதீர்கள். பிறகு தலைவிதி உங்களுக்கு என்ன செய்ய முடியும்?
பக்தர்.: சரணாகதி முடியாத காரியம்.
மகரிஷி.: ஆமாம். முழுமையான சரணாகதி முதலில் முடியாதது தான். ஆனால் ஓரளவிற்கு, ஒரு பகுதியான சரணாகதி கட்டாயம் எல்லோராலும் செய்ய முடியும். கூடிய காலத்தில், அது முழு சரணாகதிக்கு வழி காட்டும். சரணகதி செய்ய முடியவில்லை என்றால், என்ன செய்வது? மன அமைதி இல்லையே. அதை அடைய உங்களால் முடியவில்லையே. அது சரணாகதியால் தான் பெற முடியும்.
பக்தர்.: பாதி சரணாகதி…அது தலைவிதியின் முற்செயலை நீக்க முடியுமா?
மகரிஷி.: ஆமாம், நிச்சயமாக. அதால் நீக்க முடியும்.
பக்தர்.: தலைவிதி என்பது முந்தைய கர்மாவினால், பழவினையினால் இல்லையா? (Karma)
மகரிஷி.: ஒருவர் கடவுளிடம் சரணடைந்து விட்டால், கடவுள் அதைப் பார்த்துக் கொள்வார்.
பக்தர்.: தலைவிதி கடவுளால் வகுக்கப்பட்டு வழங்கப்படுவதால், கடவுளே அதை எப்படி நீக்க முடியும்?
மகரிஷி.: எல்லாம் கடவுளில் தான் உள்ளது.
தமிழில் மொழிபெயர்ப்பு : வசுந்தரா
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்.
உரையாடல் 244.