சொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வின் நோக்கத்தையே மாற்றும்
இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியமா
ஓம்... ॐ...என்றால் என்ன?

சொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வின் நோக்கத்தையே மாற்றும்

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 284

பக்தர்.: மகரிஷி ஏன் அங்கும் இங்கும் சென்று ஜனங்களுக்கு உண்மையை உபதேசித்து சொற்பொழிவுகள் தருவதில்லை? 

மகரிஷி.: நான் அப்படி செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்?  உபதேசமும் அறிவுரையும் வழங்குவது என்பது ஒரு மேடையை ஏற்படுத்தி, சுற்றி உள்ள மக்களுக்கு நீண்ட வீராவேசப் பேச்சு தருவதா? அறிவுரை வழங்குவது என்பது எளிய விதத்தில் அறிவை பரப்புவதாகும். அது ஆழ்ந்த மௌனத்தில் கூட  செய்யப்படலாம். 

[குறிப்பு : இங்கு மௌனம் என்பது மனதின் மௌனத்தைக் குப்பிடுகிறது. வாய்ப் பேச்சில்லாமல் இருப்பது மட்டுமில்லை.]

மகரிஷி: நீங்கள் இதை நினைத்துப் பாருங்கள். ஒரு மனிதர் ஒரு நீண்ட வலிய சொற்பொழிவை ஒரு மணி நேரத்திற்கு கேட்டுக் கொண்டிருந்து விட்டு, பிறகு வாழ்க்கையில் ஒரு மாறுதலும் இல்லாமல் அங்கிருந்து அகன்று செல்கிறார். மற்றொருவர், தெய்வீக முன்னிலையில் இருந்து விட்டு சிறிது நேரம் கழித்து தனது வாழ்வின் நோக்கமே மாறி அங்கிருந்து அகன்று செல்கிறார். இருவரையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இவற்றில் எது சிறந்தது? ஒரு பயனுள்ள விளைவும் இல்லாமல் சொற்பொழிவாற்றுவதா, அல்லது மௌனமாக அமர்ந்து உள்ளுணர்வான சக்திகளை மற்றவர்களின் மீது செயல்பட அனுப்புவதா? 

[குறிப்பு: இங்கு தெய்வீக முன்னிலை என்பது முக்கியமாக ஞானியின் ஆழ்ந்த அமைதியும் சாந்தியும் நிறைந்த மனப்பிரதேசத்தில் இருப்பது என்பதாகும். எனவே, சொற்பொழிவுகளை, அதிலும் பணத்திற்காகவும், புகழுக்காகவும் அளிக்கப்படும் சொற்பொழிவுகளைக் கேட்பதை விட, ஒரு சாந்தி நிறைந்த ஞானியின் மௌனமான உதவியை நாடுதல், அல்லது அவரது அறிவுரைகளின் சூழ்நிலையில் இருத்தல், இவை நமது வாழ்வில் அற்புதங்கள் நிகழ உதவும்.]

மகரிஷி: பேச்சு எங்கிருந்து எழுகிறது? முதலில் புலனாகாத அருவமான அறிவு உள்ளது. அதிலிருந்து ‘நான்’ என்னும்  தான்மை உணர்வு எழுகிறது. தான்மை உணர்வு  எண்ணங்களை எழச் செய்விக்கிறது. எண்ணம் சொற்களை எழச் செய்விக்கிறது.

எனவே 

புலனாகாத, அருவமான அறிவு-> அதிலிருந்து தான்மை->அதிலிருந்து எண்ணங்கள்->எண்ணங்களிலிருந்து சொற்கள்.

புலனாகாத அறிவிலிருந்து தான்மை எழுகிறது. தான்மையிலிருந்து எண்ணங்கள். எண்ணங்களிலிருந்து சொற்கள்.  

எனவே சொற்கள் மூலாதாரத்தின் கொள்ளுபேரனாகும். சொற்களே ஒரு விளைவை உண்டாக்க முடிந்தால், மூலாதாரமான மௌனத்தால் அறிவைப் பரப்புவது எவ்வளவு அதிக வலிமையாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்? நீங்களே மதிப்பிட்டு முடிவு செய்துக் கொள்ளூங்கள். 

~~~~~~~~

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்

உரையாடல் 20.

திரு. எவன்ஸ்-வென்ட்ஸ்.

மகரிஷி: உண்மையான சக்தி எது? செழிப்பை அதிகரிப்பதா அல்லது மன அமைதியை அதிகரிப்பதா?  எது சாந்தியும் மன அமைதியும் விளைவிக்கிறதோ அது தான் எல்லாவற்றிலும் மிகச் சிறந்த சித்தியாகும். 

பக்தர்.: ஆனால் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சாதாரண மக்கள் இத்தகைய மனப்போக்கை பாராட்ட மாட்டார்கள். அவர்கள்    சக்திகளை காட்டி விளம்பரம் செய்வது, சொற்பொழிவுகள் தருவது, இது போன்றவற்றை விரும்புவார்கள்.     

[குறிப்பு: இந்த பக்தர் ஒரு ஐரோப்பியராக இருந்ததால், அவர் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் மட்டும் குறிப்பிடுகிறார். ஆனால், உண்மை என்னவெனில், உலகம் முழுவதும் உள்ள எல்லா வித ஜனங்களும் இத்தகைய சக்தி காட்டுதலுக்கும், சொற்பொழிவுகளுக்கும் வசப்படுகிறார்கள் என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.]

மகரிஷி.: சொற்பொழிவுகள் மக்களைச் சிறிதும் மேம்படுத்தாமல் சில மணி நேரங்களுக்கு கேளிக்கை அளிக்கலாம். அதற்கு மாறாக மௌனம் நிலையானது, சாசுவதமானது. அது மனித குலம் முழுவதற்குமே சிறந்த பலன்களும், நன்மைகளும் அனுகூலங்களும் விளைவிக்கும்.  

பக்தர்.: ஆனால் மௌனம் யாராலும் புரிந்துக் கொள்ளப் படுவதில்லையே. 

மகரிஷி.: அதனால் பரவாயில்லை. மௌனத்தால் சொல்வன்மை, பேச்சுத்திறன் குறிப்பிடப் படுகிறது.  வாய்மொழியால் வழங்கப்படும் சொற்பொழிவுகள் மௌனத்தைப் போல் அவ்வளவு சொல்திறமிக்கது இல்லை.  மௌனம் என்பது இடைவிடாத சொல்வளம். முதன் முதலான ஆசான் திரு தக்ஷிணாமூர்த்தி தான் பூரணமான ஆசானாவார். அவர் தமது ரிஷி சீடர்களுக்கு மௌனத்தால் போதித்தார்.

பக்தர்.: ஆனால் அவருக்கு சீடர்கள் இருந்தார்கள். அதனால் அது சரி தான். இப்போது அப்படியில்லை. சீடர்கள் நாடப்பட்டு உதவப்பட வேண்டும்.  

மகரிஷி.: இது அறியாமையின் சின்னம். உலகத்தைப் படைத்த சக்தி தான் உங்களையும் படைத்திருக்கிறது. அந்த சக்தியால் உங்களை கவனித்துக் கொண்டு பாதுகாக்க முடிந்தால், அதே போல்  அதனால் உலகத்தையும் கவனித்துக் கொண்டு பாதுகாக்க முடியும்.  

இளமையில் ஆன்மாவின் தேடல் நடைமுறையில் சாத்தியமா
ஓம்... ॐ...என்றால் என்ன?
சொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வின் நோக்கத்தையே மாற்றும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!