Arunachala
அருணாசல அஷ்டகம்

அருணாசல பஞ்சரத்னம்

திரு ரமண மகரிஷி

 

(வெண்பா)

1.
அருணிறை வான வமுதக் கடலே
விரிகதிரால் யாவும் விழுங்கு மருண
கிரிபரமான் மாவே கிளருளப்பூ நன்றாய்
விரிபரிதி யாக விளங்கு.

பொருள்:
அருள்மயமாக நிறைந்த அமுத சொரூபக் கடலே! விரிந்து பரந்த ஞான ஒளிக்கிரணங்களால் அகில வஸ்துக்களையும், தன்னுள் விழுங்குகின்ற அருணாசலமென்னும் மலைவடிவ பரம்பொருளே! எனது இதயத் தாமரை நன்கு விரிந்து மலரும் வண்ணம், ஞான சூரியனாக எழுந்து அருள்வாயாக.

Meaning:
Ocean of nectar that is full of grace, engulfing the whole universe in Your splendid all-pervading rays of knowledge! Oh Arunachala, the Supreme Self Itself! May You exist as the Sun and open the lotus of my Heart in bliss!

2.
சித்திரமா மிஃதெல்லாஞ் செம்மலையே நின்பாலே
யுத்திதமாய் நின்றே யொடுங்கிடுமா னித்தியமு
நானென் றிதய நடித்திடுவை யாலுன்பேர்
தானிதய மென்றிடுவர் தாம்.

பொருள்:
செம்பொன் சுடராக ஒளிரும் அருணாசலனே! சித்திரமாகத் தோன்றும் மாயா காரியமான நாம-ரூபப் பிரபஞ்சம் எல்லாம் உன்னிடத்தில் தோன்றி, விளங்கி, உன்னிடத்திலேயே மறைந்து விடுகின்றன. நீயோ என்றென்றும் நான்-நான் என்று இதயத்தில் உள்ளுணர்வாக நடம் புரிவதால் உன் பெயர்தான் இதயமென்று உன்னை உணர்ந்த தபோதனர்கள் சொல்லுவார்கள்.

Meaning:
Oh Arunachala, the Red Mountain, in You alone the picture of the universe is formed, has its existence, and is dissolved. This is the sublime Truth. You are the Inner Self, who dances in the Heart as ‘I.’ So, it is said that ‘Heart’ is Your name, O Lord!

3.
அகமுகமா ரந்த வமலமதி தன்னா
லகமிதுதா னெங்கெழுமென் றாய்ந்தே யகவுருவை
நன்கறிந்து முந்நீர் நதிபோலு மோயுமே
யுண்கணரு ணாசலனே யோர்.

பொருள்:
உள்முக நோக்கத்தோடு கூடிய ஏகாக்கிரமான, குற்றமற்ற மனத்தினால், நான் என்ற தற்போதம் எங்கிருந்து உண்டாகிறதென்று நன்கு ஆராய்ந்தால், அந்த நான் என்னும் தன்மை, கடலில் கலந்துவிடும் நதியைப் போல தன்னுருவை உன்னில் இழந்து, அருணாசலா, உன்னிடத்திலேயே ஒடுங்கி விடும்.

Meaning:
With a one-pointed and untroubled mind that is turned inward, if it is searched deeply and understood well as to where the consciousness of ‘I’ arises from, that “I-ness” will lose its form and dissolve in You, Oh Arunachala, just like a river that merges into the ocean.

4.
வெளிவிடயம் விட்டு விளங்குமரு ணேசா
வளியடக்க நிற்கு மனத்தா லுளமதனி
லுன்னைத் தியானித்து யோகி யொளிகாணு
முன்னி லுயர்வுறுமீ துன்.

பொருள்:
சுயம்பிரகாச சொரூபமாய் விளங்கும் அருணாசலா! வெளிமுக விஷயங்களை நீக்கிவிட்டு, பிராணாயாமாதி யோகாப்பியாசத்தினால், நிச்சலமாக நிற்கக்கூடிய சாத்வீக மனத்தினால் இதயத்தில் பொருந்தி, இடைவிடாமல் உன்னை தியானித்து யோகியானவன் உன்னை சித்சொரூபமாகிய ஜோதி வடிவில் தரிசனம் பெற்று மிக உயர்ந்த ஜீவன் முக்தி நிலையினை அடைகிறான்.

Meaning:
Oh Arunachala, the Lord of self-shining brilliance! Abandoning external matters, one who meditates within, on You, with mind and breath controlled, that yogi sees Your divine light, attains salvation, and finds his bliss in You.

5.
உன்னிடத்தி லொப்புவித்த வுள்ளத்தா லெப்பொழுது
முன்னைக்கண் டெல்லாமு முன்னுருவா யன்னியமி
லன்புசெயு மன்னோ னருணாச லாவெல்கு
மின்புருவா முன்னிலாழ்ந் தே

பொருள்:
அருள்மிகு அருணாசலா! உன்னையே சரணாகதி யடைந்து, அனைத்தையும் உனக்கே ஒப்படைத்து தூய்மை நிறைந்த உள்ளத்தினால் சதாகாலமும், காணக்கூடிய அனைத்தையும் உன் சொரூபமாகவே கருதி, உன்னிடம் அனன்ய பக்தி செலுத்தும் உத்தம பக்தன், சுக சொரூபமான உன்னில் இரண்டறக் கலந்து பேரின்ப நிலையை எய்துகிறான்.

Meaning:
Having offered and surrendered the mind and heart to You, always seeing You, seeing everything as Your form, who always loves and glorifies You as none other than the Self, such a one is the master without rival, being one with You and dwelling in Your bliss, Oh Arunachala!

6.
அருண கிரிரமண னாரியத்திற் கண்ட
வருமறையந் தக்கருத்தே யாகு மருணா
சலபஞ் சகமணியைத் தண்டமிழ்வெண் பாவா
லுலகுக் களித்தா னுவந்து.

பொருள்:
அருணாசல க்ஷேத்திர பகவான் ரமணன், வடமொழியில் ஆர்யாகீத விருத்தத்தில் இயற்றிய இந்த அருணாசல பஞ்சரத்னம் உபநிஷத்துக்களின் கருத்தேயாகும். இதனை இனிய செந்தமிழ் வெண்பாவாக உலகத்தோருக்கு மகிழ்ச்சியுடன் மீண்டும் அருளினான்.

மேற்கண்ட செய்யுள் “தைவரதா” என்பவரால் முதலில் சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்டது. பிறகு ரமண மகரிஷி அதனை தமிழ் செய்யுளாக எழுதினார்.

Meaning:
Arunagiri Ramana bestowed Arunachala Pancharatnam in Sanskrit, which contains nothing but the quintessential wisdom of Vedanta and the Upanishads. He joyously offered it again in sweet Tamil Venbas, for the benefit of the world.

Note: Above verse was written in Sanskrit by Daivarata, and then written into Tamil verse by Bhagavan Ramana.

 

தனி (விருத்தம்)

அரியாதியி தரசீவர தகவாரிச குகையில்
லறிவாய்ரமி பரமாத்தும னருணாசல ரமணன்
பரிவாலுள முருகாநல பரனார்ந்திடு குகையார்ந்
தறிவாம்விழி திறவாநிச மறிவாயது வெளியாம்.

பொருள்:
விஷ்ணு முதலான அனைத்து ஜீவர்களின் இதயத்தாமரை என்னும் குகையில் பிரகாசித்து, ஆத்ம சொரூபமாய் ரமித்துக் கொண்டிருக்கும் பரமாத்மாவே அருணாசல ரமணனாகும். அவனை அடைய வேண்டுமானால் பக்தியினால் நெஞ்சுருகி, இதய குகையை அடைந்து, மெய்யறிவாகிய ஞானக் கண்ணைத் திறந்து நோக்கினால் அவ்வருணாசல ரமணனின் உண்மை சொரூபத்தை உள்ளபடி அறிவாய்.

ஒரு பக்தர் “ரமண” என்னும் சொல்லின் பொருளைப் பற்றி கேட்டதால், மேற்கண்ட செய்யுளை ரமண மகரிஷி அளித்தருளினார். 

Meaning:
In the recesses of the lotus-shaped Hearts of all, beginning with Vishnu, there shines as pure intellect (Absolute Consciousness) the Paramatman (all-pervading Self), who is the same as Arunachala Ramana. When the mind melts with love for Him, and reaches the inmost recess of the Heart wherein He dwells as the beloved, the subtle eye of pure intellect opens and He reveals Himself as Pure Consciousness.

Note: The above verse was written by Bhagavan in response to a devotee’s question concerning the meaning of the word ‘Ramana’.

வாழ்த்து
(முருகனார்)

வாழ்க வானரு ணாசல வண்பெயர்
வாழ்க வப்பெயர் வாய்துதி பஞ்சகம்
வாழ்க வாய்மலர் மாரம ணன்பதம்
வாழ்க வப்பத மன்னுநல் லன்பரே.

பொருள்:
வானோங்கு கருணை மிகுந்த அருணாசல வள்ளலின் திருநாமம் வாழ்க! அத்திருநாமம் வாய்க்கப் பெற்ற அருணாசல ஸ்துதி பஞ்சகம் வாழ்க! பகவான் ரமணனின் திருவாயிலிருந்து மலர்ந்து உதிர்ந்த திருமொழிகள் வாழ்க! மாண்புமிக்க ரமணாசாரியனுடைய திருவடிகளையே பற்றி உறுதியாக நிற்கும் அன்பர்களும் வாழ்க!

Praise of the Lord
By Sri Muruganar

Meaning:
May powerful Arunachala’s name, which liberally bestows grace, live forever!
May the Five Hymns bearing his name live forever!
May the feet of exalted Ramana, from whose tongue the Five Hymns flowered forth, live forever!
May the virtuous devotees who abide firmly in those feet live forever!

வாழ்த்து
(வேங்கடரமணய்யர்)

வாழி வாழி ரமண மகாகுரு
வாழி வாழி யருண மகாகிரி
வாழி வேங்கடன் வாய்சொலும் பாடல்கள்
வாழி யூழிதோ றன்பர்கள் வாழியே.

பொருள்:
வாழ்க வாழ்க! ரமண மகாகுரு வாழ்க! வாழ்க அண்ணாமலை! வாழ்க வேங்கடன் வாயிலிருந்து சொல்லும் பாடல்கள்! பல ஊழிக்காலம் எல்லா அன்பர்களும் வாழ்கவே.

Praise of the Lord
By Sri Venkataramana Iyer

Meaning:
Long live Ramana, the Great Master! Long live Aruna, the Great Hill!
Long live the Master’s words and songs! Long live His earnest devotees!

அருணாசல அஷ்டகம்
அருணாசல பஞ்சரத்னம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!