Arunachala Hill
அருணாசல அஷ்டகம் - 7

அருணாசல அஷ்டகம் – 8

திரு ரமண மகரிஷி
அருணாசல அஷ்டகம்
(எண்சீர் விருத்தம்)

8.
கடலெழு மெழிலியாற் பொழிதரு நீர்தான்
கடனிலை யடைவரை தடைசெயி னில்லா
துடலுயி ருனிலெழு முனையுறு வரையி
லுறுபல வழிகளி லுழலினு நில்லா
திடவெளி யலையினு நிலையிலை புள்ளுக்
கிடநில மலதிலை வருவழி செல்லக்
கடனுயிர் வருவழி சென்றிட வின்பக்
கடலுனை மருவிடு மருணபூ தரனே.

பொருள்:
கடலிலிருந்து எழுந்த மேகம் பொழிந்த நீரானது, கடலாகிய தனது இருப்பிடத்தைச் சென்றடையும்வரை தடை செய்யப் பட்டாலும் நிற்காது. அதுபோல உன்னிடத்தில் தோன்றுகின்ற ஜீவர்கள் மீண்டும் உன்னை வந்து அடையும் வரையில், பிராரப்த வினையினால் பல பிறப்புகள் எடுத்து எவ்வளவு காலம் உழன்று திரிந்தாலும் அங்கு நின்றுவிட மாட்டார்கள். உன்னை வந்தடைந்தே தீர்வார்கள். ஆகாசத்தில் எவ்வளவு காலம் எத்தனை உயரப் பறந்து திரிந்தாலும் பறவையால் அங்கு நிலைபெற முடியாது. அதுவந்து தங்குவதற்கான இடம் பூமியைத் தவிர வேறெதுவுமில்லை. அதுபோல உன்னிடத்தில் இருந்து உதித்து, உலக இன்ப-துன்பங்களில் உழலும் ஜீவர்களும், தாம் வந்த வழியை உள்முக நோக்கால் அறிந்து சென்றிட பேரின்பக் கடலாகிய உன்னை அடைந்துவிடுவர், அருணாசல பூதரனே!

Meaning:
The waters rise up from the sea as clouds, then fall as rain and run back to the sea in streams; nothing can keep them from returning to their source. Likewise the Jiva rising up from You cannot be kept from joining You again, though it may stray many times along the way. A bird which rises from the earth and soars into the sky can eventually find no place of rest except the earth. So indeed must all retrace their paths. And when the Jiva finds its way back to its source, it will sink and be merged in You, O Arunachala, You the Ocean of Bliss!

அருணாசல அஷ்டகம் - 7
அருணாசல அஷ்டகம் – 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!