Self-Realization and bliss
18. யோகிகளும் மாய வித்தைகளும்
17 D. போரும் கடுங்குற்றமும்

ஆன்ம ஞானமும் பேரானந்தமும்

திரு எவன்ஸ்-வென்ட்ஸ் ஆன்ம ஞானத்தைப் பற்றியும் “பரிபூரண மோன நிலை” (சமாதி) பற்றியும் கேள்விகள் கேட்டார். 

பக்தர்.: ஆன்ம ஞானம் பெற மகரிஷிக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது? 
மகரிஷி.: பெயரும், தோற்றமும் காணப்படுவதால் இந்த கேள்வி கேட்கப் படுகிறது. தான்மை உணர்வு ஊன உடலுடன் இணைந்துக் கொள்வதால் இந்த தோற்றங்கள் உள்ளன.

தான்மை உணர்வு (ego), கனவில் உள்ளது போல், நுண்ணிய மனதுடன் இணைந்துக் கொண்டால், தோற்றங்களும் நுட்பமாக உள்ளன. ஆனால் தூக்கத்தில் ஒரு காட்சியும் இல்லை. ஆயினும், தான்மை உணர்வு இருந்தது, இல்லையா?  அது இல்லையெனில், விழித்த பின் தூங்கிய நினைவு இருக்காது. தூங்கியது யார்? நீங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, தூங்கினேன் என்று நீங்கள் சொல்லவில்லை. இப்போது விழித்த நிலையில் அப்படி சொல்கிறீர்கள். எனவே  தான்மை உணர்வு, விழிப்பிலும், கனவிலும் தூக்கத்திலும் ஒன்றே தான். 

இந்த நிலைகளுக்கெல்லாம் அடிப்படையாக உள்ள ஆன்மாவைக் கண்டு பிடியுங்கள். அது தான் இவற்றுக்கெல்லாம் பின்னால் உள்ள உண்மை சுய நிலை. அந்த நிலையில், ஆன்மா மட்டுமே உள்ளது. நீ, நான், அவர், யாரும் கிடையாது. தற்காலம், கடந்த காலம், எதிர் காலம் எதுவும் கிடையாது. அது காலத்திற்கும், இடத்திற்கும் அப்பாற்பட்டது, விவரிக்க முடியாதது. அது எப்போதும் உள்ளது.

ஒரு வாழை மரம், பழங்கள் அளித்து, பின் அழிவதற்கு முன்னால் வேரில் குருந்துகள் துளிர்க்க விடுவது போல், பின்பு இந்த குருந்துகள் பெயர்த்து மீண்டும் நடப்பட்டபின் அதே விதமாக செய்வது போல், மௌனத்தால் தமது ரிஷி-சீடர்களின் சந்தேகங்களை அகற்றிய, பண்டைய, அசலான, பழங்கால குருவான தக்ஷிணாமூர்த்தி, எப்போதும் பெருகி வளரும் குருந்துத் துளிர்களை விட்டு விட்டுச் சென்றிருக்கிறார். குரு, அந்த தக்ஷிணாமூர்த்தியின் குருந்தாவார்.  ஆன்ம ஞானம் பெற்றபின்,  இந்த கேள்வி எழுவதில்லை.

பக்தர்.: மகரிஷி நிர்விகல்ப சமாதியில் நுழைகிறாரா?
மகரிஷி.: கண்கள் மூடியிருந்தால், அது நிர்விகல்பம். கண்கள் திறந்திருந்தால், (வேறுபட்ட தன்மையில் இருந்தாலும் பரிபூரண அமைதியில் இருப்பதால்), அது சவிகல்பம். எப்போதும் உள்ள உண்மை சுய நிலை, இயல்பான சஹஜ நிலையாகும்.  

குறிப்பு:

சமாதி என்பது ஆழ்நிலை தியானத்தின் மூலம் அடையப்பெறும் ஒரு தீவிரமான ஒருமுக சிந்தனையும் பரிபூரண அமைதியும் ஆகும். இந்து யோகத்தில் இது கடைசி நிலைப்படியாகக் கருதப்படுகிறது. அந்த நிலைப்படியில், இறைநிலையுடன் சங்கமம் அடையப்படுகிறது.

சமாதியைப் பற்றி திரு ரமண மகரிஷியின் விளக்கம்:

தூக்கம் சவிகல்ப சமாதி கேவல நிர்விகல்ப சமாதி சஹஜ நிர்விகல்ப சமாதி
(1) மனம் உயிருடன் உள்ளது (1) மனம் உயிருடன் உள்ளது (1) மனம் உயிருடன் உள்ளது (1) மனம் உயிரற்று உள்ளது
(2) உணர்வழிந்த நிலையில் மூழ்கி உள்ளது (2) முயற்சியால் மனம் ஆன்மாவைப் பற்றிக் கொள்கிறது (2) ஒளியில் மூழ்கி உள்ளது (2) ஆன்மாவில் கரைந்து உள்ளது
    (3) கிணற்றில் உள்ள தண்ணீரில் கிடக்கவிடப் பட்டுள்ள, கயிற்றுடன் இணக்கப்பட்டுள்ள ஒரு வாளி போல (3) தனது தனித்துவத்தை இழந்த நதி பெருங்கடலில் இரண்டறக் கலந்தது போல
    (4) வாளி கயிற்றின் மறு நுனியைப் பிடித்தவாறு வெளியில் இழுக்கப்படும் (4) பெருங்கடலிலிருந்து நதியைப் பிரிக்க முடியாது

Samadhi

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் – பகுதி 1
ஜனவரி 24, 1935
உரையாடல் 17.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

18. யோகிகளும் மாய வித்தைகளும்
17 D. போரும் கடுங்குற்றமும்
17 E. ஆன்ம ஞானமும் பேரானந்தமும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

↓
error: Content is protected !!