ரமணர் மேற்கோள் 74
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 68
பெண்மணி: தியானத்தையும் பணிகளையும் சமரசப் படுத்துவது எப்படி?
மகரிஷி: பணி செய்பவர் யார்? யார் பணிகள் செய்கிறாரோ, அவர் இந்தக் கேள்வியைக் கேட்கட்டும். நீங்கள் எப்போதும் சுய சொரூப ஆன்மா தான். நீங்கள் மனம் இல்லை. மனம் தான் இந்தக் கேள்விகளை எழுப்புகிறது. வேலை எப்போதும் ஆன்மாவின் முன்னிலையில் தான் நடைபெறுகிறது. ஆன்ம ஞானத்திற்கு வேலை தடங்கல் இல்லை. வேலை செய்பவர் யார் என்ற தவறான அடையாளம் தான் ஒருவரை இன்னல்படுத்துகிறது. தவறான அடையாளத்தை விட்டு விடுங்கள்.
தமிழில் ழொழிப்பெயர்ப்பு: வசுந்தரா

