ரமணர் மேற்கோள் 27 ரமணரின் அருள் மொழிகள், நான் யார்? புலன்களால் உணரக்கூடிய, நிகழ்வு சார்ந்த இந்த உலகம்…எண்ணத்தைத் தவிர வேறொன்றுமில்லை. உலகம் ஒருவரின் நோக்கத்திலிருந்து பின்வாங்கும் போது, அதாவது ஒருவர் எண்ணமின்றி இருக்கும்போது, மனம் ஆன்மாவின் ஆழ்நிலைப் பேரின்பத்தை அனுபவிக்கிறது. அதற்கு மாறாக, உலகம் தோன்றும் போது, அதாவது எண்ணம் ஏற்படும்போது, மனம் துன்பமும் துயரமும் அனுபவிக்கிறது.
You are browsing archives for
Category: ரமணரின் மேற்கோள்கள்
ரமணர் மேற்கோள் 26
ரமணர் மேற்கோள் 26 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 521 கடவுளிடம் சரணடைந்து மன வலிமைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகு, உங்கள் மனோபலத்தின் அளவிற்கு தகுந்தபடி, உமது சுற்றுப்புறங்கள் முன்னேறி உயர்வுபடும். பக்தர்: நமது செயல்கள் பயனுள்ளதாக இருக்குமா என்று தெரிந்துக் கொள்ள வேண்டாமா? மகரிஷி: தேச முன்னேற்ற லட்சியத்தின் பணிகளை காந்திஜி செய்யும் விதத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டு பின்பற்றுங்கள். முக்கியமான சொல் “சரணாகதி”.
ரமணர் மேற்கோள் 25
ரமணர் மேற்கோள் 25 ரமணரின் அருள் மொழிகள், நான் யார்? உண்மை என்னவென்றால், ஒவ்வொரு முறை நமது ஆசைகள் நிறைவேறும் போதும், மனம் மூலாதாரத்தின் புறம் திரும்பி, தனது இயல்பான தன்னிலையான சந்தோஷத்தையே தான் அனுபவிக்கிறது.
ரமணர் மேற்கோள் 24
ரமணர் மேற்கோள் 24 ரமணரின் அருள் மொழிகள், நான் யார்? பேரின்பம் என்பது ஆன்மாவே தான். பேரின்பமும் ஆன்மாவும் வெவ்வேறில்லை. அவை ஒன்றே தான். அது மட்டுமே மெய். இந்த சாதாரண உலகில் உள்ள எண்ணிலடங்காத பொருள்களில் ஒன்றில் கூட சந்தோஷம் என்பது கிடையாது. ஆழ்ந்த அறியாமையாலும், அறிவின்மையாலும் நாம் அவற்றிலிருந்து இன்பம் வருவதாக எண்ணி கற்பனை செய்துக் கொள்கிறோம். அதற்கு எதிராக, நமது மனம் வெளிப்புறத்தில் செல்லும்போது, துன்பமும் துயரமும் கொண்டு அவதிப் படுகிறது. […]
ரமணர் மேற்கோள் 23
ரமணர் மேற்கோள் 23 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 524 எழும் எண்ணங்கள் உங்களுடையவை. அவை தமது உள்ளமைக்கே உங்களைத் தான் ஆதாரமாகக் கொண்டுள்ளன. இந்த எண்ணங்களை நீங்கள் உபசரிக்கலாம், அல்லது விட்டு விடலாம். உபசரிப்பது பிணைப்பு, பந்தனம்; விட்டு விடுவது விடுவிப்பு, விமோசனம்.
ரமணர் மேற்கோள் 22
ரமணர் மேற்கோள் 22 ரமண மகரிஷியின் போதனை ஞானியும் உலகமும், அத்தியாயம் 3 அது (ஆன்மா) மட்டுமே உள்ளது; படங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. நீங்கள் ஆன்மாவை விடாமல் பிடித்துக்கொண்டால், படங்களின் தோற்றங்களினால் ஏமாற்றப் பட மாட்டீர்கள். மேலும், படங்கள் தோன்றினாலும், மறைந்தாலும், பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.
ரமணர் மேற்கோள் 21
ரமணர் மேற்கோள் 21 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 542 நல்ல மனிதர்கள் தங்கள் செயல்களுக்கு முன்னால் திட்டமிட விரும்ப மாட்டார்கள். ஏன்? ஏனெனில் நம்மை உலகத்தினுள் அனுப்பியிருக்கும் கடவுள் தாமே தமது திட்டம் ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறார். அது நிச்சயமாக தன்னால் தானே நடைபெற்று வரும்.
ரமணர் மேற்கோள் 20
ரமணர் மேற்கோள் 20 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 63 திறந்த மனத்துடன் உள்ளத்தினுள் ஆழ்ந்து ஆன்மாவை கண்டு பிடித்துக் கொள்ளுங்கள். உண்மை தன்னால் உங்களுக்கு விளங்கும்.
ரமணர் மேற்கோள் 19
ரமணர் மேற்கோள் 19 திரு ரமண மகரிஷி நான் யார்? கேள்வி 14 இது முடியுமா, முடியாதா என்ற சந்தேகத்திற்கு இணங்காமல் ஆன்மாவின் மீது தியானத்தில் விடாப்பிடியாக, உறுதியாக ஈடுபட வேண்டும். ஒருவர் ஒரு பெரும் பாவியாக இருந்தாலும், “நான் ஒரு பாவி, நான் எப்படி காப்பாற்றப் பட முடியும்?” என்று கவலைப் பட்டு கண்ணீர் விடாமல், நான் ஒரு பாவி என்ற எண்ணத்தை அறவே துறந்து ஆன்மாவின் மீது உன்னிப்பாக தியானம் செய்தால், கட்டாயம் வெற்றி […]
ரமணர் மேற்கோள் 18
ரமணர் மேற்கோள் 18 திரு ரமண மகரிஷி நான் யார்? கேள்வி 14 பக்தர்: பொருட்களின் மனப்பதிவுகள், ஆழ்ந்த கருத்துக்கள் (எண்ணங்கள்) – மனதில் மிஞ்சியுள்ள இவையெல்லாம் பெருங்கடலின் அலைகள் போல அலைபாய்ந்து வந்துக் கொண்டே இருக்கின்றன. எப்போது இவை எல்லாம் அழிந்து போகும்? ரமணர்: ஆன்மாவின் தன்னிலையின் மீது தியானம் அதிகரிக்க அதிகரிக்க, எண்ணங்கள் அழியப்பட்டு விடும்.
ரமணர் மேற்கோள் 17
ரமணர் மேற்கோள் 17 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 100 மனதின் குணங்கள் வெளியில் விளங்கும் பொருள்களாக உருவம் கொள்கின்றன. குணங்களின் மீது பிரதிபலிக்கும் ஒளி, பொருள்களை ஒளிர்விக்கின்றது. மனதின் குணங்களை கவனிக்காமல், அவற்றை ஒளிர்விக்கும் ஒளியைத் தேடுங்கள். மனம் அசையாது அமைதியாக நிற்கும். ஒளி தன்னால் தானே ஒளிர்ந்தபடி விளங்கும். உணர்ச்சி மிக்க செயல்பாடு, மந்தம், இவை இரண்டால் அலைபாயும் மனம் தான் சாதாரணமாக மனம் என்று சொல்லப்படுகிறது. உணர்ச்சி மிக்க செயல்பாடு, மந்தம், […]
ரமணர் மேற்கோள் 16
ரமணர் மேற்கோள் 16 தினம் தினம் பகவானுடன் மே 15, 1946 எல்லா சந்தோஷத்தையும் விட அதிகமாக, கற்பனையில் இருப்பதற்குள் மிக உச்சமான, மேன்மையான இன்பம் எதுவோ அதை நீங்கள் அடையலாம். இல்லை, நீங்கள் அந்த இன்பமாகவே உறைவீர்கள். உங்களது உண்மைத் தன்மையில் நீங்கள் ‘பரிபூரண ஆனந்தம்’. சாதாரணமாக சொல்லப்படும் ‘இன்பம்’, ‘மகிழ்ச்சி’, ‘சந்தோஷம்’, ‘பேரின்பம்’ – இவையெல்லாம் அந்த பரிபூரண ஆனந்தத்தின் எதிரொளிப்பு தான்.