ரமணர் மேற்கோள் 17
ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்
உரையாடல் 100
மனதின் குணங்கள் வெளியில் விளங்கும் பொருள்களாக உருவம் கொள்கின்றன. குணங்களின் மீது பிரதிபலிக்கும் ஒளி, பொருள்களை ஒளிர்விக்கின்றது. மனதின் குணங்களை கவனிக்காமல், அவற்றை ஒளிர்விக்கும் ஒளியைத் தேடுங்கள். மனம் அசையாது அமைதியாக நிற்கும். ஒளி தன்னால் தானே ஒளிர்ந்தபடி விளங்கும்.
உணர்ச்சி மிக்க செயல்பாடு, மந்தம், இவை இரண்டால் அலைபாயும் மனம் தான் சாதாரணமாக மனம் என்று சொல்லப்படுகிறது. உணர்ச்சி மிக்க செயல்பாடு, மந்தம், இவை இரண்டும் இல்லாத போது, மனம் தூய்மையாக, தானே ஒளிர்ந்து விளங்குகிறது. இது தான் ஆன்ம ஞானம், முக்தி. எனவே இதைப் பெற மனம் தான் மூலம், வழிவகை, வழித்துணை என்று சொல்லப்படுகிறது.
ரமணர் மேற்கோள் 17