ரமணர் மேற்கோள் 24
ரமணரின் அருள் மொழிகள், நான் யார்?
பேரின்பம் என்பது ஆன்மாவே தான். பேரின்பமும் ஆன்மாவும் வெவ்வேறில்லை. அவை ஒன்றே தான். அது மட்டுமே மெய். இந்த சாதாரண உலகில் உள்ள எண்ணிலடங்காத பொருள்களில் ஒன்றில் கூட சந்தோஷம் என்பது கிடையாது. ஆழ்ந்த அறியாமையாலும், அறிவின்மையாலும் நாம் அவற்றிலிருந்து இன்பம் வருவதாக எண்ணி கற்பனை செய்துக் கொள்கிறோம். அதற்கு எதிராக, நமது மனம் வெளிப்புறத்தில் செல்லும்போது, துன்பமும் துயரமும் கொண்டு அவதிப் படுகிறது.
ரமணர் மேற்கோள் 24