Skip to main content

ரமணர் மேற்கோள் 15

ரமணர் மேற்கோள் 15

ரமணர் மேற்கோள் 15   ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 199 உலகம் உண்மை என்று சொல்பவர்களுக்கும், அதற்கு எதிராக உண்மையில்லை என்று சொல்பவர்களுக்கும் கடவுள் ஒன்றே தான். அவர்களது நோக்கம் வேறு, அவ்வளவு தான். இத்தகைய வாத விவாதங்களில் நீங்கள் சிக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் குறிக்கோள் ஒன்று தான் – தமது உண்மையான தன்மையை அறிதல். அதை கவனியுங்கள்.

ரமணர் மேற்கோள் 14

ரமணர் மேற்கோள் 14

ரமணர் மேற்கோள் 14 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 532 பக்தர்: இந்த உலகத்தின் துயரங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள வழியே கிடையாதா? ரமணர்: ஒரே ஒரு வழி தான் உள்ளது. அது என்னவெனில், எந்த சூழ்நிலையிலும் தனது உண்மைத் தன்மையை, தனது ஆன்மாவை ஒரு போதும் கவனத்திலிருந்து அகலாமல் பார்த்துக் கொள்வது தான்.

ரமணர் மேற்கோள் 13

ரமணர் மேற்கோள் 13

ரமணர் மேற்கோள் 13   பக்தர்: யோசனை செய்யாமல் இருப்பது மிகவும் கஷ்டம். ரமணர்: நீங்கள் யோசனை செய்வதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. எண்ணங்கள் எங்கிருந்து எழுகின்றன என்று அவற்றின் மூலத்தைப் பற்றி யோசனை செய்யுங்கள். அதைத் தேடி கண்டு பிடியுங்கள். அங்கு ஆன்மா தானாகவே ஒளிர்ந்து விளங்கும். அதை கண்டுபிடித்துக் கொண்ட பின் எண்ணங்கள் தானாகவே நின்று விடும். அது தான் பந்தத்திலிருந்து உண்மையாக விடுபடுவதாகும்.

ரமணர் மேற்கோள் 12

ரமணர் மேற்கோள் 12

ரமணர் மேற்கோள் 12   பக்தர்: வெளியுலகில் கடவுளைப் பற்றி நினைப்பது எளிதாக இருக்கிறது. ஆனால் எண்ணங்கள் இல்லாமல் இருப்பது கடினமாக தோன்றுகிறது. ரமணர்: அது அபத்தம்; மற்ற பொருள்களைப் பார்ப்பது எளிது, உள்ளே பார்ப்பது கடினம் !! உண்மை இதற்கு எதிர்நிலையாக இருக்க வேண்டும். பக்தர்: எனக்குப் புரியவில்லை. அது கஷ்டம் தான். ரமணர்: ‘இது கஷ்டம்’ என்ற இந்த எண்ணம் தான் முதன்மையான தடங்கல். சிறிதளவு பயிற்சி உங்களை வேறு விதமாக நினைக்க வைக்கும். […]

ரமணர் மேற்கோள் 11

ரமணர் மேற்கோள் 11

ரமணர் மேற்கோள் 11 பக்தர்: ஆன்மீக ஆர்வமுள்ளவர் தமது வேலையை எப்படி செய்ய வேண்டும்? ரமணர்: செயல்கள் செய்பவருடன் தம்மை  இணைத்துக் கொள்ளாமல் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் ‘பாரீஸ்’ நகரில் இருந்த போது, இந்த இடத்திற்கு வருவதைப் பற்றி திட்டமிட்டீர்களா? பக்தர்: இல்லை! ரமணர்: எனவே, உங்களுடைய உத்தேசம் இல்லாமலே நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்று பார்த்தீர்களா? ஒரு மனிதரால் ஏதாவது ஒன்று செய்யாமல் இருக்க முடியாது என்று ‘பகவத் கீதை’ உறைக்கிறது. ஒருவருடைய பிறப்பின் […]

ரமணர் மேற்கோள் 10

ரமணர் மேற்கோள் 10

ரமணர் மேற்கோள் 10 ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் உரையாடல் 532 “நான் யார் ?” என்று விசாரணை செய்வது ஒன்று தான் இந்த உலகத்தின் எல்லா தீவினைகளுக்கும், இன்னல்களுக்கும் மருந்தும் பரிகாரமும் ஆகும். மேலும் அது தான் பூரண பேரின்பமும் ஆகும்.

ரமணர் மேற்கோள் 9

ரமணர் மேற்கோள் 9

ரமணர் மேற்கோள் 9   எல்லோரும் தமக்கு மகிழ்ச்சி அளிப்பது எதுவோ அதை நாடித் தான் செல்வார்கள். நீங்கள் சந்தோஷம் ஏதாவது ஒரு பொருளிலிருந்து வருவதாக எண்ணிக் கொண்டு அதைத் துரத்திச் செல்கின்றீர்கள். புலன்களின் மூலம் வருவதாக நீங்கள் நினைக்கும் இன்பம் உள்பட எல்லா இன்பமும் உண்மையில் எங்கிருந்து வருகிறது என்று பாருங்கள். அப்போது எல்லா இன்பமும் உள்ளடங்கிய ஆன்மாவிலிருந்து தான் வருகிறது என்று அறிந்துக் கொள்வீர்கள். அதன் பிறகு நீங்கள் எப்போதும் ஆன்மாவின் ஆழ்நிலையில் உறைவீர்கள்.

ரமணர் மேற்கோள் 8

ரமணர் மேற்கோள் 8

ரமணர் மேற்கோள் 8 ரயில் வண்டியில் செல்லும் ஒருவர், முட்டாள்தனத்தினால், பயண உடைமைகளின் சுமையைத் தமது தலையின் மீது வைத்து சுமந்துக் கொண்டிருப்பார். அவர் சுமையை கீழே வைக்கட்டும்; பிறகும் சுமை சேருமிடத்தை தானாகவே சேர்ந்து விடும். அதே போல், நாம் தான் செய்பவர்கள், கருமகர்த்தா என்று வேஷம் போடாமல், நமக்கு வழிகாட்டும் சக்தியிடம் சரணடைவோம்.

ரமணர் மேற்கோள் 7

ரமணர் மேற்கோள் 7

ரமணர் மேற்கோள் 7   யோசனை செய்துக் கொண்டே இருக்கும் நமது பழக்கம் யோசனை செய்யாமல் இருப்பது கடினம் என்று நம்மை நம்ப வைக்கிறது. இது தவறு என்று தெரிந்துக் கொண்டால், எவரும் அநாவசியமாக, முட்டாள்தனமாக, எண்ணங்களில் ஈடுபட்டு தம்மை சிரமப்படுத்திக் கொள்ள மாட்டார்.

ரமணர் மேற்கோள் 6

ரமணர் மேற்கோள் 6 எண்ணங்களின் கட்டுப்பாடின்றி பந்தமின்றி இருங்கள். எதையும் பிடித்துக் கொள்ள வேண்டாம். அவை உங்களை பிடித்துக் கொள்வதில்லை. உங்களது சுய நிலையில் உறையுங்கள்.

ரமணர் மேற்கோள் 5

ரமணர் மேற்கோள் 5

ரமணர் மேற்கோள் 5 மகரிஷி: நீங்கள் தன்னிச்சையாக செய்தாலும் செய்யாவிட்டாலும் காரியங்கள் தன்னால் நடைபெற்று வரும். வேலைகள் தானாகவே முடிவடையும். ஆன்மாவின் மீது கவனம் செலுத்துவதில், செயல்கள் மீது கவனம் செலுத்துவதும் அடங்கியுள்ளது. பக்தர்: வேலையின் மீது கவனம் செலுத்தாவிட்டால் அது சரியாக நடைபெறாமல் போகலாம். மகரிஷி: நீங்கள் உமது உடலுடன் ஐக்கியமாகி இருப்பதால், வேலை உம்மால் நடத்தப் படுவதாக நினைக்கிறீர்கள். ஆனால், வேலைகள் உள்பட, உடம்பும் அதன் நடவடிக்கைகளும், உமது தன்னிலையான ஆன்மாவை விட்டு அகன்று […]

 
↓
error: Content is protected !!