
ரமணர் மேற்கோள் 11
பக்தர்: ஆன்மீக ஆர்வமுள்ளவர் தமது வேலையை எப்படி செய்ய வேண்டும்?
ரமணர்: செயல்கள் செய்பவருடன் தம்மை இணைத்துக் கொள்ளாமல் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் ‘பாரீஸ்’ நகரில் இருந்த போது, இந்த இடத்திற்கு வருவதைப் பற்றி திட்டமிட்டீர்களா?
பக்தர்: இல்லை!
ரமணர்: எனவே, உங்களுடைய உத்தேசம் இல்லாமலே நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்று பார்த்தீர்களா? ஒரு மனிதரால் ஏதாவது ஒன்று செய்யாமல் இருக்க முடியாது என்று ‘பகவத் கீதை’ உறைக்கிறது. ஒருவருடைய பிறப்பின் நோக்கம் அல்லது குறிக்கோள் அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நிறைவேறி விடும்.
பிறப்பின் நோக்கம் தன்னால் நிறைவேற விடுங்கள்.
ரமணர் மேற்கோள் 11